search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தினகரன்"

    • தென்காசி வடக்கு மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடையநல்லூரில் நடந்தது
    • தினகரனுக்கு கே.டி.சி. நகரில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் தென்காசி வடக்கு மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடையநல்லூர் நகர அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஹைதர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் சுமதி, துணைச் செயலாளர்கள் கோமதி, அருணகிரி சாமி, சுப்பிரமணியசுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் வேல்சாமி பாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திர மூர்த்தி என்ற வினோத் சிறப்புரையாற்றினார்.

    வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு நெல்லை வழியாக வருகை தரும் பொதுச்செயலாளர் தினகரனுக்கு கே.டி.சி. நகரில் தென்காசி வடக்கு மாவட்டத்தின் சார்பில் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிப்பது,

    வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, பேரூர், ஒன்றிய, கழகத்துக் உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அதிக அளவு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை அடையாற்றில் உள்ள டிடிவி தினகரன் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #TTVDhinakaran
    சென்னை:

    அடையாறு கற்பகம் அவென்யூ பகுதியில் டி.டி.வி. தினகரன் வசித்து வருகிறார். அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கப்பட்ட பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை நடத்தி வரும் இவர் தனது வீட்டிலேயே நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார்.

    தமிழகம் முழுவதும் தனது புதிய கட்சிக்கு பொறுப்பாளர்களையும் தினகரன் நியமித்துள்ளார். அவர்கள் தினகரனை சந்திப்பதற்காக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு தினமும் வருகிறார்கள்.

    இதனால் தினகரன் வீடு இருக்கும் பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

    இந்த நிலையில் இன்று காலை டி.டி.வி.தினகரன் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் திடீரென குண்டு வெடித்தது. இதில் காரின் கண்ணாடிகள் வெடித்து சிதறின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டு முன்பு நின்றிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினார்கள்.

    இந்த குண்டு வெடிப்பில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    தினகரன் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகி ஒருவர் சமீபத்தில் நீக்கப்பட்டுள்ளார். குண்டு வெடித்த கார் அவருக்கு சொந்தமானதாகும். காரில் வெடித்தது நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எந்த நோக்கத்திற்காக தினகரன் ஆதரவாளர் காரில் வெடி குண்டை எடுத்து வந்தார் என்பது உடனடியாக தெரியவில்லை.

    தினகரன் வீட்டு மீது வெடி குண்டை வீசி அவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

    காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் குண்டு வெடிப்பு பின்னணி குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
    ×