search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எஸ்.டோனி"

    இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் எம்.எஸ்.டோனி ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்தது மற்றும் 300 கேட்ச்கள் பிடித்தது என இரு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். #MSDhoni
    புதுடெல்லி:
        
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனும் ஆன எம்.எஸ்.டோனி இரண்டு உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தவர். அத்துடன் பேட்டிங், விக்கெட் கீப்பர், கேப்டன் பொறுப்பில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது ஒரே போட்டியில் ஐந்து பேட்ஸ்மேன்களை கேட்ச் பிடித்து வெளியேற்றி சாதனை படைத்தார். அத்துடன் 50க்கும் மேற்பட்ட கேட்ச்களை பிடித்த ஒரே விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை எம்.எஸ்.டோனி 319 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10 சதம், 67 அரைசதத்துடன் 9967 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 51.37 ஆகும்.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டோனி 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

    டோனி 33 ரன்கள் எடுத்தபோது, 10 ஆயிரம் ரன்கள் அடித்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் மற்றும் 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்.



    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 18,426 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோரும் 10 ஆயிரம் ரன்களை தாண்டியுள்ளனர். வெளிநாட்டு வீரர்களில் சங்ககரா 14,234, ரிக்கி பாண்டிங் 13,704 ரன்கள் குவித்துள்ளனர்.

    இதேபோல், இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது ஜோஸ் பட்லரை டோனி கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.
    இது அவரது 300வது கேட்ச் ஆகும். 

    ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸி) 417, மார்க் பவுச்சர் (தெ.ஆ) 403, குமார் சங்ககரா (இலங்கை) 402 ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் டோனி நான்காவதாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #MSDhoni
    ×