search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு"

    • சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி உயிரிழப்பு.
    • 2 மோட்டார் சைக்கிளில் இருந்த 3 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர்.

    வேளச்சேரி:

    செம்மஞ்சேரியை சேர்ந்தவர் கங்கையம்மாள் (வயது 85). இவர் அதே பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியே வந்த கார் திடீரென கங்கையம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கங்கையம்மாள் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்

    படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கூட்டு ரோட்டில் வாலிபர்கள் 2 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது.

    இதில் 2 மோட்டார் சைக்கிளில் இருந்த 3 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் பலியானவர் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கினார்.
    • 2 மீனவர் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ. தனது நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்த பெரியசாமி. இவா்களது மகன்கள் முனியசாமி (30), அருண்குமாா் (24), காசிசுமன் (20) மலைச்செல்வம் (18). இவர்களுக்கு சொந்தமான நாட்டுப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது பலத்த காற்றில் படகு கவிழ்ந்து முனியசாமி, மலைச்செல்வன் ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

    மீனவர் முனியசாமிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க, பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினரை அவர்களது வீட்டுக்கு சென்று முனியசாமியின் மனைவி சவுபாக்கியம், மலை செல்வத்தின் தாயார் வேளாங்கண்ணியை சந்தித்து ஆறுதல் கூறினார். 2 மீனவர் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ. தனது நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

    மீனவர்களுக்கு வழங்கப்படும் அரசு நிதி உதவியும், முனியசாமி மனைவிக்கு அரசு வேலையும் வாங்கி தருவதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். கீழக்கரை நகர் மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான், தி.மு.க மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், தி.மு.க மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 199 பேர் ரசாயான பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • 12 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் கூறப்படுகிறது.
    ஜோர்டனின் அகபா துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பில் கிரேன் மூலம் குளோரின் டாங்குகள் ஏற்றப்பட்டது. அப்போது, திடீரென கிரேன் செயலிழந்ததை அடுத்த, ஒரு குளோரின் டாங்க் மேலிருந்து விழுந்து வெடித்தது. இதில், பெரியளவில் மஞ்சள் நச்சு புகை வெளியேறியது. இதனால், இந்த விபத்தில் அங்கு இருந்த கப்பல்துறை பணியாளர்கள் 12 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    இந்நிலையில், இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அகபா துறைமுகத்தில் மதியம் 3.15 மணிக்கு குளோரின் டாங்க் விழுந்து வெடித்தது. இதனால் வாயு கசிவு ஏற்பட்டது. காயமடைந்தவர்களில் 199 பேர் ரசாயான பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் கூறப்படுகிறது.

    இதன் எதிரொலியால், துறைமுகத்திற்கு வடக்கே 16 கி.மீ தொலைவில் உள்ள அகபா நகரவாசிகள் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி உள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, அகபாவின் தெற்கு கடற்கறையில் இருந்து பொதுமக்கள் வெறியேற்றினர். சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு துறை சிறப்பு குழுக்கள் துறைமுகத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் மட்டும் கடந்த ஆண்டில் 3600 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது.#Potholes

    பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அரசு எடுக்க வேண்டிய மிக முக்கிய முன்னெச்சரிக்கை பணி சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்வதாகும். ஏனென்றால், மழை பெய்த பின்னர் தண்ணீர் வெளியேற வழியின்றி சாலைகளில் தேங்கியிருக்கும் போது பள்ளம், மேடுகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கின்றனர்.

    இப்படி நாடுமுழுவதும் கடந்தாண்டு சாலை பள்ளங்களால் ஏற்பட்ட விபத்தில் மட்டும் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3600 ஆகும். உத்தரப்பிரதேசம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 987 பேர் உயிரிழந்துள்ளனர். 

    அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 726 பேரும், ஹரியாவாவில் 522 பேரும் சாலை பள்ளங்களுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு பலியானவர்களை விட 2017-ம் ஆண்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.



    சாலைகளை செப்பனிடும் பணிகளுக்காக பலநூறு கோடி ரூபாய்களை அரசு ஒதுக்கிய பின்னரும் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளது வேதனை அளிக்கும் ஒன்றாக இருக்கிறது. 

    கடந்த ஆண்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பொதுமக்கள், வீரர்கள் என மொத்தம் 803 பேர் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல்களில் இறந்தவர்களை விட சாலை பள்ளத்தினால் பலியானவர்கள் 4 மடங்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனால், பயங்கரவாத இயக்கங்களே நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள். பொதுமக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டங்களை கொண்டுள்ளது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும், சாலை பள்ளங்களில் சிக்கி பலியானவர்கள் அனைவரும் சாமானியர்களே, எந்த விஐபி வீட்டுக்கு செல்லும் சாலைகள் பள்ளம், மேடாக உள்ளது எனவும் பலர் குமுறிவருகின்றனர்.
    ×