search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர்"

    • கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    • விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார்.

    கன்னியாகுமரி:

    கோவா மாநில கவர்னர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை நாளை (11-ந்தேதி) மதியம் 1 மணிக்கு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அவர் பிற்பகல் 2 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். மாலை 4.30 மணிக்கு விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தர்கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தா சபாக்கிரகத்தில் நடக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 52- வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றியதை நினைவு கூறும் விழா ஆகிய விழாக்களில் பங்கேற்கிறார்.

    இந்த தகவலை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்தார். கோவா கவர்னர் கன்னியாகுமரி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • கோவிட் தொற்று நோய் இன்னமும் இங்கே உள்ளது என்பது நாம் அனைவரும் அறிவோம்.
    • பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோவிட் தொற்று நோய் இன்னமும் இங்கே உள்ளது என்பது நாம் அனைவரும் அறிவோம். பொதுமக்கள் பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் இறந்தும் உள்ளனர். தடுப்பூசி எடுத்துக் கொள்வதே பாதுகாப்பு ஆகும் .

    இந்தியா முழுவதும் தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறந்த முறையில் நடை பெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 200 கோடி அளவிலான தடுப்பூசி செலுத்தும் பணி கடந்து உள்ளது.

    தொடரும் கோவிட் தொற்றை கருத்தில் கொண்டு, நமது பாரதப் பிரதமரின் தொலை நோக்குப் பார்வை கொண்ட இந்திய அரசு, 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைத்து பொது மக்களுக்கும் இலவச கோவிட் பூஸ்டர் டோஸ்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

    ஏராளமான சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு முகாம்கள் நமது இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு நினைவாக 75 நாட்கள் நடைபெறுகிறது.என் அன்பான சகோதர, சகோதரிகளே, நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி மாவட்டத்தில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
    • கவர்னர் வருகை தரும் இடங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோவிந்தப் பேரி கிராமத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஷோகோ கார்ப்பரேஷனின் நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.

    நாளை (18-ந் தேதி) தூத்துக்குடி வருகை தர உள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது அவர் தனது நண்பரான ஸ்ரீதர் வேம்புவுடன் கலந்துரையாடுகிறார்.

    மேலும் அருகிலுள்ள கிராமமான ராஜாங்க புரத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் வளாகத்தில் கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளார். அதனை தொடந்து அங்குள்ள பள்ளியை பார்வையிடும் கவர்னர் அதன்பின்னர் ராஜங்க புரத்தில் நடைபெறும் மிருதங்க கச்சேரியில் கலந்து கொள்கிறார்.

    இதனையடுத்து அந்த பகுதிகளில் சாலைகளில் உள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் மற்றும் கவர்னர் வரும் பாதைகளை பார்வையிடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளது.

    மேலும் ஸ்ரீதர் வீட்டில் கவர்னர் வருகைதரும் இடங்களையும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது தென்காசி மாவட்ட கோட்டாட்சியர் கங்காதேவி, தாசில்தார் அருணாச்சலம் , கடையம் ஆணையாளர் முருகையா, பஞ்சாயத்து தலைவர்கள் கோவிந்த பேரி டி.கே.பாண்டியன், மந்தியூர் கல்யாணசுந்தரம்,தென்காசி எஸ்.பி. எஸ்.ஐ. முத்து கணேஷ்,

    எஸ்.பி. தனிப்பிரிவு ஏட்டு முருகன், ரவி, கிராம நிர்வாக அதிகாரி அண்ணாமலை, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் திருமலைக்குமார் ஆகிய அதிகாரிகள் உடனிருந்தனர்.

    நாளை கடையம் பகுதிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வர உள்ளதால் அப்பகுதி மக்கள் பரவசத்தில் உள்ளனர்.

    கேரள கவர்னர் மாளிகைக்கு சொந்தமான கார் வேகமாக சென்றதற்காக மோட்டார் வாகன துறை அபராத நோட்டீஸ் அனுப்பிய நிலையில், சமரசமின்றி அபராதத்தை கட்ட அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கடந்த ஏப்ரல் மாதம் கேரள கவர்னர் சதாசிவம் பயணிக்கும் மெர்சீடிஸ் கார் ராஜ்பவன் அருகே வேகமாக சென்றுள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களை அடையாளம் காட்ட அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமரா, கவர்னரின் காரை புகைப்படம் எடுத்து மோட்டார் வாகன துறைக்கு அனுப்பியுள்ளது.

    இதனை அடுத்து, வேகமாக சென்றதற்காக ரூ.400 அபராதம் கட்ட வேண்டும் என கவர்னர் மாளிகைக்கு மோட்டார் வாகன துறை நோட்டீஸ் அனுப்பியது. தான் காரில் இல்லை என்றாலும், கவர்னர் மாளிகைக்கு சொந்தமான கார் என்பதால், அந்த அபராதத்தை எவ்வித சமரசமும் இல்லாமல் கட்ட வேண்டும் என கவர்னர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார்.

