search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 197182"

    • இந்த ஆசனம் மூட்டுப்பகுதியை நன்கு வலுவாக்கும்.
    • நரம்பு சுருள் பிரச்சனை சரியாகும்.

    செய்முறை :

    விரிப்பில் நேராக நிற்க வேண்டும். பார்வையை ஒரு இடத்தில் பதித்து, இடது கையை மேலே உயர்த்தி, இடது கன்னத்தை ஒட்டியவாறு வைக்க வேண்டும்.

    பின்னர் வலது காலை இடுப்பு வரை தூக்கி வலது பக்கமாக திருப்ப வேண்டும். கால் முட்டியை மடக்கக்கூடாது. வலது கையால் இடது கால் கட்டை விரலை பிடித்து கொள்ள வேண்டும்.(படத்தில் உள்ளபடி)

    இப்போது இடது கையை பக்கவாட்டில் நீட்டி சின் முத்திரை வைத்து தலையை இடது பக்கமாக திருப்பி சின் முத்திரையை பார்க்க வேண்டும். நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். முதுகை வளைக்கக்கூடாது. இந்த நிலையில் ஒவ்வொரு முறையும், 20 முதல் 30 வினாடிகள் நின்ற பிறகு பழைய நிலைக்கு வரவும். பின்னர் கால்களை மாற்றி வலது பக்கம் இவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யலாம்.

    பயன்கள் :

    1. மூட்டுப்பகுதி நன்கு வலுவடைகிறது

    2. மனம் ஒரு நிலை அடைந்து தியான சக்தி தூண்டப்படுகிறது

    3. ஜீரண சக்தி அதிகமாகிறது

    4. ஜணன உறுப்புகள் நன்கு தூண்டப்பட்டு சரியாக இயங்குகிறது

    5. நரம்பு சுருள் பிரச்னை சரியாகிறது.

    • தீவிர முட்டி வலி, முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
    • பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை தீர்க்கும்.

    'பத்ர' என்ற வடமொழி சொல்லுக்கு 'புனிதமான' என்றும் 'கருணையுள்ள' என்றும் பொருள் உண்டு. பத்ராசனம் என்றால் புனிதமான ஆசனம், கருணையான ஆசனம்.

    பத்ராசனம் மூலாதார சக்கரத்தை தூண்டி படைப்பாற்றல் திறனை வளர்க்கிறது. மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக் கொணர உதவுகிறது. குறிப்பாக, சிறுநீரகம், கர்ப்பப்பை ஆற்றல்களை வளப்படுத்தி மறுஉறுபத்தியை ஊக்குவிக்கிறது. பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை தீர்ப்பதுடன் ஆண்களின் விந்தணுக்கள் பெருக்கத்தை தூண்டுவதால் இது கருணையுள்ள ஆசனம் என்று கூறப்படுகிறது. மூலாதார சக்கரமே பிற சக்கரங்களின் நலத்துக்கு அடிப்படை.

    பலன்கள்

    மூச்சு கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

    சுகப்பிரசவம் ஆக உதவுகிறது.

    சையாடிக் பிரச்சினைகளை போக்க உதவுகிறது.

    இடுப்பு பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

    சிறுநீரகத்தின் நலத்தை பாதுகாக்கிறது.

    சிறுநீர் கடுப்பை போக்க உதவுகிறது.

    செய்முறை

    விரிப்பில் அமரவும். இரண்டு கால்களையும் மடித்து பாதங்களை ஒன்று சேர்த்து வைக்கவும். கைகளால் கால் விரல்களை பற்றி மூச்சை வெளியேற்றிக் கொண்டே முன்னால் குனிந்து நெற்றியை தரையில் வைக்கவும். கைகளை தலைக்கு முன்னால் நீட்டி உள்ளங்கைகளை ஒன்றாக வணக்கம் சொல்வது போல் தரையில் வைக்கவும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.

    கர்ப்பிணி பெண்கள் நெற்றியை தரையில் வைக்கக் கூடாது. கைகளால் கால்களை பற்றி அமர்ந்தாலே போதுமானது.

