search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலகிருஷ்ணன்"

    • தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணியே மெகா கூட்டணியாகவும், வெற்றி கூட்டணியாகவும் இருக்கும்.
    • எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும் கூட்டணி முகவரி இல்லாத கூட்டணியாகவே இருக்கும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு மத்திய அரசு நேரடியாக இலங்கை அரசுடன் பேசி நிரந்தர தீர்வு காண வேண்டும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை உச்சநீதிமன்றம் தானாக விடுதலை செய்துள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்து ள்ளனர்.

    இப்பிரச்சினையில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அதன் மீதான நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது.

    தற்போது 6 பேர் விடுதலை செய்யப்பட்டவுடன் மத்திய அரசு அவசரகதியில் சீராய்வு மனு தாக்கல் செய்வது ஏன்? குஜராத், மகாராஷ்டிராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றபோது குற்றவாளிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. அரசு செயல்பட்டதை மக்கள் மறக்கமாட்டார்கள்.

    தற்போது காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்காக 2 ஆயிரம் கல்லூரி மாணவ-மாணவிகளை கலாச்சார பண்பாடு நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி நடந்து வருகிறது. இதற்கு கவர்னரும் உடந்தையாக உள்ளார்.

    தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழி குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தேவையற்றது என்பதால் அதனை அகற்ற வேண்டும். ஏற்கனவே கல்லூரிகளை ஆர்.எஸ்.எஸ். பயிற்சி கூடமாக மத்திய அரசு மாற்றி வருகிறது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவல் மொழியாக 100 சதவீதம் தமிழை கொண்டுவர அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். அவரது தலைமையில் அமையும் கூட்டணி முகவரி இல்லாத கூட்டணியாகவே இருக்கும். அந்த கட்சியினரால் வெற்றி பெற முடியாது. அவர்கள் மக்கள் மனதை விட்டு அகற்றப்பட்டு விட்டனர்.

    தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணியே மெகா கூட்டணியாகவும், வெற்றி கூட்டணியாகவும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா ஆய்வின் மூலம் விசாரணை.
    • மீதி உள்ள வழக்குகளிலும் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்.

    கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது: கோவை குனியமுத்தூர் பகுதியில் கடந்த 23 ம் தேதி மதியம் ரகு என்ற இந்து முன்னணி பொறுப்பாளர் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது.

    அதே நாள் குனியமுத்தூர் பகுதியில் பாஜக பிரமுகர் பரத் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு வழக்கிலும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு நுண்ணறிவு சேகரிப்பு மற்றும் சிசிடிவி கேமரா ஆய்வின் மூலம் புலன் விசாரணை நடைபெற்றது.

    இந்த வழக்குகளில் மதுக்கரையைச் சேர்ந்த ஜேசுராஜ் (34), குனியமுத்தூரை சேர்ந்த இலியாஸ்(34) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் எஸ்.டி.பி.ஐ கட்சியில் பொறுப்பாளர்களாக உள்ளனர். விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு இவர்கள் அனுப்பப்படுவர்.

    கோவை நகரில் இதுபோன்ற ஆறு வழக்குகளும், ஒரு பஸ் கண்ணாடி உடைப்பு வழக்கும் உள்ளது. மீதி உள்ள வழக்குகளிலும் முன்னேற்றம் உள்ளது. மற்ற குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். கூடிய விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். மேலும் குற்றங்கள் நடக்காமல் இருக்க கண்காணிப்பு படைப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இடையே கொள்கை அடிப்படையிலான தகராறு கிடையாது.
    • அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இடையே கொள்கை அடிப்படையிலான தகராறு கிடையாது. அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு சுலபமாக தீர்ந்துவிடும் என எதிர்பார்க்க முடியாது. அவர்கள் 2 பேரும் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எந்தவித முரண்பாடும் இல்லாமல் செயல்படுகின்றனர். மாநில அரசின் உரிமைகள் பறிபோகும்போது அதற்காக குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை.

    அதிகார போட்டி, பண பலம் ஆகியவற்றால் அவர்களுக்குள் இந்த மோதல் வெடித்துள்ளது. மீண்டும் மோடி அவர்களை கைகுலுக்கி வைத்து ஒன்றுசேர்த்து வைத்தாலும் வைக்கலாம். அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இருந்தபோதும் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அக்கட்சியின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வீடியோவில் தெரிகிறது.
    • வன்முறை கும்பல் கையில் தேசியக் கொடியை ஏந்தி, அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    மதுரையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசி தாக்கி இழிவான அரசியலில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளார்கள். இது கடும் கண்டனத்துக்குரிய செயலாகும்.

    தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய இடத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

    தாக்குதல் நடந்த வீடியோக்களை பார்க்கும்போது எதுவுமே உணர்ச்சிவயப்பட்ட நிகழ்வுகள் அல்ல என்பதும், திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் தெரிகிறது.

    அதுவும் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் கையில் தேசியக் கொடியை ஏந்தி, கொடிக்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.

    அதிகார வெறியோடு கிடைப்பதில் எல்லாம் அரசியல் செய்யும் பாஜகவினர், ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செய்வதில் கூட தங்கள் அரசியல் லாபத்தை மனதில் கொண்டு செயல்பட்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

    இதுவரை தாக்குதல் நடத்திய கும்பலை பாஜக தலைவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக, வன்முறையை மேலும் தூண்டும் விதமாக சமூக ஊடகப் பதிவுகளையே செய்து வருகிறார்கள்.

    எனவே, தமிழ்நாடு காவல்துறை இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    பாஜகவினரின் அரசியல் நாகரீகமற்ற இந்த அராஜகமான வன்முறைச் செயலை பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் கண்டிக்க முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது,

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் விசாரிக்க திருமாவளவன், ஜிகே வாசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கோபாலபுரம் இல்லம் வந்து ஸ்டாலினை சந்தித்தனர். #Karunanidhi #DMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். வயோதிகம் காரணமாக அவர் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தது.

    இந்நிலையில், கருணாநிதியை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.

    அவர்களை தொடர்ந்து, ஜிகே வாசன், திருமாவளவன், கே.பாலகிருஷ்னன் ஆகியோரும் கோபாலபுரம் வந்தனர். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, திருமாவளவன், கே.பாலகிருஷ்னன் ஆகிய இருவரும், ‘கருணாநிதிக்கு காய்ச்சல் மட்டுமே உள்ளது. அதனால், ஓய்வெடுக்கிறார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என கூறினர்.
    ×