search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதாஞ்சலி"

    வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக இந்தியாவில் உருவான கிம்போ ஆப் 24 மணி நேரத்தில் நீக்கப்பட்ட நிலையில், புதிய பெயரில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. #BOLO



    பதாஞ்சலியின் இந்தியாவில் உருவாக்கப்பட்ட குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப்-க்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டது. கிம்போ என்ற பெயரில் வெளியிடப்பட்ட செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில், செயலி வெளியான 24 மணி நேரத்தில் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

    இந்தியாவில் மே 28-ம் தேதி முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட கிம்போ ஆப் மேம்படுத்தப்பட்டு போலோ மெசன்ஜர் ஆப் என்ற பெயரில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 13-ம் தேதி கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி வெளியாகியிருக்கிறது.

    கிம்போ செயலிக்கு எதிர்பார்த்ததை விட அதிகளவு வரவேற்பு கிடைத்திருப்பதை தொடர்ந்து சர்வெர் பற்றாகுறை காரணமாக செயலி நீக்கப்படுவதாக பதாஞ்சலி செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார். எனினும் செயலியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை டெவலப்பர்கள் ஏற்றுக் கொண்டு, கிம்போ செயலி பிழைகளை சரி செய்து மீண்டும் வெளியிடுவதாக பதாஞ்சலி அறிவித்திருந்தது.



    வாட்ஸ்அப் ஐகான் போன்றே காட்சியளிக்கும் கிம்போ ஆப் ஐகான் புதிய செயலியில் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் கிம்போ ஆப் மீண்டும் புதிய பெயரில் வெளியிடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ட்விட்டர் பதிவுகளில் இந்த செயலி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான போலோ ஆப்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய போலோ ஆப் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்க செயலியின் டெவலப்பரான அதித்தி கமல் ட்விட்டரில் ஆராய்ச்சியளர் எலியட் ஆல்டெர்சனுக்கு செயலியை ஹேக் செய்யுமாறு சவால் விடுத்திருந்தார். சவாலை ஏற்றுக் கொண்ட ஆராய்ச்சியாளர் எலியட் சில மணி நேரங்களில் செயலியில் உள்ள பிழைகளை கண்டறிந்து, தெரிவித்திருக்கிறார். #BOLO #Apps
    வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக பதாஞ்சலி அறிமுகம் செய்த கிம்போ செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாபா ராம்தேவின் பதாஞ்சலி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கிம்போ எனும் குறுந்தகவல் செயலியை வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக வெளியிட்டது. 

    ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வெளியான சில மணி நேரங்களில் செயலியின் பாதுகாப்பு குறித்து பலரும் குற்றஞ்சாட்டினர். பாதுகாப்பு வல்லுநர்கள் செயலியின் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் வெளியான ஒரே நாளில் கிம்போ செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டதோடு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

    செயலி நீக்கப்பட்டதை ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கும் கிம்போ பிளே ஸ்டோர்களில் கிம்போ பெயரில் இருக்கும் மற்ற போலி செயலிகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக செயலியை நீக்கியதற்கு அதிகப்படியான வரவேற்பு தான் முக்கிய காரணம் என கிம்போ சார்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பாதுகாப்பு வல்லுநர்கள் இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற வாக்கில் தகவல் தெரிவித்துள்ளனர்.



    பிளே ஸ்டோரில் கிம்போ ஆப் என டைப் செய்தாலே, ஒரே பெயரில் சில எழுத்து மாற்றங்களுடன் பல செயலிகள் வெவ்வேறு டெவலப்பர்களின் பெயரில் இடம்பெற்றிருக்கின்றன. நாளுக்கு நாள் கிம்போ பெயரில் கிடைக்கும் போலி செயலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதால் வாடிக்கையாளர்கள் இவற்றை டவுன்லோடு செய்யாமல் இருப்பது நல்லது. 

    ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று அதிகாரப்பூர்வ கிம்போ ஆப் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. எனினும் பதாஞ்சலி சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களில் இந்த செயலி விரைவில் மீண்டும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து சிம் கார்டுகளை வெளியிட்டு, புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பதாஞ்சலி நிறுவனம் பிஎஸ்என்எல் உடன் இணைந்து இந்திய டெலிகாம் சந்தையில் சிம் கார்டுகளை வெளியிட்டுள்ளது. ஸ்வதேசி சம்ரிதி என அழைக்கப்படும் சிம் கார்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.144, ரூ.792 மற்றும் ரூ.1,584 என மூன்றில் ஒரு சலுகையை தேர்வு செய்ய வேண்டும். 

    மூன்று சலுகைகளிலும் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமி்டடெட் வாய்ஸ் கால் மற்றும் பல்வேறு சலுகைகள் வெவ்வேறு வேலிடிட்டி கொண்டுள்ளன. முதற்கட்டமாக இந்த சிம்கார்டுகள் பதாஞ்சலி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு பின் அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஸ்வதேசி சம்ரிதி சிம் கார்டு வைத்திருப்போருக்கு பதாஞ்சலி பொருட்களை வாங்கும் போது 10% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் - பதாஞ்சலி அறிவித்திருக்கும் ரூ.144 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (மும்பை மற்றும் டெல்லி தவிர்த்து), 2 ஜிபி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    இதேபோன்று ரூ.792 மற்றும் ரூ.1584 சலுகைகளிலும் இதேபோன்ற சலுகைகள் முறையே 180 மற்றும் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்வதேசி சிம் கார்டு வைத்திருப்போருக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால், முதற்கட்டமாக இவற்றை பதாஞ்சலி ஊழியர்கள் மட்டும் பயன்படுத்த முடியும். மேலும் இந்த சலுகைகள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது.
    ×