    தீவிர முட்டி வலி, முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

    • இதய நோயுள்ளவர்கள் இந்த ஆசனத்தை கவனமாகச் செய்யவும்.
    • குடல்வாயு நோயுள்ளவர்கள் இதைச் செய்ய கூடாது.

    செய்முறை:

    விரிப்பில் முழங்காலிட்டு அமரவும். முட்டுக்களை அகலமாக விரித்து உட்காரவும். மார்பு, கழுத்தை சிறிது பின் நோக்கி வளைத்து தலையை பின்புறம் தொங்க விட்ட நிலையில் ஒவ்வொரு கையாக உடலின் பின் பகுதிக்கு கொண்டு சென்று விரல்களை ஊன்றிய குதிகால் பகுதிகளை பிடிக்கவும்.

    வாய்மூடிய நிலையில் மூச்சை நன்றாக உள்வாங்கி வெளியிடவும். 15 வினாடிகள் இவ்விதம் இருந்த பின்பு ஒவ்வொரு கையாக முன் கொண்டு வந்து முழங்காலிட்டு அமரவும். இரண்டு நிமிட இடைவெளிக்குப்பின் மீண்டும் ஒரு முறை இந்த ஆசனம் செய்யலாம்.

    முழங்கால் மூட்டுக்களிலுள்ள நச்சு நீர் குறையும். ஆஸ்த்துமா நோய் குறையும். இது ஒரு மருத்துவ ஆசனமாகும். தைராய்டு கிளாண்டுகள் இயக்கம் சீர்பெற உதவும்.

    இதய நோயுள்ளவர்கள் கவனமாகச் செய்யவும். குடல்வாயு நோயுள்ளவர்கள் இதைச் செய்ய கூடாது.

    பலன்கள்

    முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது. வயிற்றின் உள்ளுறுப்புகள் பலமடைந்து விலா எலும்புகள் நன்கு விரிவடைகின்றன

    குணமாகும் நோய்கள்: முதுகுவலி, சுவாசக் கோளாறுகள், முழங்கால் வலி, இடுப்பு வலி இடுப்பு வாயு பிடிப்பு, கீழ் வாயு வாயுக் கோளாறு, இரைப்பை கோளாறுகள், முதலியவற்றிற்கு நல்லது. தன்னம்பிக்கையினை வளர்க்கிறது. சோம்பலை நீக்கி பயிற்சியாளரைச் சுறுசுறுப்பாகவும் செய்கிறது.

    • தூக்கமின்மை பிரச்சினை உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்க வேண்டும்.
    • வயிறு மற்றும் உள் உறுப்புகளின் பலப்படுத்துகிறது.

    இந்த ஆசகம் செய்வது தன் மூலம் பல நன்மைகளை நாம் அடையாளம், முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதுடன் அதன் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது. முதுகுத் தசைகளை வலுவாக்குகிறது. முன்புற உடலை நன்கு நீட்சியடையச் செய்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது. நோய் எதிர்ப்புத் தன்மை மேம்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. இடுப்புப் பகுதியை பலப்படுத்துகிறது. வயிறு மற்றும் உள் உறுப்புகளின் பலப்படுத்துகிறது. கை கால் மற்றும் மூட்டுக்களையும் பலப்படுத்தி நமது உடலுக்கு சக்தியை அதிகரிக்கிறது.

    செய்முறை

    முட்டி போடவும். இரண்டு கால்களுக்கு சிறிது இடைவெளி விடவும். கைகளை மடித்து உள்ளங்கைகளை வணக்கம் சொல்லும் பாணியில் மார்புக்கு முன்னால் சேர்க்கவும். மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு கைகளை மேல் நோக்கி உயர்த்தி பின்னால் மேல் உடலை சாய்க்கவும். உடன் கைகளையும் பின்னோக்கி கொண்டு செல்லவும்.

