என் மலர்
நீங்கள் தேடியது "பணம் கேட்டு மிரட்டல்"
- தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
- வாலிபர்கள் 2 பேரும் அந்த பெண்ணை மிரட்டி கூட்டுபாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை ேசர்ந்த 40 வயது பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். அந்த பெண் கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
சம்பவத்தன்று கள்ளக்காதல் ேஜாடி மரக்காணம் அருகே உள்ள தைலமர தோப்பில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு மரக்காணம் பகுதியை சேர்ந்த எழில் பரதன் மற்றும் அவரது நண்பரும் அங்கு வந்தனர். பின்னர் அந்த வாலிபர்கள் 2 பேரும் அந்த பெண்ணை மிரட்டி கூட்டுபாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அதனை செல்போனில் வீடியோவும் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னையும், உனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் என அந்த பெண்ணை மிரட்டினர். இதனால் பயந்துபோன அந்த பெண், தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் சொல்லவில்லை.
இதை சாதகமாக பயன்படுத்திய, எழில்பரதன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி, அந்த பெண்ணை தனியாக வரவழைத்து அடிக்கடி பாலியல் பாலாத்காரம் செய்து, பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண் பணம் கொடுக்காததால் ஆபாச வீடியோவை எழில்பரதன் வாட்ஸ்-அப்பில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. நாளுக்குநாள் அவர்களின் தொல்லை அதிகரிக்கவே அந்த பெண் கோட்டக்குப்பம் போலீசில் இது தொடர்பாக புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழில்பரதன் மற்றும் அவரது நண்பரை தேடிவந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் அப்படையில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரியாபட்டி அருகே கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி பொக்லைன் எந்திரத்துக்கு தீவைக்கப்பட்டது.
- இது தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மேலகல்லங்குளம் கிராமத்தில் பிரதீப் என்பவருக்கு சொந்தமாக கல்குவாரி உள்ளது. இங்கு மதுரை மாவட்டம் சக்குடி வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்தமுருகன்(40) என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில வாரங்களாக அதே பகுதியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், கடம்ப வனம், அய்யனார் என்ற கோசி மணி உள்பட 4 பேர் வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் ஆனந்தமுருகன் பணம் தரமுடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார்.
தொடர்ந்து 4 பேர் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். சம்பவத்தன்று கல்கு வாரிக்கு வந்த அவர்கள் ஆனந்த முருகனிடம் தகராறு செய்து பணம் கொடுக்கவில்லை என்றால் பெட்ரோல் குண்டு வீசுவோம் என மிரட்டிய தோடு அங்கு நிறுத்தியிருந்த 2 பொக்லைன் எந்திரத்துக்கு தீவைத்தனர். மேலும் ரூ.22 ஆயிரம் பணத்தையும் அபகரித்து கொண்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாட்சிசுந்தரம், கடம்ப வனம், அய்யனார் என்ற கோசி மணி உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெட்டிக்கடை முதல் தொழிற்சாலை நடத்துபவர்களிடம் சமூகவிரோதிகள் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடும் சம்பவம் அதிகரித்துள்ளது.இதனால் வியாபாரிகள் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.
தினமும் ரவுடிகளுக்கு கப்பம் கட்டும் நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பஸ்சுக்குள் ஏறிய வாலிபர்கள் திடீரென கத்தியை காட்டி பணம் கேட்டு டிரைவரிடம் தகராறு செய்தனர். பயணிகள் சத்தம்போட்டதால் தப்பி ஓடினர்.
- புகாரின்பேரில் போலீசார் வாலிபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஒட்டுப்பட்டியைச் சேர்ந்த ஜெயகாந்தி (வயது 50). இவர் திண்டுக்கல் அரசு பஸ் டிப்போவில் டிரைவ ராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு நில க்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது செங்கோட்டை பிரிவு அருகே 2 வாலிபர்கள் அரசு பஸ்சை வழிமறித்தனர். அவர்கள் பஸ் ஏறுவதற்காக த்தான் கையை காட்டுகின்ற னர் என்று நினைத்து பஸ்சை நிறுத்தினார். பஸ்சுக்குள் ஏறிய அவர்கள் திடீரென கத்தியை காட்டி பணம் கேட்டு டிரைவரிடம் தகராறு செய்தனர். இதனால் அங்கிருந்த பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சத்தம் போட்டனர்.
