search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 190427"

    • அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
    • நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.

    ஓசூர்,

    மத்திய அரசின் உறுதிமொழிக்குழுவின் தலைவராக, முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.யுமான தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவரை, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செய லாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி நேற்று ஓசூரில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும், மேற்கு மாவட்ட துணை செயலாளர் கே.மதன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலா ளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் பிரிவு செயலாளர் சென்னகிருஷ்ணன், வட்ட செயலாளர் குபேரன் என்ற சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் தம்பிதுரைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • அனைவர் வாழ்விலும் அனைத்து செல்வங்களும் பெற்று, வளமான வாழ்வு கிடைக்கட்டும்.
    • புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மகத்தான நன்நாள் தீபாவளி திருநாள்.

    நாகர்கோவில்:

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மகத்தான நன்நாள் தீபாவளி திருநாள்.தர்மத்தை காக்க, அதர்மத்தை அழிக்க இறைவன் மகா விஷ்ணு தோன்றி நரகாசுரன் என்னும் அரக்கனை அழித்த திருநாளே தீபாவளி திருநாளாகும். இத்திருநாள் ஒளி மயமான எதிர்காலத்தை நமக்கு வழங்கட்டும். அனைவர் வாழ்விலும் அனைத்து செல்வங்களும் பெற்று, வளமான வாழ்வு கிடைக்கட்டும். அ.தி.மு.க. 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சிகரமான இவ்வாண்டில் காணுகின்ற தீபாவளி திருநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

    அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • ரூ.50 ஆயிரம் மதிப்பில் விலையில்லா மளிகை தொகுப்புகள் வழங்கல்.
    • தூய்மை பணியை பாராட்டி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் பணிபுரியும் பாதாள சாக்கடை திட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் பணியை கவுரவிக்கும் வகையில் தீபாவளியை முன்னிட்டு அவர்களுக்கு தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் 18 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய விலையில்லா மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டது.

    தஞ்சை ரெயிலடி அருகே உள்ள பாதாள சாக்கடை திட்ட தூய்மை பணியாளர்கள் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சுமார் 50 பாதாள சாக்கடை திட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் விலையில்லா மளிகை தொகுப்புகளை வழங்கினார்.

    மேலும், அவர்கள் நகரை தூய்மையாக வைத்திருக்க முகம் சுளிக்காமல் செய்யும் தூய்மை பணியை பாராட்டி தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பாதாள சாக்கடை திட்ட தூய்மை பணியாளர்களின் மேலாளர் மனோகரன், கண்காணிப்பாளர் சாமிநாதன், மாநகராட்சி கவுன்சிலர் உஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதால் சிறப்பான முறையில் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • வழி நெடுகிலும் வரவேற்பு பதாகைகள், கட்சி கொடிகள் கட்டப்பட்டு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், பல்லடம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.லட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர். விந்தியா மற்றும் திருப்பூர் சாய்பாபா நகர் கே.சுப்பிரமணியன்- விஜயலட்சுமி தம்பதியரின் மகன் பிரவீன் ஆகியோர் திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6மணிக்கு பொங்கலூர் அருகே உள்ள சாந்தி மகாலில் திருமண வரவேற்பு விழா நடக்கிறது.

    விழாவில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதால் அவரை சிறப்பான முறையில் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர் வரும் வழி நெடுகிலும் வரவேற்பு பதாகைகள், கட்சி கொடிகள் கட்டப்பட்டு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருமண மண்டபத்திற்கு செல்லும் முன் பகுதியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, அமைப்புச் செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பல்லடம் முன்னாள் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் உள்பட முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இதனால் வாகன நிறுத்தும் இடத்திற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொங்கலூர் பகுதிக்கு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதால் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி வருகையால் பொங்கலூர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
    • முதன்மை கல்வி அலுவலரிடம் வாழ்த்து பெற்றனர்.