    உள்ளங்கைகளை பாதங்களுக்குப் பின்னால் தரையில் வைக்கவும். விரல்கள் பாதங்களை நோக்கி இருக்க வேண்டும். இடுப்பை நன்றாக மேல் நோக்கி உயர்த்தி கைகளை கால்களை நோக்கி கொண்டு வந்து பாதங்களுக்குப் பக்கவாட்டில் கை விரல்கள் இருக்குமாறு வைக்கவும்.

    மெதுவாகக் கால் விரல்களைப் பற்றி முன் கைகளைத் தரையில் வைக்கவும். கழுத்தை நன்றாக வளைத்துத் தலையை பாதத்தின் அருகே வைக்கவும். மாறாக, கைகளை பாதங்களின் அருகே வைத்துத் தலையைப் பாதத்தில் வைக்கலாம்.

    30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இவ்வாசனத்தில் இருக்கவும். ஆசனத்தை விடுவிக்க, உள்ளங்கைகளைத் தரையில் வைத்துத் தரையிலிருந்து தலையை உயர்த்தவும். பின், கைகளைத் தரையிலிருந்து எடுத்து உடலை நேராக்கவும். பாலாசனத்தில் ஓய்வெடுக்கவும்.

    ஆரம்ப நிலை பயிற்சியாளர்கள் இராஜ கபோடாசனத்தை முயற்சிப்பதைத் தவிர்க்கவும். ஆரம்பக் கட்டத்தில் இவ்வாசனம் செய்யும் போது சுவரை ஒட்டி பாதங்களை வைத்துப் பின்னால் வளையும் போது கைகளை சுவற்றின் மீது வைத்து மெல்ல கீழ் நோக்கிப் போகவும்.

    இராஜ கபோடாசனத்தை உஸ்ட்ராசனம், வஜ்ஜிராசனம் மற்றும் சுப்த வஜ்ஜிராசனம் நிலையிலிருந்தும் செய்யலாம். முதுகுத்தண்டு கோளாறு, தீவிர கழுத்து வலி, தோள், இடுப்பு மற்றும் முட்டி பிரச்சினைகள் உள்ளவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும். தூக்கமின்மை பிரச்சினை உள்ளவர்களும் இவ்வாசனத்தைத் தவிர்க்க வேண்டும்.

    • இதயம் நன்றாக பலம்பெறும்.
    • முக தேஜஸ் உண்டாகும்.

    செய்முறை :

    பத்மாசனத்தில் இருந்தபடியே கைகளை மேலே தூக்கி, கைவிரல்களைக் கோர்த்துக் கொள்ளவும். அப்படியே புரட்டி உள்ளங்கைகள் மேலே பார்க்குமாறு வைத்து, வாயை மூடி மூச்சை சத்தமாக வெளியே தள்ளவும். பின்னா் தோள்பட்டை முதுகை வலதுபக்கம் நன்றாக திருப்பி 10 மூச்சு தள்ளவும். பின்னா் ஓய்வெடுத்து இடதுபுறம் 10 மூச்சு தள்ளவும். பத்மாசனத்தில் அமர முடியாதவர்கள் சாதாரணமாக அமர்ந்தும் இந்த ஆசனத்தை செய்யலாம்.

    பலன்கள் :

    முக தேஜஸ் உண்டாகும். முதுகுவலி அகலும். இதயம் நன்றாக பலம்பெறும். பத்ம உஜ்ஜயி பலன்கள் இதற்கும் கிடைக்கும்.

    • எந்த நேரமும் இன்பமான மனஉறுதி உண்டாகும்.
    • பெண்களுக்கு முடி கொட்டுவது நிற்கும்.

    செய்முறை :

    பத்மாசனத்தில் இருந்தபடியே கைகளை மேலே தூக்கி, கைவிரல்களைக் கோர்த்துக் கொள்ளவும். அப்படியே புரட்டி உள்ளங்கைகள் மேலே பார்க்குமாறு வைத்து, வாயை மூடி மூச்சை சத்தமாக வெளியே தள்ளவும். 10 அல்லது 15 முறை செய்யவும். வஜ்ராசனத்தில் அமர்ந்து இந்த ஆசனத்தை செய்யலாம்.

