search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிரடி"

    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். #STR #VP9 #strvp
    ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

    இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது, `வருகிற செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு சிம்பு - வெங்கட்பிரபு இணையும் படத்தின் தலைப்பு வெளியாக இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். 
    முன்னதாக இந்த படத்திற்கு ‘அதிரடி’ என்று தலைப்பு வைத்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜான்வி கபூரின் பெயர்கள் அடிபட்டி வரும் நிலையில், படக்குழு அதனை உறுதிப்படுத்தவில்லை. 

    விரைவில் மற்ற கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #STR #Simbu #VP9
    முஷரப், சிட்ரால் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அளித்த அனுமதியை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிரடியாக திரும்பப் பெற்றனர். #Pakistan #PervezMusharraf
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் சிகிச்சை பெறுவதற்காக செல்வதாக கூறி துபாய் போனார். ஆனால் அவர் அங்கு இருந்து இன்னும் திரும்பவில்லை.

    ஆனால் அவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பினார். அவர் சிட்ரால் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு, நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியது.

    அந்த நிபந்தனையின்படி அவர் தன்மீது உள்ள வழக்கு விசாரணையை எதிர்கொள்வதற்கு லாகூர் கோர்ட்டில் கடந்த 13-ந் தேதி ஆஜராக தவறினார்.

    இதற்கு இடையே தன் மீதான தகுதி நீக்க வழக்கில் பெஷாவர் ஐகோர்ட்டு 2013-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நேற்று 2 மணிக்குள் அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக நீதிபதிகள் கெடு விதித்தனர். ஆனால் அதன்படி அவர் ஆஜராகவில்லை.

    ஆனால் அவரது வக்கீல் கமர் அப்சல், முஷரப் நாடு திரும்ப கூடுதல் அவகாசம் கோரினார். அதைத் தொடர்ந்து அந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    அதே நேரம் முஷரப், சிட்ரால் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அளித்த அனுமதியை நீதிபதிகள் அதிரடியாக திரும்பப் பெற்றனர். இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முஷரப்பின் கனவு பலிக்காமல் போய் விடும் சூழல் உருவாகி உள்ளது.  #Pakistan #PervezMusharraf  #tamilnews
    ×