    ராமநாதபுரம்

    தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந்தேதி மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்ட தேர்வுக்குழு பரிந்துரைத்த 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

    மண்டபம் ஒன்றியம் தாமரைக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் காளிதாஸ், பரமக்குடி ஆயிரவைஸ்ய மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் மணி முத்து, பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் முத்துக்குமார், முகுளத்தூர் செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை தமயந்தி, பரமக்குடி கே.ஜே. கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் ஜஹாங்கீர் உசேன், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை உமா தேவி, பரமக்குடி ஒன்றியம் பரளை நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மணிகண்டன், கடலாடி ஊராட்சி ஒன்றியம் சின்ன ஏர்வாடி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் செல்வநாயகபுரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்ய ஜோசப்ராஜ், கடலாடி ஊராட்சி ஒன்றியம் எம்.கரிசல்குளம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வீரமாளி, திருப்புல்லாணி ஒன்றியம் ரகுநாதபுரம் கண்ணபுரம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பிரீத்தா ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலாஜி (ராமநாதபுரம்), முருகம்மாள் (மண்டபம்), சாந்தி (பரமக்குடி) ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.

    • சாயல்குடி மேற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் இல்ல திருமண விழா நடந்தது.
    • இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    சாயல்குடி

    சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் இல்ல திருமண விழா நடந்தது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு மணமக்கள் வெற்றி சூர்யா- பொறியாளர் தமிழ்வாணன் ஆகியோரை நேரில் வாழ்த்தினார்.

    தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய கவுன்சிலர் பார்வதி பொறியாளர்கள் சிவா, மணிமாறன், இளமாறன், ராஜ்குமார், எஸ். தரைக்குடி ஊராட்சி தலைவர் முனியசாமி, தி.மு.க. மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் ராணி, ஒன்றிய மாணவரணி, செயலாளர் நாகரத்தினம், ஆர்.சி.புரம் தி.மு.க. கிளைச்செயலாளர் பிரான்சிஸ், முன்னாள் வாலிநோக்கம் ஊராட்சி தலைவர் வகிதா சகுபர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • தமிழ்க் கல்வித் துறை தலைவர் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் வாழ்த்துரை வழங்கினார்.
    • வெளியீட்டு விழா பல்கலைக்கழக மாணவர்களின் பறை இசையோடு தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள பனுவல் அரங்கில் நாட்டுப்புறவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சீமான் இளையராஜா எழுதிய "பன்முக ஆளுமை அயோத்திதாச பண்டிதர்", "பவுத்தப் பண்டிகைகள்" என்ற இரு நூல்களின் வெளியீட்டு விழா பல்கலைக்கழக மாணவர்களின் பறை இசையோடு தொடங்கியது.

    விழாவிற்கு துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் தலைமை தாங்கினார்.

    கலைப்புல முதன்மையர் பேராசிரியர் இளையாப்பிள்ளை வரவேற்றார்.

    அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை தலைவர் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவின் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.சிந்தனைச் செல்வன் நூலினை வெளியிட பாரத் கல்விக் குழுமத்தின் செயலர் புனிதா கணேசன் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் தியாகராஜன், நாட்டுப்புறவியல் துறைத்தலைவர் காமராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வெளிநாட்டில் எதிர்பாராமல் இறப்பவர்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என ஈமான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் தெரிவித்துள்ளார்.
    • பல்வேறு பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    கீழக்கரை

    ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 வருடத்திற்கான உயரிய கோல்டன் விசாவானாது தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா காலகட்டம் மற்றும் பல்வேறு சமயங்களில் சமூக சேவையில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஹுமானிடேரியன் பயனிர் என்ற கோல்டன் விசா அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது.

    மனிதநேயத்திற்கான இந்த விசாவை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த துபாய் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசினுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கி உள்ளது. அமீரகத்தில் மனித நேயத்திற்கான அங்கீகாரம் பெற்று கோல்டன் விசா பெற்ற கீழக்கரையை சேர்ந்த ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் கீழக்கரை வந்தார்.

    கீழக்கரை நகர்மன்ற அலுவலகத்தில் சேர்மன் செஹனாஸ் ஆபிதா, தி.மு.க. நகர் செயலாளர் பசீர் அஹமது, கீழக்கரை மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    முன்னதாக கீழக்கரை தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்- நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஏற்பாட்டில் நகர் எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் கூறியதாவது:-

    அமீரகத்தில் அரசின் அங்கீகாரம் பெற்று இயங்கிக் கொண்டிருக்கும் ஈமான் அமைப்பு தலைவர் பி.எஸ்.எம் ஹபிபுல்லா கான் ஆலோசனைையின் பேரில், அனைத்து சமுதாய மக்களுக்கும் பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து மக்கள் மத்தியில் பாராட்டுதலை பெற்று வருகிறது.

