search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜர்"

    • ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்ததின போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • அதிக வெற்றிப் புள்ளிகளை பெற்ற முதல் 3 பள்ளிகளுக்கு சுழற்கோப்பை வழங்க ப்பட்டது.

    மதுரை

    மதுரை நாடார் உறவின்றைக்குப் பாத்தி யமான ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமரா ஜரின் 120-வது பிறந்தநாள் விழா மற்றும் பரிசளிப்பு விழாவில், காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பள்ளித்தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். பள்ளி துணைத்தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளரும், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை அவைத்தலைவருமான எஸ்.கே. மோகன் முன்னிலை வகித்தார்.

    பள்ளி துணைச்செயலாளர் செந்தில்குமார், பள்ளி விடுதிக்குழுச்செயலாளர் குமார், மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செ யலாளர் வி.பி.மணி, பாரதப்பெருந்தலைவர் காமராஜர் அறநிலைய பொதுச்செயலாளர் காசிமணி, ஜெயராஜ்-அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைச்செயலாளர் சூசை அந்தோணி ஆகியோர் பேசினர்.

    சிறப்பு விருந்தினராக மதுரை இலக்கிய மன்றம் நிறுவனர் -தலைவர் அவனி மாடசாமி கலந்து கொண்டு காமராசர் பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தார். மேலும் அவர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    மதுரை மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான போட்டியில் அதிக வெற்றிப் புள்ளிகளை பெற்ற முதல் 3 பள்ளிகளுக்கு சுழற்கோப்பை வழங்க ப்பட்டது. மதுரை புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசினையும், திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 2-வது பரிசினையும், மதுரை தியாகராஜர் நன்முறை மேல்நிலைப்பள்ளி 3-வது பரிசினையும் பெற்றனர்.

    தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • தெட்சண மாற நாடார் சங்கத்தினர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    மதுரை

    திருநெல்வேலி தெட்சண மாற நாடார் சங்க மதுரை கிளையில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

    இதில் தெட்சண மாற நாடார் சங்க துணைத்தலைவர் அனிதா ஆர்.சிவானந்தன் தலைமையில் நிர்வாக சபை இயக்குநர்கள் பி.எஸ்.கனிராஜ், எஸ்.ஏ. சிவபாலன், ஆர். தங்கவேல், எஸ்.கே. செல்லபாண்டி, ஆயுட்கால உறுப்பினர்கள் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    • காமராஜர் ஆட்சி சாதனை புகைப்படம் திறக்கப்பட்டது.
    • இதில் காங்கிரஸ் கமிட்டி ஊடகப்பிரிவு மாநில பொதுச் செயலாளர் பால் ஜோசப், மூத்த வழக்கறிஞர்கள் பிஸ்மில்லா கான், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் காங்கிரஸ் சார்பாக மதுரை மேலமாசி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் வேல்பாண்டி தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் முன்னிலையில் காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில பொதுச் செயலாளர் பி.ஜே. காமராஜ், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எஸ்.பி. வரதராஜன் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    இதையொட்டி காமராஜர் ஆட்சி காலத்தில் நடத்திய சாதனை நிகழ்வுகளை விளக்கும் வகையில் அவரது புகைப்படங்களை, மனித உரிமை துறை மாநில பொதுச் செயலாளர் பி.ஜே. காமராஜ் திறந்து வைத்தார். இதில் காங்கிரஸ் கமிட்டி ஊடகப்பிரிவு மாநில பொதுச் செயலாளர் பால் ஜோசப், மூத்த வழக்கறிஞர்கள் பிஸ்மில்லா கான், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கரும்பாலை நாடார்உறவின்முறை சார்பில் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
    • உறுப்பினர்கள் 200 பேர் பால்குடம் எடுத்து வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அபிஷேகம் செய்தனர்.

     மதுரை

    மதுரை கரும்பாலை நாடார்உறவின்முறை சார்பில் காமராஜர் பிறந்த தின விழா நடந்தது. மைக்கேல் ராஜ் தலைமை தாங்கினார். வேல்முருகன், மகளிர் அணியை சேர்ந்த பாக்கியலட்சுமி, கோகிலா மற்றும் ேமாகன், சேகராஜ் முன்னிலை வகித்தனர்.

