search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைநிறுத்தம்"

    • விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி செயலர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்.
    • அனைத்து கிராம ஊராட்சி செயலர்கள் 3 தினங்களுக்கான விடுமுறை விண்ணப்பத்தை அளித்தனர்.

    ராஜபாளையம்

    தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ராமசுப்பு கூறியதாவது:-

    மத்திய-மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களை நேரடியாக மக்களுக்கு கொண்டு சென்று நிறைவேற்றுவது, குடிநீர்-சுகாதாரம் மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படை பணிகளை செய்வது, புள்ளி விவரங்கள் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளை ஊராட்சி செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலர்கள் காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதிய பணி விதிகள் அரசாணையை வெளியிட வேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (12-ந் தேதி) முதல் 14-ந் தேதி வரை 3 நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலர்களும் கோரிக்கைக்காக தொடர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனைத்து கிராம ஊராட்சி செயலர்கள் 3 தினங்களுக்கான விடுமுறை விண்ணப்பத்தை அளித்தனர். அப்போது தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் பாண்டியன், செயலாளர் கண்ணன், பொருளாளர் அருணாசலம், ஒன்றிய தலைவர் ஈஸ்வரன், செயலாளர் தர்மராஜ், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • யூனிட் ஒன்றுக்கு 1.40 ரூபாய் மின் கட்டணம் உயர்த்தி அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • குறைந்தபட்ச கூலியை பெற்று தொழில் செய்கிறோம்.

    திருப்பூர் :

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சோமனூர் சங்க தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது :-

    8 ஆண்டுகளாக ஒப்பந்த படி, கூலி உயர்வு இல்லாமல் விசைத்தறிகளை இயக்கி வருகிறோம்.நூல் விலை உயர்வால் தொழில் முடங்கியுள்ளது.இந்நிலையில், விசைத்தறிகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 1.40 ரூபாய் மின் கட்டணம் உயர்த்தி அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறைந்தபட்ச கூலியை பெற்று தொழில் செய்கிறோம். இதை நம்பி பல்லாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.மின் கட்டணத்தை உயர்த்தினால் விசைத்தறி மற்றும் சார்பு தொழில்கள் முடங்கி விடும். மின் கட்டண உயர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • 150-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
    • அனைத்து குடிநீர் வினியோக பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

    வெள்ளகோவில் :

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள குடிநீர் கலன்களில், குடிநீர் சேமிக்கப்பட்டு ராட்சத குழாய்கள் வழியாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளுக்காக குடிநீர் நீரேற்று நிலையம், குடிநீர் வினியோக மையங்களில் சுமார் குடிநீர் மின் மோட்டார் இயக்குபவர்கள், குடிநீர் வினியோக பணியாளர்கள் மொத்தம் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் அனைவருக்கும் காவிரி குடிநீர் வினியோகம் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் ஆண்டிற்கு ஒரு முறை ஒப்பந்தம் செய்து ரூ.9 ஆயிரத்து 500 முதல் ரூ.16 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை சென்னை தனியார் ஒப்பந்த நிறுவனம் எடுத்த ஒப்பந்தம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு அனைத்து குடிநீர் வினியோக பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் காலக்கெடு கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் கடந்த ஜூலை, ஆகஸ்டு ஆகிய 2 மாதங்களுக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நேரடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் காவிரி குடிநீர் மின் மோட்டார் இயக்குபவர்கள், குடிநீர் வினியோக பணியாளர்கள் அனைவருக்கும் நிலுவையில் உள்ள கடந்த 2 மாத பாக்கி ஊதியம் வழங்கப்படவில்லை.

    இதனால் கடந்த 2 மாத ஊதியத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக வழங்க கோரியும் நாளை 7-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணி முதல் குடிநீர் மின் மோட்டார் இயக்குபவர்கள், குடிநீர் வினியோகம் செய்பவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    • விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது.

    பல்லடம் :

    பல்லடத்தில் திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் முத்துக்குமாரசாமி, கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார், வேலம்பாளையம் தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் பாலாஜி வரவேற்றார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் விசைத்தறிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை அரசு மானியமாக வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழக விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது, முதல்வரின் கவனத்திற்க்கு செல்லும் வகையில் வருகின்ற 8 ந்தேதி திங்கட்கிழமையன்று ஒருநாள் விசைத்தறிகளை அடையாள வேலை நிறுத்தம் செய்து குடும்பத்துடன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மின்கட்டண உயர்வை அரசே மானியமாக வழங்கிடக் கோரி மனு அளிப்பது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், கோபால், பழனிசாமி, பூபதி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து மூன்றாவது நாளாக லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • வேலைநிறுத்தத்தினால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ராயபுரம்:

