search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலவானம்"

    பல ஆண்டுகளுக்கு பின்னர் பூமியை செவ்வாய் கிரகம் மிக அருகாமையில் நெருங்கி வருவதால் இம்மாதம் 30,31 தேதிகளில் நீலவானம் செந்நிறமாக மாறப்போகும் எழில் கோலத்தை கண்டு ரசிக்கலாம்.
    ஐதராபாத்:

    சந்திரனுக்கு அடுத்தபடியாக விண்வெளித்துறை ஆய்வில் உலக நாடுகளின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ள கிரகமாக செவ்வாய் விளங்குகிறது. இந்தியாவும் தனது பங்குக்கு ‘மங்கல்யான்’ செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்னர் வரும் 30,31 தேதிகளில் பூமியை செவ்வாய் கிரகம் மிக அருகாமையில் நெருங்கி வருவதால் அப்போது நீலவானம் செந்நிறமாக மாறப்போகும் எழில் கோலத்தை கண்டு ரசிக்கலாம் என ஐதராபாத்தில் உள்ள பிர்லா அறிவியல் மைய இயக்குனர் டாக்டர் பி.ஜி. சித்தார்த் தெரிவித்துள்ளார்.


    செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகள் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தில் சுமார் 20 கிலோ அகலம் கொண்ட குளிர் ஏரியை கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    பலகோடி ஆண்டுகளாக உறைநிலை படலமாக இருந்த செவ்வாயில் இந்த ஆய்வின் மூலம் உயிரினங்கள் உருவாகும் சாத்தியக்கூறுகள் உண்டா? என்பது சந்தேகம்தான். எனினும், செவ்வாயின் சுற்றுப்பகுதியில் நடத்திய நுண்ணுயிரியல் ஆய்வுகள் அதை உறுதிப்படுத்தவில்லை.

    ஆனால், அறிவியல்சார்ந்த நம்பிக்கைகளுக்கு மாறாக இந்த பிரபஞ்சத்தின் முதல் வாழ்க்கைகான அஸ்திவாரம் செவ்வாய் கிரகத்தில்தான் தோன்றி இருக்க வேண்டும். எனவே, நமது அடுத்தகட்ட விண்வெளி முகாம்களுக்கும், குடியிருப்புகளுக்கும் செவ்வாய்தான் சிறந்த இடமாக இருக்க முடியும். இதற்கு அங்கு காணப்படும் திரவ நீரும் நமக்கு மிக சிறந்த சாதகமான அம்சமாக அமைந்துள்ளது எனவும் டாக்டர் சித்தார்த் சுட்டிக்காட்டியுள்ளார். #Marscomes #closesttotheearth
    ×