இதனால் அந்த 2 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்க ட்ராஜிடம் டிரைவர் ஜெய காந்தி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். விசாரணையில் அவர்கள் செங்கோட்டை யைச் சேர்ந்த இமானுவேல் (29) அஜய்குமார் (22) ஆகிேயார் என தெரிய வந்தது.
இதனைத் தொட ர்ந்து சப் இன்ஸ்பெக்டர் அருண்பிர சாத் தலைமை யிலான போலீசார் செங்கோ ட்டைக்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் திண்டு க்கல் சிறையில் அடைக்கப்ப ட்டனர். அரசு பஸ்சிலேயே பயணிகள் இருக்கும் போது கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
- பொய்யான தகவலை கூறி பணம் பறிக்க முயலும் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தின் 27-வது ஆதீனமாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இந்த நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி வினோத், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் ஆகியோர் என்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ, ஆடியோ தங்களிடம் உள்ளது. இதனை சமூக வலைத்தளங்கள், டி.வி சேனல்களில் வெளியிடாமல் இருக்க நாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்தனர். ஏன் பொய்யான தகவல்களை கூறி பணம் பறிக்க ஆசைப்படுகிறீர்கள் என தட்டிக் கேட்டபோது, என் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி செய்தனர்.
இந்த சம்பவத்தில் செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவன தாளாளர் குடியரசு, திருவெண்காடு பா.ஜனதா நிர்வாகி விக்னேஷ், மயிலாடுதுறை மாவட்ட பா.ஜனதா தலைவர் அகோரம், மதுரையை சேர்ந்த ஜெயசந்திரன் ஆகியோர் தூண்டுதலாக உள்ளனர்.
எனவே பொய்யான தகவலை கூறி பணம் பறிக்க முயலும் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில் ஆபாச வீடியோ, ஆடியோ இருப்பதாக கூறி தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வினோத் ( வயது 32), குடியரசு (39 ) , விக்னேஷ் (33), நெய் குப்பத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ( 28 ) ஆகிய 4 கைது செய்தனர். பின்னர் அவர்களை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 4 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் அகோரம், அமிர்த விஜயகுமார், ஆதீனத்தின் உதவியாளர் செந்தில், ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகிய 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் தினமும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் பவானிக்கு செல்லும் பஸ்சில் பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது ஒரு திருநங்கை அந்த பஸ்சிற்கு வந்து அங்கிருந்த பயணிகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த அந்த பஸ்சில் இருந்த மாஜிஸ்திரேட்டு ஒருவர், திருநங்கையிடம் ஏழை, எளிய மக்களிடம் இவ்வாறு பணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என அறிவுரை கூறினார். இதைகேட்காமல் அந்த திருநங்கை மாஜிஸ்திரேட்டிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்தும் சேலம் குகை பகுதியை சேர்ந்த சத்யா (வயது 28) என்ற பெண்ணிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்.
இதைத்தொடர்ந்து சத்யா பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அந்த திருங்கையை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், பெரமனூர் நாகம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்த திருநங்கையான ஜாவீத் (27) என்பதும், பயணியிடம் பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் கைது செய்தார்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர், பிற மாவட்டங்களுக்கு செல்வதற்காக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் பயணிகளிடம் சிலர் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். இரவு நேரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளிடம் தொந்தரவு செய்து வருகின்றனர். எனவே பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
நொய்டாவை சேர்ந்த ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனம் ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக 2016-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. 7 கோடிக்கும் அதிகமானோர் இதில் முன்பதிவு செய்தனர். இந்நிறுவனம் வருமான வரித்துறையினர் சோதனைக்கும் ஆளானது. இந்த கம்பெனியின் நிறுவனர் மொகித் கோயல் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் ஒரு பெண், 5 தொழில் அதிபர்கள் தன்னை கற்பழித்துவிட்டதாக கடந்த மார்ச் மாதம் புகார் செய்திருந்தார். இந்த வழக்கில் அந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த கற்பழிப்பு வழக்கை தீர்த்துவைப்பதாக மொகித் கோயல் உள்பட 3 பேர் டெல்லியில் ஒரு தொழில் அதிபரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டினர். இதுபற்றி அவர் நேதாஜி சுபாஷ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த பணத்தை பெற்றுக்கொள்ள மொகித் கோயல், கற்பழிப்பு புகார் கூறிய பெண் உள்பட 3 பேரும் ஓட்டலுக்கு வந்தபோது போலீசார் அவர்களை கைது செய்தனர். #RingingBells #MohitGoel