    பத்ம உஜ்ஜையில் மூச்சைத் தள்ளும்போது நுரையீரலுக்கு அதிக காற்று உட்செல்கிறது. இதன்மூலம் உடல் புத்துணா்ச்சி பெறுகின்றது. பந்து அடிவயிற்றிலிருந்து கிளம்பி மூக்கு வழியாக வருவதுபோல் நினைத்து காற்றை வெளியே வேகமாகத் தள்ளவும்.

    பலன்கள் :

    ஆஸ்துமா, சைனஸ் தொல்லைகள், ஒருபக்கத் தலைவலி, கண்பார்வை கோளாறுகள், காது நோய் முதலியவை அகலும். உடலுக்குப் புத்துணா்ச்சி உண்டாகி, சுறுசுறுப்பும், மகிழ்ச்சியும் உண்டாகும். எந்த நேரமும் இன்பமான மனஉறுதி உண்டாகும். இதய பலவீனம் அகன்று பலமாகும். பெண்களுக்கு முடி கொட்டுவது நிற்கும். முடி வளரும்.

    • முதுகெலும்பு நரம்புகள், தொடை நரம்புகள் பலமாகும்.
    • மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்.

    செய்முறை :

    பத்மாசனத்தில் அமா்ந்து முதுகின் பின்புறம் இரு கைகளையும் கொண்டுவந்து இடது கையினால் வலது மணிக்கட்டையும், வலது கையால் இடது மணிகட்டையும் பிடித்துக்கொண்டு, படத்தின்படி மூச்சை வெளியே விட்டு முடிந்தவரை குனிந்து இருக்கவும். 15 வினாடிகள் இருந்து நிமிரும்போது, மூச்சை இழுத்தபடி நிமிரவும். பழகப் பழகப் படத்தில் உள்ளதுபோல் மூக்கும், நெற்றியும் தரையில் படும். ஆசன சித்தியுண்டாகும். 3 முதல் 5 தடவைகள் செய்யவும்.

    பலன்கள் :

    முதுகெலும்பு பிடிப்பு நேராகும். உடலுக்கு இளமை ஏற்படும். முதுகெலும்பு நரம்புகள், தொடை நரம்புகள் பலமாகும். சுறுசுறுப்பு, ஆரோக்கியம் நீடித்து நிலைத்து நிற்கும். ஆரம்பநிலை அப்பெண்டிக்ஸ் நோயாளிகள் இந்த ஆசனம் செய்தால் ஆப்ரேசன் செய்யாமலேயே குணமாகும். முக்கியமாக மலச்சிக்கல் நீங்கும். குண்டலினி சக்தி எழும்பும்.

    • முதுகின் தசைகளும், எலும்புகளும் வலுவடையும்.
    • மலச்சிக்கல் அஜீரண பிரச்சனைகள் தீரும்.

    செய்முறை :

    வச்சிராசனத்தில் அமா்ந்து கைகளைப் பின்னால் கொண்டுபோய், இடது கையால் வலது மணிக்கட்டை பிடிக்கவும். மூச்சை வெளியே விட்டுக்கொண்டே குனிந்து நெற்றியை முன்னால் கொண்டுசென்று படத்தின்படி 10 வினாடிகள் இருக்கவும். பின்னா் மூச்சை இழுத்துக்கொண்டே நிமிரவும். இதுபோல் இரண்டு அல்லது மூன்றுமுறை செய்யவும்.

    பலன்கள் :

    முதுகின் தசைகளும், எலும்புகளும் வலுவடையும். கல்லீரல், மண்ணீரல் முதலியன அழுத்தப்பட்டு நன்கு செயல்படும். மலச்சிக்கல் நீங்கும். நீரிழிவு நோய் அகலம், அஜீரணம் விலகும். நுரையீரல் தூய்மை அடையும். தொப்பை குறைய மிகச்சிறந்த ஆசனம்.

