search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றப்பத்திரிக்கை"

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். #AircelMaxisCase #Chidambaram #CBI
    புதுடெல்லி:

    கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீட்டுக்கு முறையான அனுமதி பெறவில்லை எனவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த விவகாரத்தை அமலாக்கத் துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்து வருகின்றன. டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.



    இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் பெயரை குறிப்பிட்டு சி.பி.ஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது.

    இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப,சிதம்பரம், சிபிஐ-க்கு அளிக்கப்படும் அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே என் மீதும், மதிப்புமிக்க அரசு அதிகாரிகள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். #AircelMaxisCase #Chidambaram #CBI
    உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண்ணை கற்பழித்த விவகாரத்தில் பா.ஜ.க எம்எல்ஏ குல்திப் சிங் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
    லக்னோ :

    உத்திரப்பிரதேசம் மாநிலம், உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண், தன்னை கற்பழித்த செய்த பா.ஜ.க எம்.எல்.ஏ குல்திப் சிங் மற்றும் அவரது சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீடு முன்பு தனது தந்தையுடன் தீக்குளிக்க முயன்றார்.

    அப்போது, சிறுமியின் தந்தை எம்எல்ஏவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்தை, சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்தார்.

    பெரும் விஸ்வரூபம் எடுத்த இந்த விவகாரத்தை, அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. பின்னர், உத்திரப்பிரதேச அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது.

    இந்நிலையில், பா.ஜ.க எம்எல்ஏ குல்திப் சிங் மீது சி.பி.ஐ இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
    ×