search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவி"

    • திருமுருகன்பூண்டி நகர அ.தி.மு.க. சார்பில் விவேகானந்தா சேவாலய சிறுவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
    • ஆடைகள், பெட்சீட் ஆகியவற்றையும் வழங்கினார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவேகானந்தா சேவாலய சிறுவர்களை 11 பேரை திருமுருகன்பூண்டி நகர அ.தி.மு.க. சார்பில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட இணை செயலாளரும், திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான லதா சேகர் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் நேற்று நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான ஆடைகள், பெட்சீட் ஆகியவற்றையும் வழங்கினார்கள்.

    இதில் அ.தி.மு.க. திருமுருகன்பூண்டி நகர செயலாளர் பழனிச்சாமி, நகர துணைச் செயலாளரும், கவுன்சிலருமான கார்த்திகேயன், அவைத் தலைவர் மாரிமுத்து, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட தலைவர் கோபால், அம்மா பேரவை ராஜேந்திரன், கவுன்சிலர்கள் நடராஜ், தனலட்சுமி, காயத்ரி, தங்கவேல், பானுப்பிரியா, தங்கம், ரேவதி, வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மாடுகளிடம் கறந்த பாலை சேகரித்து விநியோகம் செய்து வருகிறார்.
    • பல் மருத்துவமனையில் சேர்ந்த போதிலும் தனது பால் விநியோக வேலையை உற்சாகத்துடன் செய்து வருகிறார்.

    பூதலூர்:

    தமிழ்நாட்டில் பல்வேறு நிலைகளில் மாணவியர் தற்கொலை செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதில் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

    இந்த சூழ்நிலையில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாணவி ஒருவர் தற்போது மருத்துவம் படித்தாலும் தன் குடும்ப நலனுக்காகவும் தந்தையின்உதவிக்காகவும் விடுமுறை நாட்களில் வீடுகள் தோறும் மாடுகளை பால் கறந்து பாலை சேமித்து வீடுகள், தேனீர் கடைகளுக்கு வழங்கியும் வருகிறார். ஆணுக்கிங்கே இளைப்பில்லை‌ என்ற மகாகவி பாரதியாரின் கூற்றை நிரூபிக்கும் புதுமைப் பெண் இவர்.

    பூதலூர் ஒன்றியம் செல்லப்பன் பேட்டை கிராமம் வானம் பார்த்த பூமி. இந்த கிராமத்தில் உள்ள 2 ஏரிகள் நிரம்பினால் தான் இந்த கிராமத்தில் விவசாயம் நடைபெறும். இந்த கிராமத்தில் உள்ள விவசாயி நடராஜன்- செந்தமிழ் செல்வி தம்பதியரின் 2வது மகளாக பிறந்தவர் சூரியகலா (வயது21).

    2018ம் ஆண்டில் முழுவதும் தமிழ் வழியில் பயின்ற சூரியகலா யாருடைய உதவியும் இன்றி நீட் தேர்வை எதிர் கொண்டுள்ளார். அதில் 200 மதிப்பெண் பெற்று தனியார் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற போதிலும் தன்னுடைய குடும்ப சூழ்நிலை மனதில் கொண்டு யாரிடம் என்ன எப்படி கேட்பது என்று தயங்கிய நிலையில், இவருடைய உறவினர் ஒருவர் இவரை இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தரிடம் அழைத்துச் சென்று நிலைமையைகூறியுள்ளார். அவர் உடனடியாக பல் மருத்துவமனையில் இடம் கொடுத்து சில சலுகைகளையும் கொடுத்துள்ளார்.

    தற்போது சென்னையில் காட்டாங்குளத்தூரில் பல் மருத்துவமனையில் 4ம் ஆண்டு படித்து வரும் மாணவி சூரியகலா விடுமுறை நாட்களில் செல்லப்பன்பேட்டை கிராமத்திற்கு வரும்போது தனது தந்தையை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, தனது கிராமத்தில் காலையும், மாலையும் இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மாடுகளை கறந்து பாலை சேகரித்து பூதலூர் வரை எடுத்து சென்று விநியோகம் செய்து வருகிறார்.

