என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையிகோவையில்சிறுமி-3 கல்லூரி மாணவிகள் மாயம்
- பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது சிறுமி.
- சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை
கோவை சூலூரை சேர்ந்தவர் கார்த்திபன். இவரது மகள் சவுந்தர்யா (வயது 20). இவர் ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வீட்டில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
அதன் பின்னர் அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர்.
ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து கார்த்திபன் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சவுந்தர்யாவை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.சம்பவத்தன்று அவர் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
கோவை இருகூரை சேர்ந்தவர் சக்தி வடிவேல். இவரது மகள் சுவாதி (20). இவர் கள்ளிமடை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று சுவாதி செல்போனில் யாரிடமே பேசி கொண்டு இருந்தார்.
சிறிது நேரத்தில் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார்.
அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாதியை தேடி வருகின்றனர்.
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் பவித்ரா (19). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு சென்றனர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் பீளமேடு போலீசார் பவித்ராவை தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சிறுமி உள்பட 4 பேர் மாயமானதாக புகார் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.