    மகளிர் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள், உறுப்பினர்கள் 200 பேர் பால்குடம் எடுத்து வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அபிஷேகம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குட்டி என்ற அந்தோணிராஜ், சுவிட்ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நாடார் மேல்நிலை பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது.
    • ஊர்வலம் காந்திசிலை ரவுண்டானா, பழைய பேருந்துநிலையம், ரெயில்வேபீடர்ரோடு வழியாக பள்ளியை சென்றடைந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ெரயில்வேபீடர் ரோட்டில் உள்ள ராஜபாளையம் கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின்முறை தலைவர் ஆதவன் விழாவிற்கு தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி தலைமை உரையாற்றினார்.நாடார் தொடக்க பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளின் செயலர் விஜயராஜன் பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். உறவின்முறை செயலாளர் வெற்றி செல்வன், நாடார் நர்சரி மற்றும் மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயலர் ஆத்தியப்பன், பொருளாளர் பெரியசாமி, தர்மகர்த்தா மதிபாலன், உதவி தலைவர் வடமலையான், உதவி செயலாளர் நாகரத்தினம், இணை தலைவர் மதிபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாள ர்களாக ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா, நாடார் மகாஜனசங்க விருதுநகர் மாவட்ட துணைதலைவர் ஆதிநாராயணகுமார் கலந்து கொண்டு பேசினார்கள்.

    பிளஸ்-2 மாணவி நிவேதாதேவி தன்னலமற்ற பெருந்தலைவர் காமராஜரின் வரலாற்று சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார். உறவின் முறை நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    இலக்கிய மன்றம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழா முடிவில் உதவி தலைமையாசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

    முன்னதாக பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர்கள், தேசிய மாணவர்படை,நாட்டு நலபணிதிட்டம்,பாரத சாரண-சாரணியக்கம், இளஞ்செ ஞ்சிலுவை சங்க உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் நடத்திய எழுச்சிமிகு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்தின் போது பழைய பேருந்துநிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு உறவின்முறை நிர்வாகஸ்தர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் காந்திசிலை ரவுண்டானா, பழைய பேருந்துநிலையம், ெரயில்வேபீடர்ரோடு வழியாக பள்ளியை சென்றடைந்தது.

    • சோழவந்தான் பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • நாம்தமிழர் கட்சி பேரூர் நிர்வாகி சங்கர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெருந்தலைவர் காமராஜ ரின் 120-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதையொட்டி பெரியகடை வீதியில் உள்ள அவரது சிலைக்கு, நாடார் உறவின்முறை பரிபாலன சங்கத்தின் தலைவர் தங்கபாண்டியன், செயலாளர் பி.ராஜகுரு ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அழகர்சாமி, ஜெயராஜ், சீனி வாசன், துரைபாண்டி யன், ஜெயசேகர், பாண்டி யராஜன், ஐஸ்ஜெயராஜ், மீனா, காசியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் துணைதலைவர் லதாகண்ணன், வார்டு உறுபினர்கள் குருசாமி, சத்யபிரகாஷ், முத்துலட்சுமி சதீஸ் மற்றும் பேட்டை பெரியசாமி, பேரூர் செயலாளர் முனியாண்டி, வார்டு செயலாளர் நாகேந்திரன் தவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அ.ம.மு.க. கட்சியின் ஒன்றிய செயலாளர் விரும்பராஜன் தலைமையில் பேரூர் செயலாளர்கள் திரவியம், வாடிப்பட்டி மதன், மதுரை தெற்கு மாவட்ட துணைசெயலாளர் வீரமாரிபாண்டியன், மாவட்ட விவசாய அணி முள்ளைசக்தி மற்றும் வழக்கறிஞர் காசிநாதன், மீனாட்சிசுந்தரம் ஜெயராமன், தவமணி, மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதே போல நாம்தமிழர் கட்சி பேரூர் நிர்வாகி சங்கர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • உசிலம்பட்டி: காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதனைதொடர்ந்து உசிலம்பட்டி-தேனி ரோட்டில் நாடார் உறவின்முறை சார்பாக நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு காமராஜரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி அ.தி.மு.க. நகர செயலாளர் பூமாராஜா, மாநில பேரவை மாநில துணைச்செயலாளர் துரை தனராஜன், வழக்கறிஞர் பிரிவு லட்சுமணன், கோ.ராமநாதன், அடைக்கலம், அ.தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின்120-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
    • காந்தி நினைவு மண்டபம் முன்பு காமராஜரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுஇருந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின்120-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காந்தி நினைவு மண்டபம் முன்பு காமராஜரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுஇருந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்க செயலாளர் தம்பித்தங்கம் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்க தலைவர் மாடசாமி பொருளாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
    • காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. நகர, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பில் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு நகர செயலாளர் துரைமுருகேசன், தெற்கு நகர செயலாளர் பரமசிவம், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம். குருசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் யோக சேகரன், மாவட்ட பேரவை துணைத் தலைவர் திருப்பதி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் குருசாமி, கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி, திருத்தங்கல், விருதுநகரில் காமராஜர் சிலைக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    விருதுநகர்

    பெருந்தலைவர் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது.

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது.

    சிவகாசி, திருத்தங்கல், விருதுநகரில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். சிவகாசி சிவன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி னார்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமி பாண்டியன், சாம் (எ) ராஜா அபினேஷ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, ஆரோக்கியம், வெங்கடேஷ்.