    இதுகுறித்து கேள்விப்பட்டு அவருடைய கிராமத்திற்கு சென்ற போது தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் பால் கறக்க வேகமாக சென்றவரை தொடர்ந்து போன போது அவர் ஒரு வீட்டில் வண்டியை நிறுத்திவிட்டு கன்று குட்டியை அவிழ்த்துவிட்டு அதை இழுத்துக்கட்டி விட்டு லாவகமாக கீழே உட்கார்ந்து பாலை கறக்கத் தொடங்கினார். கறந்து முடிந்ததும் வீட்டுக்காரர்களுக்கு தேவையான பாலை கொடுத்துவிட்டு மீதத்தை அளந்து அவரிடம் உள்ள பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு, அடுத்த வீட்டிற்கு பறந்து சென்றார்

    ஒவ்வொரு நாளும் காலை 50 லிட்டரும் மாலையில் 40 லிட்டருமாக தானே வீடுகள் தோறும் சென்று கறந்து அவற்றை விநியோகம் செய்து வருகிறார்.எட்டாம் வகுப்பில் இருந்து தனது தந்தைக்கு உதவியாக இந்த செய்து வருவதாக கூறும் சூரியகலா முதலில் இதைஎல்லாம் செய்ய வேண்டாம் என்று தடுத்த தந்தை, காலப்போக்கில் மாடுகளில் பால் கறப்பதற்கான எளிய உத்திகளை சொல்லிக் கொடுத்ததாகவும், அதன் அடிப்படையில் தான் முயற்சி செய்து தற்போது அதை வெற்றிகரமாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

    தொடக்கப் பள்ளியில் படித்த போதும், அதன் பின்னர் உயர்நிலையில் பள்ளியில் படித்த போதும், அதனை தொடர்ந்து பல் மருத்துவமனையில் சேர்ந்த போதிலும் தனது பால் விநியோக வேலையை உற்சாகத்துடன் செய்து வருவதாக கூறும் சூரியகலா,

    தற்போது பயிலும் கல்லூரியில் பாரிவேந்தரின் தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளராக இருப்பதாகவும், கவிதை போட்டியிலும் பரிசு பங்கு பெற்று பரிசு பெற்றிருப்பதாகவும் கூறுகிறார்.

    பல் மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்கவும் உதவிகளை எதிர்பார்க்கும் இந்த மாணவி அதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.ஆனால் எது வந்தாலும் சமாளிப்பேன், தந்தைக்கு உதவியாக இருப்பேன் பல்மருத்துவத்திலும் சாதனை படைப்பேன் என்கிறார் எதிர் கால பல் மருத்துவர் விடுமுறை கால‌பால்கார சூரியகலா!!

    • மக்கள் தொடர்பு முகாமில் 54 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ‌
    • முகாமில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை நகல் தொடர்பான மனுக்கள் அளிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் தண்ணிலப்பாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 54 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ‌

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்சங்கர் தலைமையில் நடை பெற்ற முகாமில் வருவாய்த்துறை சார்பில் 31 பயனாளிகளுக்கும், வேளாண்மை துறை சார்பில் 18 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை துறை சார்பில் 5 பயனாளிகள் என மொத்தம் 54 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.முகாமில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை நகல் தொடர்பான மனுக்கள் அளிக்கப்பட்டது.

    முகாமில் நாகை மாலி எம்.எல்.ஏ, வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராவ், வருவாய் வட்டாட்சியர் ரமேஷ் குமார், வருவாய் ஆய்வாளர் தேவேந்திரன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்பாலசுப்பி ரமணியன், துணை வேளா ண்மைஅலுவலர் ரெங்கநாதன், தண்ணி லப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.

    • சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களைப் பழுது பாா்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-2017-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இதற்கான விண்ணப்பத்தை சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களுடன்மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களைப் பழுது பாா்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-2017-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவாலயத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள், தேவாலய கட்டடத்தின் ஆண்டு ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10- 15 ஆண்டுகள் இருப்பின் ரூ. 1 லட்சமும், 15, -20 ஆண்டுக்குள் இருப்பின் ரூ. 2 லட்சமும், 20 ஆண்டுக்கு மேற்பட்ட தேவாலயத்திற்கு ரூ. 3 லட்சமும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

    இதற்கான விண்ணப்பத்தை சான்றிதழ் மற்றும் உரிய

    ஆவணங்களுடன்மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பபடிவம் மற்றும் சான்றிதழ் இணை யதள முகவரியில் வெளி

    யிடப்பட்டுள்ளது. இதனைப் படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் தலைமையிலான குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதி யின் அடிப்படையில் சிறுபான்மை யினர் நல இயக்குநருக்கு அனுப்பி நிதியுதவி கோரி பரிந்துரை செய்யும்.இந்த நிதி உதவி 2 தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவா்த்தனை மூலம் செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுக லாம். இவ்வாறு அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார வள மையத்தில் நடந்தது.
    • நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பக வடிவு, வட்டார ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து மாற்று திறன் மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கினர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயின்று வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார வள மையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பக வடிவு, வட்டார ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து மாற்று திறன் மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு பயிற்றுநர்கள் அருள்ராஜா, சரவணன், இயன்முறை மருத்துவர் சுஷ்மிதா ஆகியோர் உபகரணங்களின் பயன்பாட்டினை பெற்றோர்களுக்கு விளக்கிக் கூறினர். ஆசிரியர் பயிற்றுநர்கள் முருகேசன், சியாமளா, பகல் நேர பராமரிப்பு மைய ஆசிரியர் வளர்மதி, உதவியாளர் வரதம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • உளவுத்துறையில் சிறப்பான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
    • தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேலம்:

    இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்குவது போல இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி கலவரம் மாநில உளவுத்துறை தோல்வியையே காட்டுகிறது. இதனால் உளவுத்துறையில் சிறப்பான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

    பெரியார் கல்லூரியில் வினாத் தாளில் தாழ்த்தப்பட்ட சாதி எது என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட தலைவர் பெரியசாமி உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • ஆட்டோ தொழிலாளி குடும்பத்துக்கு நலவாரிய நிதி உதவி வழங்கப்பட்டது.
    • அனைத்து தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்து நலவாரிய உதவிகளை பெற வேண்டும் என்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில் ஊரணியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 35), ஆட்டோ டிரைவர். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இவர் சி.ஐ.டி.யு. உறுப்பினர் ஆவார். அவர் நல வாரியத்தில் பதிவு செய்திருந்தார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு நலவாரிய நிதி ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இதுபற்றி ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சி.ஐ.டி.யூ. மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார் கூறும்போது, சிவகங்கை மாவட்டத்தில் 4 ஆயிரம் ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் நலவாரியத்தில் பதிவு செய்யவில்லை. அனைத்து தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்து நலவாரிய உதவிகளை பெற வேண்டும் என்றார்.

    • பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் பயிர் வகை விதைச்சான்றுகளை உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.
    • தரமான விதைகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் நிலக்கடலை, பயறுவகை, நெல், சிறுதானியம் போன்ற பயிர்களில் விதைப்பண்ணைகள் அமைத்து தரமான விதைகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் மேல்சாத்தம்பூர், நடந்தை, ராமதேவம், ஆகிய கிராமங்களில் நிலக்கடலை டிஎம்வி-14, கதரி பிஎஸ்ஆர்-2, தரணி ஜிஜேஜி-32, போன்ற பயிர்களில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விதைப்பண்ணைகளை நாமக்கல் மாவட்ட விதைசான்று உதவி இயக்குநர் சித்திரைசெல்வி ஆய்வு செய்தார். ஆய்வின் போது உதவி விதை அலுவலர் மோகன்ராஜ் உடன் இருந்தார்.

    • பரமத்தி வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
    • மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களும், வீல்சேர், தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து பரமத்திவேலூர் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவர் பழனிவேல் விழாவிற்கு தலைமை தாங்கினார்.

    பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர்சோமசேகர் முன்னிலை வகித்தார். 14-வது வார்டு உறுப்பினர் முருகன், ஹேமாமாலினி, செம்பருத்தி ஆகியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவர் சுரேஷ் வரவேற்று பேசினார்.

