என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 197848
நீங்கள் தேடியது "தேவாலையம்"
கேரள மாநிலத்தில் பாவ மன்னிப்பு கோரிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் மூன்றாவது பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். #Kerala
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பெண் ஒருவர் தன் கணவருக்கு தெரியாமல் செய்த தவறுக்கு மனம் வருந்தி பாவ மன்னிப்பு கேட்பதற்காக கோட்டயம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பாவமன்னிப்பு கேட்பதற்காக நடந்தவற்றை கூற, அதனை பதிவு செய்த பாதிரியார், அதனை வைத்து அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
அவர் மட்டுமன்றி, இன்னும் 4 பாதிரியார்களும் இதேபோன்று அந்த பெண்ணை பயன்படுத்தியுள்ளனர். அவரது கணவர் மூலம் வெளியான இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, கேரள குற்றப்பிரிவு போலீசார் 4 பாதிரியார்கள் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதில் 2 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜான்சன் மேத்யூ எனும் பாதிரியார் பதனம்திட்டா மாவட்டத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, பாதிரியார்களின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Kerala

×

X