என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 193676
நீங்கள் தேடியது "வீராங்கனை"
13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து வீரர் மோஸ்தபா அசல், வீராங்கனை ரோவன் ரெடா அராபி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்கள். #WorldJuniorSquash #Championship #MostafaAsal #RowanReda
சென்னை:
13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் எகிப்து வீரர் மோஸ்தபா அசல் 11-7, 13-11, 11-4 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியன் மார்வன் டாரெக்கை (எகிப்து) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ரோவன் ரெடா அராபி (எகிப்து) 11-4, 11-9, 10-12, 11-9 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை ஹனியா எல் ஹம்மாமியை தோற்கடித்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். உலக ஜூனியர் அணிகள் சாம்பியன்ஸ் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா உள்பட 24 நாடுகள் கலந்து கொள்கின்றன. #WorldJuniorSquash #Championship #MostafaAsal #RowanReda

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க பிரியாசிங்குக்கு ரூ.4½ லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். #PavaShooter #PriyaSingh
லக்னோ:
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த 19 வயதான பிரியா சிங் தேர்வு பெற்றுள்ளார். ஏழை தொழிலாளியின் மகளான அவருக்கு ஜெர்மனி செல்வதற்கு போதிய பணம் இல்லை. இதனால் போட்டியில் பங்கேற்க தனக்கு உதவி செய்யும்படி உள்ளூர் எம்.எம்.ஏ. முதல், முதல்-மந்திரி மற்றும் பிரதமர் வரை பிரியாசிங் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இந்த கோரிக்கைக்கு உடனடியாக பதில் கிடைக்காததால், ‘தனக்கு சொந்தமான மாடுகளை விற்றும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் தனது மகளை நிச்சயம் ஜெர்மனி போட்டிக்கு அனுப்பி வைப்பேன்’ என்று பிரியாசிங்கின் தந்தை பிரிஜ்பால் சிங் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையின் ஏழ்மை நிலையை அறிந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க பிரியாசிங்குக்கு ரூ.4½ லட்சம் நிதி உதவியை மாநில அரசு சார்பில் உடனடியாக வழங்க உத்தரவிட்டார். #PavaShooter #PriyaSingh #tamilnews

×

X