என் மலர்
நீங்கள் தேடியது "slug 200567"
- வெங்கடேஷ் நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
- கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:
இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட நியூ வெங்கடேஷ் நகர் பகுதியில் பூங்காவாக பயன்படுத்தி வரும் இடத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதையறி்ந்த அப்பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் குடிநீர், வாறுகால், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர போதுமான நிதி இல்லை எனக்கூறி வரும் ஊராட்சி நிர்வாகம், பூங்காவாக பயன்படுத்தி வந்த இடத்தில் அதிக நிதியை பயன்படுத்தி அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கு மட்டும் எவ்வாறு நிதி வந்தது? அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி மன்ற நிர்வாகத்தைக் கண்டித்தும், புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்தவுடன் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சீனிவாசன் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாததையடுத்து, புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- தாரமங்கலத்தில் கடந்த பல வருடங்களாக அன்றாட சேகரிக்கும் குப்பை கழிவுகளை சேகரித்து அதனை 25-வது வார்டு சின்னாகவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.
- இதுபற்றி தகவல் அறிந்த கிழக்குபாவடி பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலத்தில் கடந்த பல வருடங்களாக அன்றாட சேகரிக்கும் குப்பை கழிவுகளை சேகரித்து அதனை 25-வது வார்டு சின்னாகவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. அங்கு இந்த குப்பைகள் மலைப்போல் தேங்கி சுகாதார விளைவுகளை ஏற்படுத்தி வந்ததால் அந்த பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், சமூக ஆர்வலர்கள் பசுமை தீர்பாய நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் வந்த நிலையில் நீதிமன்றம் குப்பை கிடங்கை உடனடியாக நகராட்சி நிர்வாகம் வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றம் தீர்ப்பின் படி கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு பல இடங்களை ஆய்வு செய்து வந்த நிலையில் தற்போது 20-வது வார்டு கிழக்கு பாவடி தெரு பகுதியில் கிடங்கு அமைப்பது என்று உறுதி செய்யப்பட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
இதையரிந்த 10,20-வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர், மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பியும், போராட்டம் நடத்தியும் வந்த நிலையில் ஒப்பந்ததாரர் அருள்லட்சுமி நிறுவனத்தினர் பணியை தொடக்க பூமி பூஜை நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த கிழக்குபாவடி பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
நகராட்சிக்கு உட்பட்ட 10,20-வது வார்டு கிழக்குப்பாவடி பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கைத்தறி, விசைத்தறி ஜவுளி தொழில் செய்து வருகிறோம்.இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். மேலும் அரசு ஆரம்ப துணை சுகாதார மருத்துவ மையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,இதனை ஒட்டி விவசாய மற்றும் வேளாண் தோட்டக்கலை அலுவலகமும், தனியார் ஜவுளி நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பணி புரிந்தும் வருகின்றனர்.
இதற்கும் மேலாக இந்த குப்பை கிடங்கு அமையவுள்ள இடத்தை ஒட்டி எங்கள் பகுதியின் குடிநீர் ஆதாரமாக விளங்க கூடிய குறுக்குபட்டி ஏரி அமைந்துள்ளது.இந்த இடத்தில் கிடங்கு அமைவதால் ஏரி நீர்நிலை, கிணற்று நீர், ஆழ்துளை நீர் மாசுபாடு ஏற்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய அதிகாரிகள் பரிசிலனை செய்ய வேண்டும் இல்லை யேல் அடுத்தகட்ட போராட் டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதனை தொடந்து அனைத்து பொதுமக்களும் நகராட்சி அலுவலகம் சென்று தங்களது கோரிக் கையை அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி குப்பை கிடங்கு அமைக்கபடுவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- இந்து முன்னணி நிர்வாகி கைது
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
புத்தளம் அருகே உள்ள உசரவிளையை சேர்ந்தவர் ஜெபசிங் (வயது 35).
புத்தளம் அருகே உள்ள வீரபாகுபதியில் ஜெபசிங் கிறிஸ்தவ கூட்டம் நடத்தினார். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் அங்கு சென்ற சிலர், ஜெபசிங்கை தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்தனர்.
இதுபற்றி ஜெபசிங், சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதில் கிறிஸ்தவ கூட்டம் நடக்கும் போது அரியப ெருமாள்விளையை சேர்ந்த சுரேஷ், மார்த்தாண்டன், புத்தளம் பேரூராட்சி 15- வது வார்டு உறுப்பினர் வீரபாகுபதியை சேர்ந்த விஜயகல்யாணி, கண்ணன், ஜெகன், தெற்கு புத்தளத்தை சேர்ந்த மகாலிங்கம், உசர விளையை சேர்ந்த சுடலைமணி என்ற மணி, ராமு, ஆகிய 8 பேர் மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சுசீந்திரம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் ஆகியோர் 8 பேர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். இதில் ராஜாக்கமங்கலம் ஒன்றிய இந்து முன்னணி பொதுச் செயலாளர் அரிய பெருமாள் விளையை சேர்ந்த சுரேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோவை எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
- வங்கி நிர்வாகத்தினர் இடத்தை அளவீடு செய்ய வந்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த தனபால் என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தை அடமானம் வைத்து கோவை எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் மற்றும் வட்டி முறையாக செலுத்தாததால் நிலத்தை ஏலம் விடுவதாக வங்கி நிர்வாகம் அறிவிப்பு செய்திருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று வங்கி நிர்வாகத்தினர் இடத்தை அளவீடு செய்ய வந்தனர்.
தகவல் அறிந்து இடத்தின் உரிமையாளர் தனபால் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இடத்திற்கு அளவீடு செய்ய செல்வதற்கு வழித்தடம் இல்லாததால் அருகே உள்ள இடத்தின் வழியாக சென்று வங்கி நிர்வாகத்தினர் அளவீடு செய்ய முயன்றனர். அதற்கு அந்த இடத்தின் உரிமையாளர் அனுமதி மறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் இருதரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வழித்தடத்திற்கு உரிய ஆவணங்கள் கொண்டு வருவதாக வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்க பட்டதை அடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனம் தொடங்கியது.
- செல்போன் கோபுரம் பணியை தொடங்கக்கூடாது என வலியுறுத்தியும், எதிர்ப்பு தெரிவித்தும் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவ ட்டம் பேராவூரணிபேரூராட்சிக்கு உட்பட்ட நாட்டாணிக்கோட்டை பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்க முடிவு செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை அந்த தனியார் நிறுவனம் தொடங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று (சனிக்கிழமை) தனியார் நிறுவனத்தினர் செல்போன் அமைக்கும் பணியை தொடங்கினர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவீந்திரன் (வயது37) என்பவர் செல்போன் (டவர்) கோபுரம் பணியை தொடங்கக்கூடாது என வலியுறுத்தியும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவீந்திரன் கையில் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த னர். பின்னர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்ததால் பரபரப்பு
- பேரூராட்சி செயல் அலுவலர் மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்
கன்னியாகுமரி:
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை பொது இடத்தில் விடாமல் வீட்டுக்குள்ளேயே உறிஞ்சிக் குழாய் அமைத்து விட வேண்டும் என்று பொதுமக்களை அரசு அறிவுறுத்தி உள்ளது.இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். இருப்பினும் அதை பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றி வருகிறது.
இந்த நிலையில் கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சில வார்டு பகுதிகளில் உள்ள ஒரு சில வீடுகளில் கழிவு நீர் வெளியேறும் குழாய் பேரூராட்சி சார்பில் அடைக்கப்பட்டது.
இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கொட்டாரம் ராமநாதபுரம் ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான தலைவர் சிவசுப்பிரமணியம், கொட்டாரம் கீழத்தெரு ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் ஐயப்பன் மற்றும் கொட்டாரம் வடக்கு தெரு ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் ஏ. பிச்சமுத்து ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜ நம்பி கிருஷ்ணன், கொட்டாரம் பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலர்செல்வன் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது இந்த 3 தெரு நிர்வாகம் சார்பில் கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேறும் குழாயை நிரந்தரமாக அடைப்பதற்கு பதிலாக பாதாள சாக்கடை திட்டம் அல்லது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து மாற்று ஏற்பாடு செய்யும்படி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் இது பற்றி மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறி அதற்கான நடவடிக்கை எடுக்க இருப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்த பொதுமக்கள் அங்குஇருந்து கலைந்து சென்றனர்.
- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- காரைக்கால் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செயலாளர் தமீம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
புதுச்சேரி:
காவிரி டெல்டா மாவட்டங்களில், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் கேஸ் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காரைக்காலில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரைக்கால் நிரவி சாலையில், ஓ.என்.ஜி.சி அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய சங்க தலைவர் முத்துகுமரசாமி, விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பால்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் பழனிவேல், பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க தமிழ்மாநில பொது செயலாளர் அமிர்தலிங்கம், புதுச்சேரி மாநில தலைவர் வின்சென்ட், காரைக்கால் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செயலாளர் தமீம் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களில், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எடுப்பதை மறு பரிசீலனைச் செய்ய வேண்டும். என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களில், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் கேஸ் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
- தற்போது இந்த கிராமப் பகுதியில் ரெயில்வே தரைப்பாலம் புதியதாக அமைக்க உள்ளனர்.
- இந்த பாலத்தின் வழியாக லாரிகள் மூலம் வெளிப்பகுதிகளுக்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்ல முடியாது.
சேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தையொட்டி பொர்படா குறிச்சி, விலம்மார் கிராமம், காட்ட நந்தல் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர், மேலும் இங்கு வசிப்பவர்கள் விவசாயம், அரிசி ஆலை, நாட்டு சர்க்கரை ஆலை ஆகிய தொழில்களை செய்து வருகின்றனர்.
இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை பல்வேறு இடங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்வதற்கு தச்சூர் கிராமம் வழி முக்கிய இடமாக உள்ளது. தற்போது இந்த கிராமப் பகுதியில் ரெயில்வே தரைப்பாலம் புதியதாக அமைக்க உள்ளனர்.
அவ்வாறு தரைப்பாலம் அமைத்தால், இந்த பாலத்தின் வழியாக லாரிகள் மூலம் வெளிப்பகுதிகளுக்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்ல முடியாது. எனவே அதற்கு பதிலாக இந்தப் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் ஏராளமானோர் சேலம் ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். ரெயில்வே கோட்ட மேலாளரிடம் அவர்கள் மனு கொடுத்தனர்,
- குமாரபாளையம் வார சந்தையில் நூலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் (பொறுப்பு) கமிஷனர் மனு கொடுத்துள்ளனர்.
- ஏற்கனவே கட்டிடம் கட்டும் இடம் அருகில் ஒரு நூலகமும், கவுரி தியேட்டர் அருகிலும் 2 நூலகங்கள் உள்ளன.
குமாரபாளையம்:
குமாரபாளையம் வார சந்தையில் நூலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் (பொறுப்பு) கமிஷனர் ராஜேந்திரனிடம் மனு கொடுத்துள்ளனர். அதில் அறிவுசார் நூலகம் கட்ட வார சந்தையை தேர்வு செய்து கட்டுமான வேலைகள் நடந்து வருகிறது. ஏற்கனவே கட்டிடம் கட்டும் இடம் அருகில் ஒரு நூலகமும், கவுரி தியேட்டர் அருகிலும் 2 நூலகங்கள் உள்ளன.
நகரின் மையப்பகுதியான பழைய சார்பதிவாளர் அலுவலகம் அருகே அரசு இடம் உள்ளது. அங்கு அறிவுசார் நூலகம் கட்டினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும். மேலும் வார சந்தையில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் பரப்பளவு குறுகி வருகிறது. இதனால் வார சந்தை நாட்களில் சந்தை வளாகத்தில் கடை அமைக்க முடியாமல் சாலையில் கடைகள் அமைத்து போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
திருவிழா சமயத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்த இந்த வார சந்தையைதான் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே வார சந்தையில் நூலகம் கட்டுமான பணியை, பரிசீலித்து பழைய சார்பதிவாளர் அலுவலகம் அருகில் நூலகம் அமைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
- ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.
- தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை, மாவட்ட ஆட்சியர், ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை, மாவட்ட ஆட்சியர், ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
மேலும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம், நடத்தி வந்தனர்.இந்த நிலையில் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், கருப்புக் கொடிகளை அவிழ்த்துவிட்டு வீடுகளில் தேசியக் கொடிகளை ஏற்றி வைத்தனர் .இந்நிலையில், நேற்று மீண்டும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எரிவாயு தகன மேடைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- கீழக்கரையில் ‘அல்வா’ கொடுக்கும் போராட்டம் நடந்தது.
- காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.வை கண்டித்து வீரகுல தமிழர் படை சார்பில் நடந்தது.
கீழக்கரை
கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையை மேம்படுத்த கோரியும், சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ.வை கண்டித்து வீரகுல தமிழர் படை சார்பில் பொதுமக்களுக்கு 'அல்வா' கொடுக்கும் போராட்டம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், வி.சி.க. முன்னாள் மாவட்ட செயலாளர் வேந்தை சிவா, நகர் செயலாளர் பாசித் இலியாஸ், சி.பி.எம். ரெட் ஸ்டார் மாவட்ட செயலாளர் யோகேஸ்வரன், ம.நே.ம., கட்சி செய்யது இப்ராகிம், வீர குல தமிழர் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மது கணேஷ் உள்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.
- தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
- பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்பட்டது
கன்னியாகுமரி:
திங்கள் நகர் பேரூராட்சி யின் சாதாரண கூட்டம் தலைவர் சுமன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர் கள் கலந்து கொண்டனர்.
ரூ. 15 லட்சம் செலவில் எலக்ட்ரிக் வேலை மேற்கொள்வது, ரூ.1 கோடி செலவில் மீன் சந்தை புதிய கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், கூடுதல் செலவாக ரூ. 50 லட்சம் செய்ய வேண்டும்.
பஸ்நிலையத்தில் வேகத்தடை உயரத்தை குறைப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் வைக்கப்பட்டன. ஆனால் ஏற்கனவே முடிவு பெற்ற பணிகளுக்கு மீண்டும் செலவு செய்ய இருப்ப தாகவும், மதிப்பீடு செலவு கள் அதிகமாக இருப்ப தாகவும் கூறி மொத்த தீர்மானங்களையும் நிறைவேற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஜெயசேக ரன், சரவணன், முத்துக் குமார், கவுதமி, சுஜாதா, காங்கிரஸ் கட்சி கவுன்சி லர்கள் பீட்டர் தாஸ், சுகன்யா மற்றும் ஹேமா ஆகிய 8 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அவர்களுடன் செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் பேச்சு வார்த்தை நடத்தினார். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. மதியம் தொடங்கிய போரா ட்டம் இரவு 7 மணி வரை நீடித்தது. இது தொடர்பாக இரணியல் போலீஸ் நிலைய த்திற்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், பேரூராட்சி அலுவலகம் வந்து போரா ட்டத்தில் ஈடுபட்ட கவுன்சி லர்கள் மற்றும் செயல் அலுவலர் எட்வின் ஜோசி டம் தனித்தனியாக பேசினார். செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் கூறும் போது, தீர்மானம் ரத்து செய்ய வேண்டும் என்று கவுன்சிலர்கள் கேட்கி றார்கள். நாங்கள் ஓத்தி வைக்கலாம் என்று கூறு கிறோம் என்றார்.
உள்ளிருப்பு போராட்ட த்தில் ஈடுபட்ட கவுன்சில ர்கள் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பின்னர் தங்களுக்குள் பேசி முடிவு சொல்கிறோம் என்று கூறினர். தொடர்ந்து பேச்சு வார்த்தை யில் முடிவு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் திங்கள் நகர் பேரூராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.