    ஒரு நாளைக்கு இதுபோல மூன்றாயிரம் கார்கள் பிடிபடுவதாகவும், இதன்மூலம் மாதம் இரண்டு கோடி வரை அபராதம் வசூலிக்கப்படுவதாகவும் மோட்டார் வாகன துறை தெரிவித்துள்ளது. 
    மாநில கவர்னர்களுக்கான மாத ஊதியம் ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனை மறுத்து பழைய ஊதியமே போதும் என சத்தீஸ்கர் கவர்னர் பால்ராம்ஜி தாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
    ராய்ப்பூர்:

    நாட்டின் அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்களுக்கான ஊதியம் கடந்த மார்ச் மாதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சமாக ஊதியம் உயர்த்தப்பட்டது. இந்த ஊதிய உயர்வு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தை முன் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, 26 மாதங்கள் நிலுவைத்தொகையுடன் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், சத்தீஸ்கர் கவர்னராக உள்ள  பால்ராம்ஜி தாஸ் ஊதிய உயர்வை ஏற்க மறுத்து கடந்த மாதம் கடிதம் எழுதியுள்ள நிகழ்வு தற்போது வெளியாகியுள்ளது. பழைய ஊதியமே தனக்கு போதுமானதாக இருப்பதாகவும், புதிய உயர்த்தப்பட்ட ஊதியம் தேவையில்லை என பால்ராம்ஜி தாஸ் அம்மாநில கணக்குப்பிரிவு தலைவருக்கு (தணிக்கை) கடிதம் எழுதியுள்ளார்.

    பால்ராம்ஜி தாஸின் கோரிக்கையை ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கணக்குப்பிரிவு தலைவர் பழைய ஊதியமே அவருக்கு செலுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
    மத்திய அரசின் திட்டங்களின் மூலம் மக்கள் அதிகபட்ச பலன்களை பெற உதவுவதில் மாநில கவர்னர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். #centralschemes #GovernorsConference #Modi
    புதுடெல்லி:

    அனைத்து மாநில கவர்னர்கள் பங்கேற்கும் 49-வது மாநாடு ஜனாதிபதி மாளிகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதல் நாளான இன்று நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடக்கவுரை ஆற்றினார்.

    பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் திட்டங்களின் மூலம் மக்கள் அதிகபட்ச பலன்களை பெற உதவுவதில் மாநில கவர்னர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


    நமது நாட்டின் அரசியலமைப்பு முறை மற்றும் கூட்டாட்சி தத்துவத்தில் முதுகெலும்பாக கவர்னர் பதவி முக்கியப் பங்கு வகித்து வருகிறது. நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியின மக்களின் பங்களிப்பு முக்கியத்துவமானது. இவை யாவும் டிஜிட்டல் அருங்கட்சியகங்களில் கட்டாயமாக பதிவுசெய்து பாதுகாக்கப்பட வேண்டும்.

    பழங்குடியின மக்கள் அதிகமாக வாழும் மாநிலங்களின் கவர்னர்கள், இந்த மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்திவரும் கல்வி, விளையாட்டு மற்றும் நிதியுதவி சார்ந்த திட்டங்கள் அவர்களை முழுமையான அளவில் சென்றடையும் வகையில் உதவி செய்ய வேண்டும் எனவும் மோடி குறிப்பிட்டார். #centralschemes #GovernorsConference #Modi
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கவர்னர் உடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #SterliteProtest
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தில் போலீசார் நேற்று மற்றும் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், மாவட்ட கலெக்டர், எஸ்.பி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், சென்னை ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

    வன்முறை மேலும் பரவாமல் இருக்க மூன்று மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மொபைல் இண்டெர்நெட் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தனிபெரும் கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கூடாது என கவர்னரிடம் வலியுறுத்தியதாக மஜத தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். #KarnatakaVerdict #Kumaraswamy #JDS
    பெங்களூர்:

    கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.

    104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

    எம்.எல்.ஏ..க்களிடம் கையெழுத்து பெறப்படும் காட்சி

    இந்நிலையில், குமாரசாமி மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தற்போது கவர்னர் வாஜுபாய் வாலாவை சந்தித்தனர். அப்போது, ஆட்சியமைக்க தேவையான போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரிக்கை விடுத்தனர்.

    இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கவர்னரிடம் கூறினோம். இரு தரப்பையும் சந்திக்க அவருக்கு உரிமை உள்ளது. நிலையான அரசை அமைக்கும் எண்ணிக்கை எங்களிடம் உள்ளது. 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடித்தத்தை அவரிடம் வழங்கினோம்.

    சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கவர்னர் கூறினார்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கவர்னர் மாளிகைக்கு அணிவகுத்து செல்ல முயன்றனர். ஆனால், அவர்கள் அனைவரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனை அடுத்து, 10 பேரை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.

    இதற்கிடையே, ஒருவேளை எடியூரப்பாவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதால் காங்கிரஸ் மைசூர் சாலையில் உள்ள சொகுசு விடுதியில் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Karnataka #JDS #Congress
    கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா தொண்டர்கள் கொலையால் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம், கவர்னர் அறிக்கை கேட்டுள்ளார். #Sathasivam
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடந்து வருகிறது.

    கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி அமைந்த பிறகு அந்த கட்சி தொண்டர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் அரசியல் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 2 கட்சியை சேர்ந்தவர்களும் படுகொலை செய்யப்படும் செயல்களும் அரங்கேறி உள்ளது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராய் மற்றும் கண்ணூரிலும் அதிகளவு அரசியல் கொலைகள் நடந்துள்ளது.

    இந்த நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் பாபு மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர் சமேஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.


    இதனால் கண்ணூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்த கொலைகள் காரணமாக பதட்டமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர் பாபு கொலையை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக அந்த கட்சியைச் சேர்ந்த 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல பாபு கொலை தொடர்பாக 4 பேர் மீதும் பாரதிய ஜனதா தொண்டர் சமேஜ் கொலை தொடர்பாக 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா நேரடியாகவும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே அரசியல் கட்சி தொண்டர்கள் 2 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது, அதனால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் கேரள கவர்னர் சதாசிவம் அறிக்கை கேட்டுள்ளார்.

    ஏற்கனவே 6 மாதத்திற்கு முன்பு இதேபோல அரசியல் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றபோது கேரள அரசிடம் கவர்னர் அறிக்கை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #KeralaCM #PinarayiVijayan #Governor #Sathasivam
    ×