search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோல்கள்"

    ரஷியாவில் நேற்றுடன் முடிவடைந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அடிக்கப்பட்ட மொத்த கோல்கள் குறித்த விவரத்தை பார்ப்போம். #WorldCup2018 #WorldCupFinal
    உலககோப்பையில் மொத்தம் நடந்த 46 ஆட்டத்தில் 169 கோல்கள் அடிக்கப்பட்டன. ஒரு ஆட்டத்துக்கான சராசரி கோல் 2.64 ஆகும். இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் அதிகபட்சமாக 6 கோல்கள் அடித்து ‘தங்க ஷூ’வை பெற்றார்.

    உலக கோப்பையில் 3 கோல்களுக்கு மேல் அடித்த வீரர்கள் விவரம்:-

    6 கோல்: ஹாரிகேன் (இங்கிலாந்து).

    4 கோல்: கிரீஸ்மேன், எம்பாப்வே (பிரான்ஸ்), லுகாகு (பெல்ஜியம்), டெனிஸ் செர்ஷேவ் (ரஷியா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்).

    3 கோல்: பெர்சிச் மெண்டு கிச் (குரோஷியா), ஈடன் ஹசாட் (பெல்ஜியம்), ஆர்டம் டிசுயபா (ரஷியா), யெரிமினா (கொலம்பியா) எடின்சன் கவானி (உருகுவே), டியாகோ கோஸ்டா (ஸ்பெயின்).

    நெய்மர் (பிரேசில்), மோட்ரிச் (குரோஷியா) உள்ளிட்ட 13 வீரர்கள் தலா 2 கோலும், மெஸ்சி உள்ளிட்ட 84 வீரர்கள் தலா 1 கோலும் அடித்துள்ளனர்.

    இந்த உலககோப்பையில் 12 சுயகோல்கள் (சேம்சைடு) விழுந்துள்ளன. இது ஒரு மோசமான நிகழ்வாகும். 1998-ல் 6 சுயகோல்கள் விழுந்ததே சாதனையாக இருந்தது. #WorldCup2018 #WorldCupFinal
    ×