என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி மாயம்"

    • இணையத்தை தணிக்கை செய்வது சாத்தியமில்லை.
    • பெற்றோரின் கவலைகள் தீர்க்கப்பட வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர் கோடு பைவளிக்கே பகுதியை சேர்ந்த 15வயது சிறுமி, கடந்த மாதம் வீட்டிலிருந்து திடீரென மாயமானார். அவர் அதே பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க ஆட்டோ டிரைவர் ஒருவருடன் சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர்களது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் 25 நாட்களுக்கு மேல் ஆகியும் தங்களது மகளைப்பற்றி எந்த தகவலும் தெரியாததால், மாணவியின் பெற்றோர் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மாயமான சிறுமியை கண்டுபிடிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்பேரில் சிறுமியை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். மாயமான இருவரின் செல்போன் சிக்னல்களை வைத்து போலீசார் தேடினர்.

    மேலும் அவர்கள் வீடு இருந்த பகுதியை ஒட்டியிருக்கும் வனப்பகுதியில் டிரோன்களை பயன்படுத்தி தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது அந்த மாணவி, ஆட்டோ டிரைவருடன் காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி மாயமான விவகாரத்தில் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு, போலீசாருக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் சினேகலதா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:-

    மைனர் பெண் மற்றும் பெண் காணாமல் போனதாக புகார் வந்தவுடன் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும். புகாரின் செல்லுபடி தன்மையை முதல் கட்டத்தில் ஆராய வேண்டிய அவசியமில்லை. மைனர் குழந்தைகள் காணாமல் போனதாக கேள்விப்படும் போது, விசாரணை அதிகாரியின் மனதில் போக்சோ பிரிவு இருக்க வேண்டும்.

    பைவளிக்கேயில் காணாமல் போன சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணையை தவறாக கூற முடியாது. அந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கும் ஒரு குறிப்பாணையை காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும்.

    அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தை 30-வது நாளில் இறந்து கிடந்த சம்பவத்தில் பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தாங்க முடியாதது. அது அந்த குழந்தையின் பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். விசாரணை பொருத்தமானதல்ல என்ற பெற்றோரின் கவலைகள் தீர்க்கப்பட வேண்டும்.

    'கோவிட்' காலத்திற்கு பிறகு உலகம் நிறைய மாறி விட்டது. குழந்தைகள் பல தாக்கங்களுக்கு ஆளாகின்றனர். சமூக ஊடகங்கள் மற்றும் சினிமாவை கட்டுப்படுத்துவது மட்டும் போதாது. இணையத்தை தணிக்கை செய்வது சாத்தியமில்லை.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • தோழிகள் இருவரும் மனக்குப்பத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாக படித்து வருகின்றனர்.
    • உனது மகளால் தான் எனது மகள் காணாமல் போய்விட்டார் என்றுகூறி அவரை தாக்கியுள்ளனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பூசாரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிவபாலன் மகளும் தோழிகள். இருவரும் மனக்குப்பத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாக படித்து வருகின்றனர். இந்நிலையில் சிவபாலன் மகள் அடிக்கடி வீட்டில் இருப்பவர் திடீரென்று காணாமல் போய் விட்டு திரும்ப வீட்டுக்கு வந்து விடுவார். கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்த சிவபாலன் மகள் திடீரென காணாமல் போய்விட்டார். அவர் வீட்டில் இருந்த பெற்றோர் எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தனர் ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    ஆத்திரமடைந்த சிவபாலன் , அவரது மனைவி ராதா,உறவினர்கள் ரங்கசாமி, கலியம்மாள் ஆகிய 4 பேரும் சேர்ந்து சிவலிங்கம் வீட்டிற்கு சென்று சிவலிங்கம் மனைவி மகாலட்சுமியிடம் உனது மகளால் தான் எனது மகள் காணாமல் போய்விட்டார் என்றுகூறி அவரை தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த மகாலட்சுமி திருக்கோ விலூர் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • உறவினரான தாய் மாமாவை திருமணம் செய்து வைப்பதாக சிறுமியின் வீட்டில் ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
    • சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அரசூரில் உள்ள தனியார் கல்லூரியில் இ.சி.இ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு இவரது உறவினரான தாய் மாமாவை திருமணம் செய்து வைப்பதாக சிறுமியின் வீட்டில் ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதை அறிந்த சிறுமி எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் நான் படித்து முடித்த பின்னர் பார்க்கலாம் என்று மறுத்துவிட்டார். ஆனால் சிறுமியின் பெற்றோர் இதைக் கேட்காமல் மீண்டும் திருமண ஏற்பாடுகளை செய்தனர். திருமணம் செய்ய விருப்பம் இல்லாத சிறுமி நேற்று இரவு 11 மணி அளவில் நான் எங்கேயாவது ஆசிரமத்திற்கு செல்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு சென்றார்.