    • உடல் இயக்கத்துக்கு அடிப்படையான 33 நரம்புகள் தண்டுவடத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
    • கீழ்கண்ட ஆசனங்களை செய்வதன் மூலம் தண்டுவட பிரச்சனையை குணப்படுத்த முடியும்.

    உடலின் முக்கியமான உறுப்பு தண்டுவடம். உடல் இயக்கத்துக்கு அடிப்படையான 33 நரம்புகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மூளை மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு இடையே உள்ள தகவல் பரிமாற்றத்துக்கு தண்டுவடம் அடிப்படையானது. உட்காருவது, நடப்பது, நிற்பது, பொருட்களை தூக்குவது போன்ற செயல்களின்போது நமது தோரணை சீரற்று இருப்பதால், தண்டுவடத்தில் பாதிப்புகள் ஏற்படும். இவற்றை கீழ்கண்ட ஆசனங்களை செய்வதன் மூலம் குணப்படுத்த முடியும். அதைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    ஆஞ்சநேயாசனம்: விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். வலது காலை முன் நோக்கி நகர்த்தி தரையில் பாதம் பதியும்படி ஊன்றிக்கொள்ளவும். பின்பு இடது காலை பின்னோக்கி கொண்டு சென்று, முழங்கால் தரையில் படுமாறு கிடைமட்டமாக வைக்கவும். பின்னர் இரண்டு கைகளையும் கூப்பி தலைக்கு மேல் நேராக தூக்கவும். இந்த நிலையில் முதுகுப் பகுதியை பின் நோக்கி வளைக்க வேண்டும். பிறகு ஆரம்ப நிலைக்கு வரலாம். இதைப் போன்று மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும்.

    பலன்கள்: பெண்களுக்கு கை மற்றும் இடுப்பு பகுதியில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரையும். வாகனத்தில் பயணித்தல் மற்றும் பணியிடத்தில் கணினி முன்பு நீண்ட நேரம் வேலை பார்க்கும்போது ஏற்படும் தண்டுவட பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

    வீரபத்ர ஆசனம்: முதலில் நேராக நின்று நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். பின்னர் கால்களை 2 முதல் 3 அடி வரை நகர்த்திக் கொள்ளவும். பின்பு வலது புறம் உடம்பை திருப்பி வலது பக்க முழங்கால் பகுதியை சிறிது மடக்கி இடப்புற காலை சாய்வாக நீட்ட வேண்டும். வலது கையை முன்பும், இடது கையை பின்பும் என பக்கவாட்டின் இருபுறத்திலும் 360 டிகிரி கோணத்தில் நீட்ட வேண்டும். இந்த நிலையில் மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியிட வேண்டும். பின்னர் ஆரம்ப நிலைக்கு வரலாம். அதேபோன்று அடுத்த காலிலும் செய்ய வேண்டும்.

    பலன்கள்: சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும். இழந்த சக்தியை மீட்டெடுக்கும். ரத்த அழுத்தம் மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

    மர்ஜரி ஆசனம்: இந்த ஆசனத்தை செய்வதற்கு முழங்காலிட்டு, கைகளைக் கீழே வைத்து, நான்கு கால்களில் நடப்பதுபோல வைத்திருக்க வேண்டும். மூச்சை உள்ளே இழுக்கும் போது கழுத்தை வளைத்து, மேலே பார்க்க வேண்டும். மூச்சை வெளியிடும் போது கீழ் நோக்கிப் பார்த்து முதுகை வளைக்க வேண்டும்.

    பலன்கள்: வாகனம் ஓட்டும் போது ஏற்படும் முதுகு வலி, கழுத்து வலி பிரச்சினை நீங்கும்.

    • முன் கைகள் மற்றும் மணிக்கட்டுகள் பலமாகின்றன.
    • ஜீரண உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும்.

    மயூராசனம் அல்லது மயில் போஸ் என்று அழைக்கப்படும் இந்த ஆசனம் ஒருவரின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். யோகாசனங்களை செய்வதற்கு, நிறைய பொறுமை, பயிற்சி மற்றும் கடின உழைப்பு அவசியம். மேலும் அவற்றை கற்றுக் கொண்டு பலன் பெற மிகுந்த நாட்களாகும்.

