search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாகூர்"

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று நாடு திரும்பும் நிலையில், அவரை வரவேற்க காத்திருப்போர் கழுதை கூட்டம் என தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித்தலைவர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார். #Pakistan #NawazSharif #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது பல ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான அவென்பீல்டு வழக்கில் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகன் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், லண்டனில் இருந்த நவாஸ் ஷெரீப் இன்று மாலை 6 மணியளவில் பாகிஸ்தான் வந்தடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவரை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

    அதேசமயம், பாகிஸ்தான் திரும்பும் நவாஸ் ஷெரீப்பை வரவேற்க அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் என பலர் லாகூரில் கூடியுள்ளனர். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடையே பேசிய தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், நவாஸ் ஷெரீப்பை வரவேற்க காத்திருப்பது கழுதை கூட்டம் என கடுமையாக விமர்சித்துள்ளார். இது நவாஸ் ஷெரீப் கட்சியினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #NawazSharif #ImranKhan 
    பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். #PakistanRains
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 38 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 238 மி.மீ அளவு மழை பெய்து பெரும் பகுதியை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. இந்த மழையால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, படகுகள் மூலம் மீட்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மழை பாதிப்பால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துக்களால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும், அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு  மையம் அறிவித்துள்ளதால் மீட்புப்படையினர் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். #PakistanRains
    பாகிஸ்தான் லாகூரில் நடைபெற உள்ள மறைந்த மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவு அஞ்சலியில் பங்கேற்பதற்காக 300 இந்திய சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கியுள்ளது. #Pakistan
    இஸ்லாமாபாத்:

    19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங். பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள குருத்வாரா தேரா சாகிப் ஆலயத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜூன் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடக்க உள்ளது.

    இந்த நினைவு அஞ்சலியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் பாகிஸ்தான் செல்கின்றனர். இதையொட்டி, சீக்கிய யாத்ரீகர்கள் 300 பேருக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வழங்கியுள்ளது. மேலும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி பகுதியில் இருந்து லாகூருக்கு சிறப்பு ரெயிலையும் பாகிஸ்தான் ரயில்வே அறிவித்துள்ளது.  #Pakistan
    ×