search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்சென்டர்"

    அமெரிக்காவில் கால்சென்டர் ஊழல் வழக்கில் இந்திய வம்சாவளியினர் 21 பேர் மீது மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதில் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #USCourt #CallCentreScam
    நியூயார்க்:

    இந்திய வம்சாவளியினர் 21 பேர், அமெரிக்காவில் உள்ள மூத்த குடிமக்கள், சட்டப்பூர்வ குடியுரிமை பெற்றவர்கள் உள்ளிட்ட பலரைப் பற்றிய தகவல்களை தகவல் தரகர்கள் மூலம் பெற்றனர்.

    பின்னர் அந்த தகவல்களை கொண்டு இந்தியாவில் ஆமதாபாத்தில் உள்ள ‘கால்சென்டர்’கள் மூலம் அமெரிக்கர்களை தொடர்பு கொண்டு உள்நாட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றப்பணிகள் துறை அதிகாரிகள் என்ற பெயரில் மிரட்டி பல லட்சம் டாலர்களை சட்ட விரோதமாக கறந்து விட்டனர்.

    இந்த ஊழல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதில் தொடர்பு உடைய இந்திய வம்சாவளியினர் 21 பேர் மீது அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்களுக்கு தலா 4 ஆண்டு முதல் 20 ஆண்டு வரையில் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.

    இவர்களில் பலரும் தண்டனைகாலம் முடிந்ததும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று அமெரிக்க அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் கூறினார்.  #USCourt #CallCentreScam #tamilnews

    ×