    மயூராசனா அல்லது மயில் போஸ் என்று அழைக்கப்படும் இந்த ஆசனம் ஒருவரின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ஃப்ளெக்ஸிபிலிட்டியை அதிகரிக்கிறது. உங்கள் முழு உடல் எடையும் உங்கள் உள்ளங்கையில் சமப்படுத்தத் தொடங்கும்போது, அது உங்கள் தன்னம்பிக்கையையும் வளர்க்க உதவுகிறது! இது பார்ப்பது போல் எளிதானது அல்ல, ஆனால் பயிற்சி நம்மை முழுமையாக்கும்.

    கைகளை சமநிலையாக வைத்து, முழு உடலையும் கைகள் தாங்கும்படி இருக்க வேண்டும். அப்போது முழங்கைகள் சரியாக தொப்புளுக்கு அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

    யோக தத்துவத்தின்படி, தொப்புளில் ஏதேனும் இம்பேலன்ஸ் இருந்தால், செரிமான பிரச்சினைகள் மற்றும் பிற நோய்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மயூராசனத்தில் தொப்புளின் பக்கங்களில் முழங்கைகள் வைப்பதால், இம்பேலன்ஸ் சரி செய்யப்படும். இதன் விளைவாக சிறந்த செரிமானம் ஏற்படும்.

    அடிவயிற்றில் கொடுக்கப்படும் அழுத்தம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், பித்தப்பை, கணையம் உள்ளிட்ட உறுப்புகளை டோன் செய்ய உதவுகிறது. முழு உடல் எடையும் உள்ளங்கையில் சமநிலைப்படுத்துவதால், முன் கைகள் மற்றும் மணிக்கட்டுகள் பலமாகின்றன.

    செய்முறை

    யோகா மேட்டில் முட்டி போட்டு முன் கால் விரல்களால் அமர்ந்துக் கொள்ளுங்கள். இடுப்பிலிருந்து முன்னோக்கி சாய்ந்து உள்ளங்கைகளை தரையில் அழுத்தவும். கைகளின் விரல்கள் உங்கள் உடற்பகுதியை தாங்க வேண்டும்.

    முன் கைகளை நன்றாக வளைத்து, தொப்புளின் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கால்களை நேராக நீட்டி, உங்கள் உடல் எடையை உள்ளங்கைகளில் சமப்படுத்தவும். வயிற்றுக்கு எதிரான முழங்கைகளின் அழுத்தம் வலுவாகவும் உறுதியாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    பலன்கள்:

    வாத பித்த கபங்களை சமமாய்க் காக்கும். விதானம் இரைப்பை, ஈரல், கணையம், சிறுகுடல் இவைகள் கசக்கப்பட்டு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும். ஜீரண உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும். நீரிழிவு நோய்க்கு முக்கிய ஆசனம்.

    • எஸ்.என்.கல்லூரியில் யோகா பயிற்சி முகாம் நடந்தது.
    • நூலகர் கமார் தியான பயிற்சியின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.

    மதுரை

    மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி யோகா ஆராய்ச்சி மையம் சார்பில் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான ஒரு வார கால "தலைமைப்பண்புகள் மற்றும் தியான பயிற்சி" நடந்தது. முதல்வர் கண்ணன் தியான பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் உதவி பேராசிரியர் தனலட்சுமி தலைமை தாங்கினார். நூலகர் கமார் தியான பயிற்சியின் நோக்கத்தை எடுத்துரைத்தார். மதுரை ராமச்சந்திரா மிஷனைச் சேர்ந்த "இதய நிறைவு" பயிற்றுநர்கள் ராஜகோபால், லோகநாதன், சோமசுந்தரம், சாந்தி, தங்கம் வான்மலர் ஆகியோர் மாணவர்களுக்கு பல்வேறு தியான பயிற்சிகளை செயல்முறை விளக்க த்துடன் எடுத்துரைத்தனர்.

