search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹோமியோபதி"

    சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். #NEET
    சென்னை:

    நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வின் மூலம் கலந்தாய்வு  நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மதிப்பெண்ணை கொண்டு மாணவர் சேர்க்கை நடத்துமாறு மத்திய அரசு சமீபத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.  இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

    இதில், நீட் தேர்வு தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கும்படி சி.பி.எஸ்.இ.-க்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து கவுன்சிலிங்கை எப்படி நடத்துவது? என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

    மேலும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு இல்லாமல் +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 
    ×