    வாடகை உயர்த்தி தரக்கோரி கண்டெய்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் துறைமுக ஒப்பந்த கூட்டமைப்பு என்ற பெயரில் அனைத்து அமைப்புகளும் 4ந்தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் துறைமுகங்களில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று சென்னை துறைமுக அதிகாரிகள் தமிழக அரசின் வருவாய்த் துறையினர் காவல் துறையினர் பெட்டக முனைய உரிமையாளர்கள் கண்டெய்னர் துறைமுக ஒப்பந்த கூட்டமைப்பினர் என பல்வேறு அமைப்புகள் அமைப்புகளுடன் சென்னை துறைமுகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து மூன்றாவது நாளாக கண்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இன்று மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து இந்த வேலைநிறுத்தத்தினால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    • ரயான் துணிக்கு இணையாக காட்டன் துணியும் விலை குறைந்துள்ளதால் ரயான் துணி விற்பனை குறைந்துள்ளது.
    • உற்பத்தி நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி பாதிப்பு ஏற்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் உள்பட பல்வேறு இடங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

    தமிழக அரசின் இலவச வேட்டி-சேலை உற்பத்தியில் ஈரோட்டில் மட்டும் 60 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் சமீப காலமாக நூலின் விலை உயர்வு காரணமாக ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல விசைத்தறியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். மேலும் இந்த வருடத்திற்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தி ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. சமீப காலமாக நூலின் விலைக்கு கூட உற்பத்தி செய்யப்பட்ட துணி விலை போகாததால் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

    இதையடுத்து விசைத்தறி உரிமையாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் இன்று முதல் வரும் 10-ந் தேதி வரை ரயான் துணி உற்பத்தியை நிறுத்தம் செய்வதென்று முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் ரயான் துணி உற்பத்தி நிறுத்தம் தொடங்கியது. இதனால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

    இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுரேஷ் கூறியதாவது:-

    கடந்த ஒரு மாதமாக ரயான் நூலின் விலை எவ்வித மாற்றம் இல்லாத போதிலும் 120 கிராம் எடை கொண்ட துணியின் விலை 15 நாட்களுக்கு முன்பு ரூ. 28 ஆக இருந்தது. இப்போது ரூ. 26-க்கு கூட மார்க்கெட்டில் விலைக்கு போகாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி விலையை விட மார்க்கெட்டில் ரயான் துணியின் விலையை குறைத்து கேட்கின்றனர்.

    மேலும் வட மாநிலங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் விற்பனை சரிவடைந்துள்ளது. ரயான் துணிக்கு இணையாக காட்டன் துணியும் விலை குறைந்துள்ளதால் ரயான் துணி விற்பனை குறைந்துள்ளது. இதனால் மீட்டருக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

    இந்த நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை ரயான் துணி உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு அவைகள் மூடப்பட்டுள்ளன.

    மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடோன்களும் மூடப்பட்டுள்ளன. இந்த உற்பத்தி நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி பாதிப்பு ஏற்படும். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஊதிய உயர்வு, நிலுவை தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறாததால் போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது தற்போது நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் போக்குவரத்து தொழிலாளர்கள் சென்னை பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

    போக்குவரத்து கழகத்தில் ஏற்படும் இழப்பை அரசு ஏற்க வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, உரிய ஊதியத்தையும், பதவி உயர்வையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாக இயக்குனர்களுக்கு அனுப்பினோம். இதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் ‘ஸ்டிரைக்’ நோட்டீஸ் கொடுத்தோம்.

    அதன்பிறகு 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய தொழிலாளர் நல அலுவலர்கள் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு வழக்கு நிலுவையில் உள்ளதாக காரணம் கூறிவிட்டனர்.

    இதனால் மண்டல அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் செய்து தொழிலாளர்களுக்கு நிலைமையை எடுத்துக் கூறி உள்ளோம்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் சென்னையில் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் வேலைநிறுத்தம் பற்றி அறிவிக்க இருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலாளர்கள் வரை மொத்தம் 247 பேர் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
    ஊராட்சி செயலாளர்களுக்கு, பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வு கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த உத்தரவிட வேண்டும். 

