என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 192817
நீங்கள் தேடியது "மலையாளம்"
மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், பத்மபிரியா, ரேவதி உள்ளிட்ட பல நடிகைகள் அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட திலீப்பை புதிய தலைவராக பொறுப்பு ஏற்ற மோகன்லால் மீண்டும் சங்கத்தில் சேர்த்ததை கண்டித்து மலையாள நடிகைகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விலகினார்கள்.
நடிகைகள் ரேவதி, பத்மபிரியா உள்ளிட்ட நடிகைகள் மோகன்லால் முடிவை விமர்சித்து கடிதம் அனுப்பினார்கள். மஞ்சுவாரியர் தலைமையில் செயல்படும் பெண்கள் சினிமா கூட்டுக்குழுவும் கண்டித்தது. இந்த நிலையில் கேரள அரசு சார்பில் சிறந்த மலையாள சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா வருகிற ஆகஸ்டு 8–ந் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மோகன்லாலை அரசு அழைத்து இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த நடிகர்– நடிகைகள் உள்பட 107 பேர் கையெழுத்திட்டு கேரள முதல்–மந்திரி பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
அதில் திரைப்பட விருது விழாவில் விருது அளிக்கும் முதல்வரும் விருதை வாங்கும் கலைஞர்களும் மட்டுமே சிறப்பு விருந்தினர்களாக இருக்க முடியும். மோகன்லாலை சிறப்பு விருந்தினராக அழைக்க கூடாது என்று வற்புறுத்தி உள்ளனர். மேலும் பல நடிகைகள் அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பதாக உலக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், மலையாள பட உலகிலும் இதுபோன்ற தொல்லைகள் இருக்கிறது என்று நடிகை ஹனிரோஸ் கூறியுள்ளார்.
நடிகைகளுக்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் செக்ஸ் தொல்லைகள் கொடுப்பதாக உலக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. ஹாலிவுட் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆஸ்கர் விருது பெற்ற தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி படுக்கைக்கு தன்னை அழைத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் பெயர்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மகளிர் ஆணையமும் அரசும் விசாரணையில் இறங்கி உள்ளன. இந்தி நடிகைகளும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர். இந்த நிலையில் மலையாள பட உலகிலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று பிரபல நடிகை ஹனிரோஸ் அம்பலப்படுத்தி உள்ளார்.
இவர் தமிழில் காந்தர்வன், சிங்கம்புலி, மல்லுக்கட்டு உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒன் பை டூ என்ற மலையாள படத்தில் உதட்டோடு உதடு முத்தமிட்டு நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலியல் தொல்லை குறித்து ஹனிரோஸ் அளித்த பேட்டி வருமாறு:-
“மலையாள பட உலகிலும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால் அதை ஏற்பதும் ஏற்காததும் நமது கையில்தான் உள்ளது. நடிக்க வாய்ப்பு கேட்கும் ஆரம்ப காலத்தில் எல்லா நடிகைகளுமே போராடத்தான் வேண்டி இருக்கிறது. அப்போது சிலர் நடிகைகளை மூளைச்சலவை செய்வார்கள். நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மலையாள படத்தில் நான் நடித்த முத்த காட்சி படத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்தியது வேதனையாக இருந்தது.”
இவ்வாறு நடிகை ஹனிரோஸ் கூறினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X