    விருதுநகர் ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், மச்சராசா, விருதுநகர் நகர செயலாளர் நயினார் முகம்மது, சிவகாசி முன்னாள் நகர செயலாளர் அசன்பதுருதீன், சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாவட்டச் செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சியார்பட்டி முருகன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ.காலனி மாரிமுத்து, சிவகாசி இளைஞரணி ஒன்றிய செயலாளர் கே.டி.சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆன்மீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் அவ்வப்போது சில மகான்கள் அவதரிப்பது உண்டு.
    • அப்படி ஒரு அவதாரம் எடுத்து நம்மிடையே வாழ்ந்தவர்தான் காமராஜர்.

    அது காமராஜர் ஆட்சி காலம். அப்போதுதான் அந்த பிரச்சனை எழுந்தது. அதிகாரிகள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். காமராஜர் ஆட்சியில் எழுந்த ஒரே கிசுகிசு, அதுவாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்க காமராஜர் அனுமதி கொடுத்ததுதான்..!

    திண்டுக்கல்லை விட்டு வெகு தொலைவில், தொழிற்சாலை துவங்க அனுமதி கேட்டிருந்தார்கள் ஒரு நிர்வாகத்தினர்.

    ஒவ்வொரு ஊர்களிலும் இப்படி தொழிற்சாலைகளை தொடங்க, ஏராளம் பேர் அனுமதி கேட்டு வரிசையில் காத்திருந்தார்கள்.

    பத்தோடு பதினொன்றாக, அத்தோடு இதுவும் ஒன்றாக பரிசீலனையில் அதை வைத்திருந்தார்கள் அதிகாரிகள்.

    இந்த விஷயம் காமராஜரின் காதுகளுக்குப் போனது. அவசரம் அவசரமாக அதிகாரிகளை அழைத்தார் காமராஜர்.

    'உடனடியாக அந்த திண்டுக்கல்காரர்களுக்கு தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுங்கள்' என்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்தார்.

    காமராஜரின் இந்த உத்தரவை கேட்டவுடன் அதிகாரிகள் குழம்பிப் போனார்கள்.

    'எதற்காக நமது முதலமைச்சர் அந்த திண்டுக்கல் தொழிற்சாலைக்கு இவ்வளவு தீவிரமாக ஆதரவு கொடுக்கிறார் ? ஒருவேளை அந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் நமது முதலமைச்சருக்கு வேண்டியவர்களாக இருப்பார்களோ ?' அதிகாரிகள் இப்படி கிசுகிசுப்பது, காமராஜர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து விட்டது. உடனடியாக அதிகாரிகளை தன் அறைக்கு வரவழைத்தார்.

    "என்ன உங்கள் சந்தேகம் ? கேளுங்கள்!" என்றார்.

    அதிகாரிகள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

    "அவசரம் அவசரமாக அந்த தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க சொன்னேனே... அது ஏன் ? இதுதானே உங்கள் சந்தேகம் ?" தொடர்ந்து கேட்டார் காமராஜர்.

    "திண்டுக்கல் நகரத்துக்கும் அந்த தொழிற்சாலைக்கும் இடையே எத்தனை கிராமங்கள் இருக்கின்றன. அது உங்களுக்கு தெரியுமா?"

    அதிகாரிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். காமராஜரே பதில் சொன்னார்:

    "அறுபது கிராமங்கள்.

    அந்த 60 கிராமங்களுக்கும் இன்னமும் மின்சார வசதி செய்து கொடுக்க நம்மால் முடியவில்லை. காரணம் அதற்குத் தேவையான நிதி வசதி அரசிடம் இல்லை.

    அந்த புதிய தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க, அவர்களுக்கு ஒரு முக்கியமான நிபந்தனையை நான் போட்டு இருக்கிறேன். அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?"

    அதிகாரிகள் காமராஜர் பேசுவதை உன்னிப்பாக கவனித்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

    காமராஜர் போட்ட ஒரே ஒரு நிபந்தனை, புதிதாக தொடங்கவிருக்கும் தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரத்தை திண்டுக்கல்லில் இருந்து கொண்டு வர, அந்தத் தொழிற்சாலை நிர்வாகத்தினர், அவர்களது செலவிலேயே மின்கம்பங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு சம்மதித்து விட்டார்கள் தொழிற்சாலை நிர்வாகத்தினர்.

    இதை அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்ன காமராஜர், "இப்ப சொல்லுங்க. திண்டுக்கல் நகரத்தில் இருந்து, அவர்களது தொழிற்சாலை வரை, அந்த தொழிற்சாலைக்காரர்கள், அவர்களது சொந்த செலவிலேயே மின் கம்பங்களை அமைத்து விடுவார்கள். அதற்குப் பின் நமது வேலை சுலபம்.

