search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அல்போன்ஸ்"

    தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை விரைவில் கிடைக்கும் என்று நாடாளு மன்றத்தில் மத்திய மந்திரி அல்போன்ஸ் தெரிவித்தார். #KJAlphons #HelicopterTourism #Tamilnadu
    புதுடெல்லி:

    சுற்றுலா பயணிகளை ஊக்கும்விக்கும் வகையில் மத்திய அரசு ‘பவான் ஹன்ஸ் லிமிடெட்’ என்னும் ஹெலிகாப்டர் சேவையை நடத்தி வருகிறது. இத்தகைய சேவை ஏற்கனவே இமாசலபிரதேசம், சிக்கிம், டையு மற்றும் டாமன், அந்தமான் மற்றும் நிகோபார் மற்றும் அசாம் மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    சுற்றுலாப் பயணிகளுக்கான இந்த ஹெலிகாப்டர் சேவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் இச்சேவையை தொடங் குவது குறித்த சாத்தியக் கூறு ஆய்வு ஒன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

    இதுபற்றி நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் கூறியதாவது:-

    மத்திய அரசு நிறுவனமான பவான் ஹன்ஸ் தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிய ஆய்வை தமிழக அரசுடன் இணைந்து மேற்கொண்டது.

    சுற்றுலா பயணிகளுக்கான இந்த சேவையை குறிப்பாக மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொடங்குவது குறித்த வாய்ப்புகள் இதில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முதல் கட்ட அறிக்கை மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்துக்கு விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #KJAlphons #HelicopterTourism #Tamilnadu #tamilnews 
    ரோம் நகரில் உள்ள கொலோசியத்தை செருப்பு தயாரிக்கும் நிறுவனம் பராமரிக்கும் போது, தாஜ்மகாலை தனியார் வசம் ஒப்படைப்பதில் என்ன தவறு என மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கே.ஜே. அல்போன்ஸ் பேசியுள்ளார். #TajMahal #KJAlphons
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பராமரிக்கும் பணியை மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, சுமார் 95 நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலும் ஒன்றாகும்.

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கே.ஜே. அல்போன்ஸ், இந்த திட்டத்தின் மூலம் நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத்தளங்களை பராமரிக்கவும், விரிவுபடுத்தி பாதுகாக்கவும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது மத்திய சுற்றுலாத்துறையின் முக்கிய கொள்கைகளில் ஒன்று எனவும் தெரிவித்தார்.



    மேலும், டெல்லியில் உள்ள செங்கோட்டை பகுதியை தனியார் சிமெண்ட் நிறுவனம் பராமரித்து வருவதை மேற்கோள் காட்டிய மத்திய மந்திரி கே.ஜே.அல்போன்ஸ், இத்தாலி நாட்டில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான கொலோசியத்தை செருப்பு தயாரிக்கும் நிறுவனம் பராமரித்து வரும் நிலையில், தாஜ்மகாலை தனியாரிடம் ஒப்படைப்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார்.

    மத்திய சுற்றுலாத்துறை மந்திரியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய திருநாட்டின் அடையாளமாக விளங்கும் நினைவுச் சின்னங்களை வணிக நோக்கத்துடன் தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த திட்டத்துக்கு கண்டனங்களும் வலுக்கத் துவங்கியுள்ளது.

    சமீபத்தில் தாஜ்மகாலை பராமரிப்பதில் உத்தரப்பிரதேச அரசு முறையாக செயல்படவில்லை எனவும், தாஜ்மகாலை பராமரிப்பதற்கான எந்தவித திட்டமும் மாநில அரசிடம் இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #TajMahal #KJAlphons
    ×