    விழாவில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களும், வீல்சேர், தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முடிவில் பரமத்திவேலூர் மாற்றுத்திறனாளி நல சங்க செயலாளர் சதீஸ் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
    • இத்தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களா–கவே வீடு கட்டி கொள்ள நிதியுதவி வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதியுதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இத்தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

    நலவாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்தல் உள்ள தொழிலாளர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சொந்த வீட்டுமனை வைத்திருந்தால் 300 சதுரடி அளவில் வீடு கட்ட இடவசதி இருக்க வேண்டும். இந்நிலம் அத்தொழிலாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரில் இருக்க வேண்டும். நில உரிமைக்கான பட்டா முறையாக பெற்றிருக்க வேண்டும்.

    நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். அத்தொழிலாளியின் ஆண்டு வருவாய் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

    தகுதியானவர்கள் நலவாரிய உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், ஒரு புகைப்படம், வருமான வரி சான்றிதழ் ஆகியவற்றை tnuwwb.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    கூடுதல் விபரம் அறிய ஈரோடு சென்னிமலை சாலை அரசு ஐ.டி.ஐ. பின்புறம் உள்ள ஒருங்கி ணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் இயங்கும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் அல்லது 0424 2275592 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

    இத்தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார். 

    ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர், தான் குடும்பத்துடன் சிறைக்கைதிகளை போல அவதிப்படுவதாகவும் அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    துபாய்:

    கேரளாவை சேர்ந்த மதுசூதனன் கடந்த 1979-ம் ஆண்டு ஷார்ஜா வந்துள்ளார். அங்கு கூலி வேலை செய்த அவர் 1988-ம் ஆண்டில் இலங்கையிலிருந்து வந்து அங்கு கூலி வேலை செய்த ரோகினி என்பவரை திருமணம் செய்துள்ளார். மூன்றாண்டுகளில் அவரது பணி அனுமதிக்காலம் முடிந்ததால் அவர் நாடு திரும்ப வேண்டியிருந்தது.

    ஆனால், ஒரு குழந்தை பிறந்து விட்ட நிலையில் குடும்பத்தை பிரிய முடியாது என்பதால் அவர் அங்கேயே சட்டவிரோதமாக தங்க தொடங்கினார். அதன் பிறகு சரியான வேலை கிடைக்காமல் குடும்பத்தை ஓட்டிய அவருக்கு அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்தன.

    முதல் குழந்தைக்கு மட்டுமே அவரால் பாஸ்போர்ட் பெற முடிந்தது. மதுசூதனன் மற்றும் அவரது மனைவி இரண்டு பேரும் சட்டவிரோதமாக தங்கியுள்ளதால், மற்ற குழந்தைகளுக்கு எவ்வித ஆவணமும் பெற முடியவில்லை. பள்ளிக்கு கூட அனுப்ப முடியவில்லை.

    இதனால், பள்ளி செல்லாமலேயே வளர்ந்த 4 குழந்தைகளுக்கும் அவரது தாயார் வீட்டில் பாடம் சொல்லிக்கொடுக்கிறார். சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேற பல முறை அரசு பொது மன்னிப்பு வழங்கினாலும், தனது குடும்பத்தை விட்டு பிரிய வேண்டும் என்பதால் அவர் அங்கிருந்து வெளியேறவில்லை.

    மனைவி இலங்கையை சேர்ந்தவர், குழந்தைகளுக்கு எந்த ஆவணங்களும் இல்லை இதனால், அவர் இந்தியாவுக்கும் திரும்ப முடியாது. வெறும் பிரெட் மற்றும் தண்ணீரை குடித்து சிறைக்கைதிகளை போல தங்களது வாழ்க்கை நடந்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ள மதுசூதனன், அமீரக அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பஸ்சில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி நடந்த முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, 25.5.2018 அன்று உடன்குடியிலிருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கருங்குளம் கிராமம் அருகே சில சமூக விரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டதில், பேருந்தில் பயணம் செய்த, மெஞ்ஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுடலை மனைவி வள்ளியம்மாள் தீக்காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 31.5.2018 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

    இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வள்ளியம்மாள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    ×