search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணையதளம்"

    • வீர தீர செயல்புரிந்த குழந்தைகள் பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
    • மத்திய அரசால் பதக்கம், சான்றிதழ், மற்றும் 1,00,000 ரொக்கப்பரிசுடன் வழங்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சுற்றுச்சூழல், சமூகசேவை போன்ற துறைகளில் வீர தீர செயல்புரிந்த குழந்தைகள் பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் 2024-ம் ஆண்டிற்கான பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சுற்றுச்சூழல், சமூகசேவை போன்ற துறைகளில் வீர தீர செயல்புரிந்த குழந்தைகளுக்கு மத்திய அரசால் பதக்கம், சான்றிதழ், மற்றும் 1,00,000 ரொக்கப்பரிசுடன் வழங்கப்படுகிறது. எனவே தகுதியுள்ள 18 வயதிற்குட்பட்ட இந்திய குடிமகனாக இருக்கும் குழந்தைகள் இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 31-ந்தேதி மாலைக்குள் ஆன்லைனில் பதிவு செய்திட மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்்ள செய்தி க்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • கலைஞர் நூலகத்திற்கு தனி இணையதளம் உருவாக்கப்படும்.
    • தினமும் ஏராளமானோர் நூலகத்திற்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் புது நத்தம் சாலையில் ரூ.218 கோடியில் 8 தளங்களுடன் அதிநவீன வசதிகள் கொண்ட நூலகம் கட்டி முடிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து இந்த நூலகம் செயல்பட தொடங்கியுள்ளது. தினமும் ஏராளமானோர் நூலகத்திற்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். பள்ளி, கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் இந்த நூலகத்தை பார்வையி டுவதற்காக அழைத்து வரப்படுகின்றனர்.

    இந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பெயரில் புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் தமிழ்நாடு பொது நூலகத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து www.kalaignarcentenarylibrary.org என்ற பெயரில் புதிய இணையதள பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த இணையதள பக்கம் வாயிலாக நூலகம் பற்றிய தகவல்கள், உறுப்பினர் சேர்க்கை, நூலகத்தில் உள்ள புத்தகங்கள் தொடர்பான விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிப்பது குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

    மேலும் வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களும் பொதுமக்களும் இந்த இணையதள மூலம் புத்தகங்கள், எழுத்தாளர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளும் வசதியும் உள்ளது.

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் உறுப்பினர் சேர்க்கையை விரைவில் ஆன்லைன் முறையில் கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து டுவிட்டர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களையும் கலைஞர் நூலகத்திற்கென உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அரசு பல்வேறு வகையான நலத் திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தற்போது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட உதவிகளைப் பெற தகுந்த ஆவணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு வகையான நலத் திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்று திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கு சிரமமின்றி விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கு ஏதுவாக சில திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தற்போது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதில், கல்வி உதவித் தொகை, உதவி உபகரணங்கள் பெறவும், வங்கிக் கடன் மானியம், திருமண உதவித் தொகை, மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ஆகியவற்றுக்கு தகுந்த ஆவணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.ஆகவே, மேற்கண்ட திட்டங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது இணையதளம் மூலம் விண்ணப்பித்து ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மாணவர்கள் உதவித்தொகை பெற மீண்டும் இணையதளம் தொடக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 30-ந்தேதிக்குள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் கல்வி பயின்ற ஆதி திராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்வத ஆதி திராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கான https:/tnadtwscholarship.tn.gov.in/ என்ற இணையதளம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வருகிற 30ந்தேதிக்குள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. மேலும், காலநீட்டிப்பு வழங்க இயலாத சூழ்நிலையுள்ளதால் குறித்த காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகையினை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இணையதளம் வழியாக வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • விண்ணப்ப கட்டணம் ரூ.50 இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    2023-ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தி லுள்ள தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் சேர்வதற்கு இணையதளம் வாயிலாக வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இந்த விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாற்றுசான்றிதழ் , மதிப்பெண் சான்றிதழ் (8-ம் வகுப்பு, 10, 12-ம் வகுப்பு ), சாதிசான்றிதழ் , முன்னுரிமை சான்றிதழ் (மாற்றுதிறனாளிகள்/விதவை/முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள்/ மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் முதன்மையானவர்/ தாய், தந்தை இழந்த ஆதரவற்ற மாணவர்கள்), புகைப்படம் - 2 , ஆதார் கார்டு ஆகிய அசல் ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம். ஆகஸ்ட்-2023 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்புதேர்ச்சி, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை பயிற்சியில் சேரலாம். முன்னாள் இராணுவத்தினருக்கு 14 முதல் 45 வயது வரை . மாற்று திறனாளிகளுக்கு குறைந்த பட்ச வயது 14 முதல் உட்ச வரம்பு வயது இல்லை. 2020-2021 ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 9-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும், முந்தைய ஆண்டுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 8-ம் வகுப்பு கல்வித் தகுதிக்குரிய தொழில் பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.50 இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும்.

    மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ்பாஸ், வரைபடகருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ. 750வழங்கப்படும்.

    அரசுபள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் உயர்கல்விதிட்டத்தின் கீழ் ரூ.1000 மாதாந்திர கூடுதல் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர்/முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் தஞ்சாவூர் அல்லது அருகிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு 9994043023 , 7708709988 , 9840950504 , 9442220049 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
    • இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதா வது:-

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடை அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கு 20.06.2023 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

    www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள்.20.06.2023.

    இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி. விண்ணப்பக் கட்டணம் ரூ.50 - தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள் தொழிற் பிரிவுகள் இவற்றிற்கான கல்வித் தகுதி வயது வரம்பு இடஒதுக்கீடு ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04365-250129 04369-276060 9487160168 மற்றும் மின்னஞ்சல் முகவரி govtitinagai@gmail.comதொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பகுதி நேரம், முழுநேர எம்.பில்., பி.எச்டி., ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பங்களை https://b-u.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக 30-ந் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    பகுதி நேரம் முழுநேர எம்.பில்., பி.எச்டி., ஆராய்ச்சி படிப்புகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என பாரதியார் பல்கலை அறிவித்துள்ளது.

    விண்ணப்பங்களை https://b-u.ac.in/என்ற இணையதளம் வாயிலாக 15ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக எம்.பில்., படிப்பிற்கு ரூ.750, பி.எச்டி., படிப்புக்கு ரூ.1,000 செலுத்த வேண்டும். விபரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பார்க்கலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1.60 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • 1.57 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு வசதியாக கோவையில் பாஸ்போர்ட் சேவை மையமும் சேலம், ராசிபுரம், குன்னூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களும் செயல்படுகின்றன.

    2022-23ம் ஆண்டில் கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1.60 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1.57 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது 2021ம் ஆண்டை விட 35 சதவீதம் அதிகம்.நடப்பாண்டு மே மாதம் வரை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 78 ஆயிரத்து914 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 76 ஆயிரத்து 134 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பூபதி கணேஷ் கூறுகையில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். பாஸ்போர்ட் குறித்த சந்தேகங்களுக்கு 1800 258 1800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    • ஜூலை 5-ந் தேதி பி.ஏ., தமிழ் இலக்கணம் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
    • புகைப்படம், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தனது பெற்றோர்களை கட்டாயம் அழைத்து வரவேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அரி யலூர் அரசு மேல்நிலை ப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 29-ந் தேதி திங்க ட்கிழமை தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10 மணி அளவில் விளையா ட்டு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. மற்றும் 30-ந் தேதி நடைபெறும் ராணுவம் உள்ளிட்ட சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வில் தரவரிசை பட்டியலில் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் ஜூன் 1-ந் தேதி புள்ளியியல் மற்றும் கணினி அறிவியல் பாட பிரிவில் இணை யதளத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடை பெறும்.

    பின்னர் 2-ந் தேதி வணிகவியல் மற்றும் பொருளி யல் பிரிவு மாணவ ர்களுக்கான கலந்தாய்வும், ஜூலை 5-ந் தேதி பி.ஏ., தமிழ் இலக்கணம் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. எனவே கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், புகைப்படம், வருமானச் சான்றிதழ் ஆகிய வற்றுடன் தனது பெற்றோர்களை கட்டாயம் அழைத்து வரவேண்டும். மேலும் கல்லூரி இணையதள முகவரியில் வெளியிடப்பட்ட கலந்தாய்வு தரவரிசை பட்டியலை பார்வையிட்டு மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என ரிஷிவந்தியம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுமார் ரூ.23 ஆயிரம் மற்றும் இணையதள மோடம் காணாமல் போனது
    • பலசரக்கு கடை பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது

    கன்னியாகுமரி :

    இரணியல்அருகே தலக்குளம் சாலையில் பூங்கா எதிரில் உரக்கடை மற்றும் மாடித்தோட்டம் கடை நடத்தி வருபவர் ஶ்ரீதர் (வயது 48). இவர் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு இன்று காலை சுமார் 8 மணிக்கு கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது சுமார் ரூ.23 ஆயிரம் மற்றும் இணையதள மோடம் காணாமல் போனது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சுந்தர்ராஜ் என்பவர் பலசரக்கு கடை பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

     திருப்பூர் :

    தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கிரைன்ஸ் என்ற இணையதளம் மூலமாக அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் வருவாய்த்துறை, வேளாண்மை, உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, வேளாண் பொறியியல் துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் விற்பனை, கால்நடை பராமரிப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, விதை சான்றளிப்பு, சர்க்கரை துறைகள் இணைக்கப்பட உள்ளது.

    விவசாயிகளின் விவரங்களை ஒற்றை சாளர முறையில் பதிவு செய்வதால் வெவ்வேறு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக ஆவணங்களை சமர்ப்பிக்காமல் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவு செய்யலாம். விவசாயிகள் தங்களின் ஆதார் அடையாள அட்டை, செல்போன் எண், புகைப்படம், வங்கி கணக்கு விவரம், நிலவிவரங்களை தங்கள் கிராம நிர்வாக அலுவலகம், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் தொடர்பு கொண்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அடுத்த மாதம் 18-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • அறிவிப்பு பலகையில் அடுத்த மாதம் 21-ம் தேதி பிற்பகல் 5 மணிக்கு தெரிவிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம்-2009 பிரிவு 12(1) ன்படி சிறுபான்மையற்ற தனியார் கயநிதி பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் (எல்.கே.ஜி) 25 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக வருவாய் ஈட்டும் நலிவடைந்த பிரிவினர் ஆகியோருக்கு சேர்க்கை வழங்கப்படுகிறது.

    வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டு உள்ள ஆதரவற்றோர் , எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர் , மூன்றாம் பாலினத்தவர் , துப்புரவுத் தொழிலாளியின் குழந்தை , மாற்றுத் திறனாளியாக இருக்கும் குழந்தை ஆகிய சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் அரசாணை நிலை எண்.60 பள்ளிக்கல்வித்துறை நாள்.01.04.2013-ன்படி உரிய அலுவலரால் வழங்கப்பட்ட சான்றினை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

    தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள்-2011 விதி எண்.4(1) இன் படி பள்ளியிலிருந்து 1 கி.மீட்டருக்குள் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் அதிக பட்சமாக 5 பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் rte.tnschools.gov.in என்றஇணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகள், வட்டாரக்கல்வி அலுவலகங்கள், வட்டார வள மையங்கள், மாவட்ட க்கல்வி அலுவலகங்கள், தஞ்சாவூர் முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும்இ-சேவை மையங்களில் பெற்றோர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.ஒன்றுக்கும் பேற்பட்ட பள்ளிகளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவற்றில் ஏதேனும் ஒரு பள்ளியில் மட்டும் சேர்ந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, 2023- 24 ஆம் கல்வியாண்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின்படி நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி. , முதல் வகுப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழ் கண்டுள்ள அட்டவணை களின் படி மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 சதவீதத்தின் கீழ் 92 மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 1468 இடங்களும் 159 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் 1454 இடங்களும் என மொத்தம் தஞ்சை மாவட்டத்தில் 251 பள்ளிகளில் 2922 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சிறுபான்மைச்ச தனியார் சுயநிதி பள்ளிகள் தங்கள் பள்ளியில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும். பெற்றோர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் 18ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இணையதளம் வழியாக விண்ணப்பித்த மாணவர்களில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின்படி தகுதி உடைய மற்றும் தகுதியற்ற மாணவர்கள் விபரம் பள்ளி அறிவிப்பு பலகையில் அடுத்த மாதம் 21 ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்கு தெரிவிக்கப்படும்.பள்ளியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் விண்ணப்பம் பெறப்பட்டிருந்தால் குலுக்கல் முறையில் 23-5-23 அன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×