    மின்சாரம் இல்லாமல் தவிக்கும் அந்த இடைப்பட்ட 60 கிராமங்களுக்கும், ஏற்கனவே அமைக்கப்பட்ட அந்த மின்கம்பங்கள் மூலமாக, மின்சாரத்தை எளிதாக விநியோகம் செய்து விடலாம். இதனால் அரசாங்கத்துக்கு ஏராளமான மின்கம்பங்கள் அமைக்கும் செலவு மிச்சமாகும். அதற்காகத்தான் உடனடியாக அந்தத் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கச் சொன்னேன். புரியுதா ?"

    ஆச்சரியத்துடன் அசந்து போய் அமர்ந்திருந்தார்கள் அதிகாரிகள்.

    எவ்வளவு ஒரு சமூக அக்கறை ?

    எப்பேர்பட்ட கூர்மையான சிந்தனை !

    அதற்கு முன்னும் சரி. அதற்குப் பின்னும் சரி.

    அந்த அளவுக்கு ஆற்றல் உள்ள, அக்கறை உள்ள அரசியல் தலைவரை, எந்த அதிகாரியும் கண்டது இல்லை.

    இப்படிப்பட்ட காமராஜரை பாராட்டாமல் இருக்க முடியுமா ? பக்கம் பக்கமாக பாராட்டி எழுதினார்கள் பத்திரிகையாளர்கள்..!

    அப்போதுதான் காமராஜரிடமிருந்து, பத்திரிகையாளர்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது.

    என்னவோ ஏதோவென்று விரைந்து சென்று காமராஜரை சந்தித்தார்கள் பத்திரிகையாளர்கள்.

    பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார் காமராஜர். வெகுநேர மௌனத்துக்குப் பிறகு காமராஜர் சொன்ன வார்த்தைகள்:-

    "ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத்தான் உங்களை கூப்பிட்டேன். என்னை பாராட்டி எழுதாதீர்கள்."

    இதைக்கேட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

    தொடர்ந்து காமராஜர் சொன்னார். "நான் நேர்மையோடு இருப்பது பெரிய விஷயம் இல்லை. ஏனென்றால் எனக்கு மனைவியோ குழந்தைகளோ, குடும்பமோ இல்லை. ஆகவே எனக்கு தேவைகளும் எதுவும் இல்லை.

    ஆனால் இந்த கக்கனை பாருங்கள். அவருக்கு குடும்பம் இருக்கிறது. மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர் நேர்மையோடு இருக்கிறாரே..! அதுதானே பெரிய விஷயம். அவரைத்தான் நாம் பாராட்ட வேண்டும். இனிமேல் என்னை பாராட்டி எழுதுவதைவிட கக்கனை பாராட்டி எழுதுங்கள்."

    காமராஜரின் இந்த பக்குவமான பேச்சைக் கேட்ட பத்திரிகையாளர்கள் பரவசமாகிப் போனார்கள்.

    அவர் இப்படி சொல்லிய பிறகு, ஏற்கனவே காமராஜரை பாராட்டி எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள், இன்னும் அதிகமாக அவரை பாராட்டி எழுத ஆரம்பித்தார்கள்.

    இன்றும் கூட பாராட்டி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆன்மீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் அவ்வப்போது சில மகான்கள் அவதரிப்பது உண்டு. அப்படி ஒரு அவதாரம் எடுத்து நம்மிடையே வாழ்ந்தவர்தான் காமராஜர்.

    காமராஜர்... ஒரு சரித்திரப் பொக்கிஷம் !

    - ஜான்துரை ஆசிர்செல்லையா

    • காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் மாறுவேட போட்டிகள் நடந்தது.
    • இதில் 16 பள்ளிகளில் இருந்து 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு 17-ந்தேதி நடக்கும் காமராஜர் பிறந்த நாள் விழாவில் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டார பெருந்தலைவர் காமராஜர் இயக்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் மாறுவேட போட்டிகள் நடந்தது.

    ஓவியம், மாறுவேட போட்டிகள் சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலை பள்ளிலும், மாரியம்மன் இந்து மேல்நிலைப்பள்ளியிலும் கட்டுரை போட்டியும், ஹென்றி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும் பேச்சு போட்டியும் நடத்தப்பட்டது.

    இதில் சாத்தான்குளத்தில் உள்ள 16 பள்ளிகளில் இருந்து 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு 17-ந்தேதி நடக்கும் காமராஜர் பிறந்த நாள் விழாவில் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    போட்டிக்கான ஏற்பாடுகளை ஜான்ராஜா, ராஜேஷ், வேணுகோபால், நேசக்குமார், சுடலைமணி,அருண்குமார், ஏசா,விஜேந்திர பாண்டியன், ஜெபாஸ் ,முத்து சோபன், கண்ணன், முத்துவேல், பாலா , ஆசிர்வாதம் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×