    பல மாவட்டங்களில், எவ்வித விளக்கமும் கோராமல் ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். காலிப்பணி இடங்களை நிரப்பிட வேண்டும். தனி நபர் இல்ல கழிவறைக்கு வழங்கும் மானியத்தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் ஆகியவை உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று இச்சங்கத்தின் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

     அதன்படி, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலாளர்கள் வரை மொத்தம் 247 பேர் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இதனால் அனைத்து பணிகளும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
    டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
    சென்னை:

    டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அகில இந்திய தரைவழி சரக்கு போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஜிந்தர் சிங், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. குறிப்பாக டீசல் விலை கடந்த 6 மாதத்தில் 7 ரூபாய் 40 காசு அதிகரித்துள்ளது. 3-ம் நபர் காப்பீட்டு தொகை கட்டணமும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சுங்கச்சாவடி கட்டணமும் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது.

    டீசல் விலையை குறைக்க அதனை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், 3-வது நபர் காப்பீட்டு தொகை, சுங்கக் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய பெட்ரோலியத்துறை மந்திரிக்கு கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பி இருந்தோம்.

    இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையும் செய்தோம். எனினும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    எனவே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வேறு வழியின்றி 18-ந் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. தமிழ்நாட்டில் 7 லட்சம் லாரிகள் இயங்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும்.
    சம்பள உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாளை (7-ந் தேதி) இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை நடந்து வருகிறது. 108-க்கு போன் செய்ததும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து முதலுதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.

    ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் 108 ஆம்புலன்ஸ் சேவையை காண்டிராக்ட் எடுத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து நடத்தி வருகிறது.

    ஆனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களுக்கு உரிய சம்பளம் வழங்கவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளுடன் உள்ளனர்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் அவர்கள் நாளை (7-ந் தேதி) இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இது குறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

    108 ஆம்புலன்சில் டிரைவர்கள், டெக்னீசியன்கள், மருத்துவ உதவியாளர்கள், கால்சென்டர் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 17 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 22 ஆயிரமும் வழங்க வேண்டும். ஆனால் அதிகபட்சமாகவே ரூ. 17 ஆயிரம்தான் வழங்குகிறார்கள்.

    வேலை நேரம் 8 மணி நேரம் மட்டுமே. ஆனால் 12 முதல் 14 மணி நேரம் வரை வேலை வாங்குகிறார்கள். 108 ஆம்புலன்சுகளை நிறுத்த சில ஆஸ்பத்திரிகளில் இடம் இல்லை. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்கவும் இடம் இல்லை.

    108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சரியான பராமரிப்பில் இல்லை. அவற்றை பராமரிப்பு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வங்கி ஊழியர்கள் நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
    புதுடெல்லி:

    வங்கி ஊழியர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு வழங்க வங்கிகள் சம்மேளனம் முன்வந்தது. ஆனால் அதை ஊழியர் சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் மே 30-ந்தேதி (நாளை) 31-ந்தேதி ஆகிய 2 நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன.

    இதைத்தொடர்ந்து நேற்று டெல்லி தொழிலாளர் நல அமைச்சகத்தில் மத்திய அரசின் தலைமை தொழிலாளர் நல கமிஷனர் ஏ.கே.நாயக் தலைமையில் நேற்று வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வங்கிகள் சம்மேளன அதிகாரிகளும், மத்திய நிதித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், தேசிய வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் எஸ்.சி.பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதுபற்றி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வங்கிகள் அனைத்தும் அதிக லாபம் ஈட்டுகின்றன. ஆனால் வராக்கடன்களை காரணம் காட்டி வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகிறார்கள். இதன் காரணமாக எங்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. 2 சதவீத ஊதிய உயர்வு எங்களுக்கு போதாது. ஊதிய உயர்வு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதனால் திட்டமிட்டபடி நாளை (புதன்கிழமை) நாளை மறுதினம் (வியாழக்கிழமை) 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில், அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.

    இந்தியாவில் பெரிய முதலாளிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்போது விவசாயக்கடன், கல்விக்கடன்களை தள்ளுபடி செய்வதில் எந்த பாதிப்பும் வங்கிகளுக்கு ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து வருகிற 17-ந் தேதி முடிவு எடுக்க உள்ளனர். #lorrystrike
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் தற்போது ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கச்சாப் பொருட்களின் விலை குறைந்த போதிலும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்புதான் இதற்கு காரணம். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.யில் சேர்க்க மத்திய அரசு மறுத்து வருகிறது.


    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்பட்டு அதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். இதையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாத நிலை இருந்து வருகிறது.

    எனவே பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கக்கூடாது. 6 மாதத்துக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறைதான் சுங்கவரி வசூலிக்க வேண்டும்.

    உயர்த்தப்பட்ட வாகனங்களுக்கான 3-ம் நபர் காப்பீட்டு தொகையை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    வருகிற 17-ந் தேதி டெல்லியில் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடக்கிறது. அதில் எப்போது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு சண்முகப்பா கூறினார். #petrol #diesel #lorrystrike
    ×