    அமீரகத்தில் எதிர்பாராத விதமாக இறந்து போகும் தமிழ் தொழிலாளர்களின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்துள்ளோம். இது தவிர மருத்துவ, கல்வி உதவியும் தொடர்ந்து செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய தி.மு.க. நிர்வாகிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
    • செயலாளராக குருவித்துறை பசும்பொன்மாறன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சோழவந்தான்

    தமிழகம் முழுவதும் புதிதாக தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக குருவித்துறை பசும்பொன்மாறன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அவருக்கு சோழவந்தான் பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின், பேரூர் இணைச் செயலாளர் செல்வராணி ஜெயராமச்சந்திரன், முத்து செல்வி சதீஷ், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், செந்தில், ஊத்துக்குளி செந்தில், கவுன்சிலர்கள் உள்பட பலர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • செயற்கை கோளுக்கு மென்பொருள் தயாரித்து திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மாணவிகளை வாழ்த்தினார்.

    திருமங்கலம்

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ சார்பில் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் புதிய செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டின் மூலம் செலுத்தப்பட்ட ஆசாதி சாட் எனப்படும் செயற்கை கோளை தயாரிக்க நாடு முழுவதும் 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் 10 மாணவிகளைக் கொண்டு செயற்கைக்கோள் மென்பொருள்களை தயாரிப்பதற்காக இஸ்ரோ தேர்வு செய்தது.

    இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவிகள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு செயற்கை கோளுக்கான மென்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதால் அவர்கள் ஸ்ரீஹரிகோட்டா சென்று வந்தனர்.

    முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்து மாணவிகளை பாராட்டினார். இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டினர்.

    மேலும் ஒன்றிய அளவில் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும் பாராட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் தன்ராஜ், சிவசுப்பிரமணி, மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் சரவணபாண்டி, மகேந்திரபாண்டி, சிங்கராஜ் பாண்டியன், வாகைகுளம் சிவசக்தி, மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் தமிழ்ச்செல்வம், திருப்பதி, ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அன்பழகன், நிர்வாகிகள் ஆண்டிச்சாமி, காசி, விஜி, தலைமை ஆசிரியர் கர்ணன், ஆசிரியைகள் சந்தியா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஸ்ரீதேவி சண்முகபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்திவேலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக சேலம் பகுதியை சேர்ந்த ராஜா ரணவீரன் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார்.
    • இதில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு டி.எஸ்.பி ராஜா ரணவீரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக சேலம் பகுதியை சேர்ந்த ராஜா ரணவீரன் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார்.

    அதேபோல் அனைத்து அரசியல் கட்சியினரையும், பொதுமக்களையும், வணிக நிறுவனங்களை சேர்ந்த வியாபாரிகளையும் ஒரே போல் அரவணைத்து பணியாற்றி வந்தார். இந்நிலையில் பரமத்தி வேலூர் பகுதிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் டி.எஸ்.பி ராஜா ரணவீரன் பணி மாறுதல் செய்யப்பட்டார்.பணி மாறுதல் காரணமாக செல்லும் அவருக்கு பாராட்டு மற்றும் வழி அனுப்பு விழா நடை பெற்றது. இதில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு டி.எஸ்.பி ராஜா ரணவீரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • டெக்பா சங்க நிர்வாகிகள் அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    • வர்த்தக வாரிய உறுப்பினராக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர்:

    மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வர்த்தக வாரிய உறுப்பினராக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து, பின்னலாடை தொழில் அமைப்பு பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம், மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார், பொருளாளர் ஞானகுரு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன், பொருளாளர் மாதேஸ்வரன், டெக்பா சங்க தலைவர் ஸ்ரீகாந்த் உட்பட நிர்வாகிகள் ராஜாசண்முகத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள், இ.பி.சி.ஜி., திட்டத்தில், வரியின்றி மெஷின்களை இறக்குமதி செய்வதில் நீடிக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணவேண்டும். மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகங்களின் (டி.ஜி.எப்.டி.,) கவனத்துக்கு கொண்டுசென்று இக்கோரிக்கையை நிறைவேற்றித்தரவேண்டும்என டெக்பா சங்க நிர்வாகிகள் அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    ×