    இன்று காலை பெற்றோர் எழுந்து பார்த்தவுடன் சிறுமி மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து வீட்டை விட்டு சென்ற சிறுமி எங்கு சென்றார் என்பது குறித்து கடிதம் மூலம் விசாரணை நடத்தி வருகிறார். 

    • விருதுநகரில் காப்பகத்திலிருந்து வீடு திரும்பிய சிறுமி மீண்டும் மாயமானார்.
    • இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்த மைனர் பெண் சம்பவத்தன்று திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காரியாபட்டியை சேர்ந்த முனியசாமி என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் துரித நடவடிக்கை எடுத்து அந்த சிறுமியை மீட்டு முனியசாமியை கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமி விருதுநகரில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காப்பகத்தில் இருந்த சிறுமி வீட்டுக்கு திரும்பினார். சம்பவத்தன்று காரியா பட்டிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சிறுமி அதன் பின் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இது குறித்து திருச்சுழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் நீராவி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). இவர் ஊர், ஊராக சென்று பலகாரம் தயார் செய்யும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஈரோட்டுக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற செந்தில்குமார் பின்னர் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை.

    இது குறித்து அவரது மனைவி முத்துமீனா கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்னசேலம் அருகே வீட்ைட விட்டு சென்ற சிறுமி மாயமானார்.
    • 5 .30 மணிக்கு எழுந்து அப்பா செல்லமுத்துவிடம் பாத்ரூம் சென்று விட்டு வருகிறேன் என்று கூறி சென்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் மேலூர் கிராமம் அருகே கீழ்பூண்டியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் வழக்கம் போல் இரவு வீட்டில் தூங்கினார். பின்னர் அதிகாலை 5 .30 மணிக்கு எழுந்து அப்பா செல்லமுத்துவிடம் பாத்ரூம் சென்று விட்டு வருகிறேன் என்று கூறி சென்றார்.

    அதன் பின்னர் அந்த சிறுமி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் செல்லமுத்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் உள்ள இடங்களிலும், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால் செல்லமுத்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து மாயமான சிறுமியை சின்னசேலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்த கீர்த்தனா திடீரென மாயமானார்.
    • மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரூர்,

    தருமபுரியை அடுத்த மொரப்பூர் அம்பாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம்கி மகள் கீர்த்தனா(வயது 24). பி.இ. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த 24-ம் தேதி, வீட்டில் இருந்த கீர்த்தனா திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தாய் கிருஷ்ணம்மாள் அளித்த புகாரின் பேரில், மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் அரூர் எஸ்.பட்டியை சேர்ந்த ரமேஷ்குமார் மகள் திரிஷா(17). பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த 19-ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்ப வில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை.

    இது குறித்து ரமேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், அரூர் போலீசார் வழக்குபதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது சிறுமி.
    • சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை

    கோவை சூலூரை சேர்ந்தவர் கார்த்திபன். இவரது மகள் சவுந்தர்யா (வயது 20). இவர் ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    அதன் பின்னர் அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து கார்த்திபன் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சவுந்தர்யாவை தேடி வருகின்றனர்.

    பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.சம்பவத்தன்று அவர் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

    கோவை இருகூரை சேர்ந்தவர் சக்தி வடிவேல். இவரது மகள் சுவாதி (20). இவர் கள்ளிமடை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று சுவாதி செல்போனில் யாரிடமே பேசி கொண்டு இருந்தார்.

    சிறிது நேரத்தில் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார்.

    அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாதியை தேடி வருகின்றனர்.

