search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்பயா"

    மரண தண்டனையை எதிர்த்து டெல்லி நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 3 பேர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள சுப்ரீம் கோர்ட் அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. #NirbhayaVerdict
    புதுடெல்லி:

    டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு, ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஒருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.

    மற்ற குற்றவாளிகளான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு மரண தண்டனை விதித்தது. பின்னர், மேல்முறையீட்டில் இந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. அதன்பின்னர் முகேஷ், பவன், வினய் ஆகியோர், மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அக்‌ஷய் மனு தாக்கல் செய்யவில்லை. 3 பேரின் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, கடந்த மே 4-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதி அசோக் பூஷன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், அவர்களின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தவறை கண்டறிவதில் குற்றவாளிகள் தோல்வியடைந்து விட்டனர். தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளால் மேல்முறையீடு செய்ய முடியுமே தவிர, தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோர முடியாது என தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். #NirbhayaVerdict 
    ×