    இணைவு, மையக்கரு, சூழல், தெரிவுகள், காரணவியல், சமூகம் என்ற தலைப்புகளில் தலைமைப்பயிற்சி வழங்கப்பட்டது. மாண வர்களுக்கு உரையாற்று வதன் மூலமும், விளையா ட்டின் மூலமும், இணைய தளத்தை பயன்படுத்தியும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    தினமும் இதயத்தை கவனிக்கும் இதய நிறைவு தியானப்பயிற்சியும் வழங்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர் சிவராம் நன்றி கூறினார்.

    • வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பை கரைக்க உதவுகிறது.
    • முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை (flexibility) அதிகரிக்கிறது.

    உடலின் நடுப்பகுதியை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நோய்கள் எதுவும் அண்டாது. அப்படி நமது உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை பகுதியை நலமாக வைத்திருக்க உதவுவதுதான் பவன முக்தாசனம். இதில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒவ்வொரு காலாக மடித்து செய்வது, இரண்டு கால்களையும் மடித்து செய்வது. ஒவ்வொரு காலாக மடித்து செய்யும் போது வயிறு பகுதியின் இரண்டு பக்கங்களிலும் அழுத்தம் ஏற்பட்டு மண்ணீரல், கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம் முதலியவை நல்ல இயக்கம் பெறுகிறது.

    இரண்டாவது நிலையில் இரண்டு கால்களையும் சேர்த்து அழுத்தும் போது வயிறு பகுதியின் நடுப்பகுதி அழுந்தப்பட்டு வயிறு, கணையம், சிறுநீர்ப்பை, குடல்கள் இயக்கம் பெறுகின்றன. மொத்தத்தில் சீரண உறுப்புகள் அத்தனையும் இயக்கம் பெற்று மலச்சிக்கல், செரியாமை, அசீரணம் இவற்றின் விளைவாக ஏற்படும் வாயுத் தொல்லைகள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. அபான வாயு என்று சொல்லக் கூடிய, கீழ் நோக்கிய வாயுவை, மேலேற விடாமல் சீராக கீழ்நோக்கி தள்ளுகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்யும் போது உடலின் நடுப்பகுதி கல்லையும் சீரணிக்கும் ஆற்றலை பெறுகிறது.

    பலன்கள்

    வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பை கரைக்க உதவுகிறது. சீரணத்தை பலப்படுத்துகிறது. முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை (flexibility) அதிகரிக்கிறது.

    தொடைகளை உறுதியாக்குகிறது. அடி முதுகையும் இடுப்பையும் தளர்த்துகிறது.

    செய்முறை

    விரிப்பில் நேராக படுக்கவும். வலது காலை மடித்து இரண்டு கைகளாலும் வலது கால் முட்டிக்கு கீழ் பிடித்து காலை முகத்தை நோக்கி அழுத்தவும். முகத்தையும் மேல் முதுகையும் உயர்த்தி முகவாயும் காலும் படுமாறு வைக்கவும். இடது கால் தரையில் நீட்டியபடியே 20 வினாடிகள் இருக்க வேண்டும். பின் வலது காலை தரையில் வைத்து இதே போல், கால் மாற்றி இடது காலை மடித்து வலது காலை நீட்டி செய்யவும். இதுதான் முதல் நிலை.

    இரண்டாவது நிலையில் இரண்டு கால்களையும் மடித்து, முட்டிக்கு கீழ் கைகளை சேர்க்கவும். பின், கால்களை அழுத்தி, முதலில் செய்தது போல், தலையையும் மேல் முதுகையும் உயர்த்தி முகவாயை கால் முட்டிக்கு இடையில் வைக்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், கால்களை விடுவித்து ஆரம்ப நிலைக்கு வரவும்.

    இருதய கோளாறு, அதிக இரத்த அழுத்தம், முதுகுத்தண்டு பிரச்சினை, குடலிறக்கம் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.

    ×