    கோவை பீளமேட்டை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் பவித்ரா (19). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு சென்றனர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் பீளமேடு போலீசார் பவித்ராவை தேடி வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சிறுமி உள்பட 4 பேர் மாயமானதாக புகார் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமியை அவரது தந்தை துணிக்கடையில் வேலை செய்ய விட்டுவிட்டு சென்றார்.
    • இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், சூளைமேனி ஊராட்சி, கையடை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தண்டலம் பஜார் வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் காலை இருசக்கர வாகனத்தில் சிறுமியை அழைத்து வந்து அவரது தந்தை துணி கடையில் வேலை செய்ய விட்டுவிட்டு சென்றார். ஆனால், அன்று இரவு சிறுமி வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.எனவே, காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு சிறுமியின் தந்தை நேற்று இரவு பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே, போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமி குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • மதுரை அருகே சிறுமி மாயமானார்.
    • திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை சிம்மக்கல் வெங்கடசாமி நாயுடு அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மகள் தர்ஷினிபிரியா(வயது15). நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் இருந்து யாரிடம் சொல்லாமல் வெளியேறிய இவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடிப் பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார்
    • போலீசார் தொடர்ந்து மாணவியை தேடி வருகின்றனர்.காணாமல் போன போது, பச்சை நிற சுடிதார், பேன்ட் அணிந்திருந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த அவிநாசி, பச்சம்பாளையம், காந்திநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வந்தது. அதில் அந்த மாணவி தேர்ச்சியும் பெற்றார்.

    இந்நிலையில் வீட்டிலிருந்த சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர். ஆனால் சிறுமியை எங்கும் காணவில்லை. பின்னர் இது குறித்து அவிநாசி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார் .இதனை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.

    இதனால் தான் மாணவி வீட்டை விட்டு வெளியேறி சென்று இருப்பது தெரியவந்தது .போலீசார் தொடர்ந்து மாணவியை தேடி வருகின்றனர்.காணாமல் போன போது, பச்சை நிற சுடிதார், பேன்ட் அணிந்திருந்தார். அவரை கண்டவர்கள் 94981 01328 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    • தீபக் குமார் பாண்டே உடன் வந்த அவரது மகள் ஆதியா திடீரென காணாமல் போனார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    பீகார் மாநிலம், ராஜ்பூரை சேர்ந்தவர் தீபக் குமார் பாண்டே. இவரது மகள் ஆதியா (வயது4) இவர்கள் உறவினர்களுடன் நேற்று திருப்பதிக்கு தரிசனத்திகாக சென்றனர்.

    பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பஸ்சில் வந்த தீபக் குமார் பாண்டேயுடன் வந்தவர்கள் ஜி.என் சி பஸ் நிறுத்தத்தில் இறங்கினர்.

    நேற்று திருப்பதி மலையில் தரிசனத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபக் குமார் பாண்டே உடன் வந்த அவரது மகள் ஆதியா திடீரென காணாமல் போனார்.

    தன்னுடன் வந்தவர்களின் குழந்தையுடன் ஆதியா சென்று இருக்கலாம் என திருமலை முழுவதும் தேடிப் பார்த்தனர். இரவு வரை தேடியும் சிறுமியை காணவில்லை. இது குறித்து திருமலை போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் சிறுமி மாயமானாரா? அல்லது யாராவது கடத்தி சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமியை எங்காவது பார்த்தால் உடனடியாக தேவஸ்தான அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    • கோகிலாவின் தோழியின் கணவர் பாண்டியன் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
    • அரக்கோணம் ரெயில்வே போலீசார் திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் மீட்டு ராணிப்பேட்டை குழந்தைகள் நல அலுவலரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி மேகலா (27) கூலி தொழிலாளி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கோகிலாவின் தோழியின் கணவர் பாண்டியன் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால் கோகிலாவின் 10 வயது சிறுமியை கடைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமி மாயமாகியுள்ளார். அரக்கோணம் ரெயில்வே போலீசார் திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் மீட்டு ராணிப்பேட்டை குழந்தைகள் நல அலுவலரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். ராணிப்பேட்டை குழந்தைகள் நல அலுவலர் அந்த சிறுமியை வேலூர் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் வேலூர் குழந்தைகள் நல காப்பகத்திற்கு சென்று அங்கு இருந்த சிறுமியை மீட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ×