என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவி"

    • மாணவி படிக்கட்டில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
    • பள்ளியின் முதல்வர் ஆனந்தியை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா செங்குட்டுப்பாளையத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் கடந்த 5-ந் தேதி பூப்பெய்தி உள்ளார்.

    தற்போது பள்ளியில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால் மாணவியை வகுப்பறையில் தனியாக அமர செய்து தேர்வு எழுத அனுமதிக்குமாறு மாணவியின் பெற்றோர் கேட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து கடந்த 7-ந் தேதி தேர்வு எழுத பள்ளிக்கு சென்ற மாணவியை வகுப்பறைக்கு வெளியே உள்ள படிக்கட்டில் அமர செய்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளானார். தனது தாயாரிடமும் இது குறித்து தெரிவித்தார்.

    கடந்த 9-ந் தேதியும் இதேபோன்று மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர்.

    இதுபற்றி அறிந்த மாணவியின் தாய் பள்ளிக்கு சென்று, பள்ளி முதல்வரிடம் இதுபற்றி கேட்டுள்ளார். அதற்கு பள்ளி முதல்வர் சரியாக பதில் அளிக்காமல் மிரட்டல் தொனியில் பேசியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் மாணவி படிக்கட்டில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து, பொள்ளாச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங், நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுமதி தலைமையிலான போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உதவி இயக்குனர் வடிவேலும் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது மாணவியின் பெற்றோரிடம் பேசிய அதிகாரிகள் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    மேலும் இதுபோன்ற செயல்கள் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே இந்த விவகாரத்தில் பள்ளியின் முதல்வர் ஆனந்தியை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

    இந்த நிலையில் பள்ளி மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை நெகமம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பள்ளியின் தாளாளர் தங்கவேல் பாண்டியன், முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி ஆகியோர் மீது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
    • கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழு ஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மாணவி வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் அவரது தாய் நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக கேட்டுள்ளார்.

    இதற்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளது. எங்களது பள்ளியில் இப்படிதான் நடக்கும். முடியாது எனில் வேறு பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என கூறி உள்ளது.

    மாணவி வகுப்பறைக்கு வெளியில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ வெளியான நிலையில், பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    பின்னர், மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.

    மேலும், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில், பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்து தேர்வு எழுத்த வைத்த விவகாரத்தை அடுத்து சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோவை செங்குட்டைபாளையம் சுவாமி சித்பவானந்தர் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தியை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    • இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • புகாரின் போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியையும், கடத்தலில் ஈடுபட்ட ஆகாஷ் செல்வனையும் தேடி வருகின்றனர்.

    குழித்துறை, அக்.27-

    தக்கலை பனவிளை புல்லாணி விளையை சேர்ந்த வர் ஆகாஷ் செல்வன் (வயது 21). பெயிண்டர். இவர் வழக்கு ஒன்றில் கைதாகி கடந்த ஜூலை மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

    வழக்கு

    இந்நிலையில் இவர் குலசேகரத்தை அடுத்த நாககோடு அருகே குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியையும், கடத்தலில் ஈடுபட்ட ஆகாஷ் செல்வனையும் தேடி வருகின்றனர்.

    • திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
    • பனியன் தொழிலாளியான ரியாஸ் அகமது என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். மாநகராட்சி பள்ளியில்,பிளஸ் 2 படித்து வருகிறார். இவரிடம் முதலிபாளையத்தை சேர்ந்த பனியன் தொழிலாளியானரியாஸ் அகமது(வயது 23) என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்.

    இந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது ரியாஸ் அகமது, சிறுமியை மேட்டுப்பாளையத்துக்குஅழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. சிறுமியை மீட்ட போலீசார்,ரியாஸ் அகமதுவை 'போக்சோ' வழக்கில் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், சிறையில் அடைத்தனர்.

    • பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
    • டெல்லியில் இனிமேல் ஆசிட் விற்பனை நடைபெறாது என வியாபாரிகள் உறுதி,

    டெல்லியின் தெற்கு துவாரகா பகுதியில் பள்ளிக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி மீது பைக்கில் வந்த இருவர் ஆசிட்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். வலி பொறுக்க முடியாமல் கதறியபடி அந்த மாணவி சாலையில் கீழே விழுந்தார். இந்த கொடூர தாக்குதலில் அவரது முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆசிட் வீசிய சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அதன் அடிப்படையில் முக்கிய குற்றவாளி உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் நைட்ரிக் அமிலத்தை வாங்கி அந்த குற்றவாளிகள் மாணவி மீது வீசியிருக்கலாம் என்றும், தடயவியல் பரிசோதனையின் பின்னரே அது உறுதிப்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 


    இந்நிலையில் மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கு டெல்லி வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இனிமேல் ஆசிட் விற்பனை நடைபெறாது என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.ஆசிட் விற்பனையைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும், ஆசிட் வாங்க வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பள்ளி மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வெறும் வார்த்தைகளால் எந்த நீதியையும் நம்மால் வழங்க முடியாது, இந்த மிருகங்களுக்கு அளவிட முடியாத வலியைப் பற்றிய பயத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். துவாரகாவில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய இளைஞர்களை பொதுவெளியில் பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றவர் மீண்டும் திரும்ப வரவில்லை.
    • 17 வயது சிறுவன் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றவர் மீண்டும் திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி மாணவியை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட பள்ளி மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • டெல்லியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியை ஒருவர் முதல் மாடியிலிருந்து தள்ளிவிட்டார்.
    • இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியை ஒருவர் முதல் மாடியிலிருந்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி வந்தனா. இவர் வழக்கம்போல் வகுப்பறையில் இருந்துள்ளார்.

    அப்போது ஆசிரியர் கீதா தேஷ்வால் வந்தனாவை கத்தரிக்கோலால் தாக்கியுள்ளார். பின்னர் அவர் மாணவியை முதல் மாடியிலிருந்து கீழே வீசியுள்ளார். இதில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தற்போது மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது. இதனையடுத்து, ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து மாணவி போலீசாரிடம் தெரிவிக்கையில், ஆசிரியர் என்னை கத்தரிக்கோலால் தாக்கினார். அவர் (ஆசிரியர்) என் தலைமுடியை பிடித்து இழுத்து மாடியில் இருந்து என்னை கீழே வீசினார். நான் எந்த தவறும் செய்யவில்லை. என கண்ணீர்மல்க தெரிவித்தார்.

    டெல்லி மத்திய பகுதி துணை ஆணையர் ஸ்வேதா சவுகான் இந்த வழக்கை குழு அமைத்து விசாரித்து வருகிறார்.

    இந்நிலையில், மாணவியை கீழே தள்ளிய விவகாரத்தில் ஆசிரியையை கைதுசெய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்த அவரது தாயார் மாணவியிடம் விசாரித்தார்.
    • சிறுமியை டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்ததில் மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அருகே வசிப்பவர் சலீம் (21 வயது) கூலி தொழிலாளி. இவரது மனைவி கடந்த ஆண்டு பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். இதன் காரணமாக சலீமுக்கு உறவினர் குடும்பத்தினர் தினமும் சாப்பாடு வழங்கி வந்தனர்.

    இந்த நிலையில் சலீமுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்த 9ம் வகுப்பு மாணவியை கடந்த ஜூன் மாதம் மிரட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் இந்த சம்பவத்தை அடிக்கடி சொல்லி சிறுமியை பயமுறுத்தி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்த அவரது தாயார் மாணவியிடம் விசாரித்தார். அப்போது நடந்ததை சிறுமி கூறியுள்ளார்.

    பின்னர் சிறுமியை டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்ததில் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வாசுகி வழக்கு பதிவு செய்து சலீமை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்வி பயிலும் வகையில் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.
    • நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    காங்கயம், காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருபவா் சி.அருள்ஜோதி. குடும்பத்தைவிட்டு தந்தை பிரிந்து சென்ற நிலையில் உடல் நலிவுற்ற தாயுடன் வசித்து வருகிறாா். வறுமை காரணமாக இவரால் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், மாணவி தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.

    காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சாந்தி அமலோா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர். 

    • கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அதேபகுதியில் அரசு பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பத்தன்று கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    மாணவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால்

    மாணவியின் தாயார் உமராபாத் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமண ஆசையில் யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவியிடம் விசாரித்தபோது பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபரை 3 வருடமாக காதலித்து வந்ததாக தெரிவித்தார்.
    • சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அதே ஊரில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவிக்கு நேற்று முன்தினம் உடல் நலம் சரியில்லாமல் வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது தாயார் செய்யாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளித்தபோது அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து டாக்டர்கள் சிறுமியின் தாயாரிடம் தெரிவித்தனர். அவர் மாணவியிடம் விசாரித்தபோது பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவரை 3 வருடமாக காதலித்து வந்ததாகவும், அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி தனிமையில் சந்தித்ததாகவும் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சோனியா வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை தேடி வருகின்றார்.

    • பள்ளி மாணவி ஒருவரை தினமும் பின்தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.
    • புகாரின் பேரில் போலீசார் மாணவியை மீட்டனர்.

    திருப்பூர் :

    சேலம் கெங்கவள்ளி செந்தாரப்பட்டியை சேர்ந்த, கார்த்திக்,(25) டிரைவர். இவர் திருப்பூர்,பெருமாநல்லுார் அருகே கருக்கன்காட்டு ப்புதூரில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் அந்த பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை தினமும் பின்தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். சம்பவத்தன்று பள்ளி மாணவியை திருமண ஆசை காட்டி, கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் அவிநாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் மாணவியை மீட்டனர்.பின்னர் கார்த்திக்கை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×