search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விங்ஸ்"

    பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்களுக்கு விங்ஸ் எனும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்டு முழுக்க அன்லிமிட்டெட் ஆடியோ, வீடியோ கால் வழங்கப்படுகிறது. #BSNL #offer



    பி.எஸ்.என்.எல். நிறுவனம் இன்டர்நெட் டெலிஃபோனி சேவையான விங்ஸ் (WINGS) அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் டிராய் வழங்கிய பரிந்துரையை ஏற்கும் வகையிலும், இன்டர்நெட் டெலிஃபோனி சேவையை வழங்குவதற்கு மத்திய டெலிகாம் துறையின் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    IMS NGN (மல்டிமீடியா சப்-சிஸ்டம் மற்றும் அடுத்த தலைமுறை நெட்வொர்க்) கோர் ஸ்விட்ச்களின் IP- சார்ந்த அக்சஸ் நெட்வொர்க் வழங்கும் மொபைல் நம்பரிங்-ஐ கொண்டு இந்த சேவை இயங்குகிறது. இதனை பயன்படுத்த பயனர்கள் SIP க்ளையன்ட் (சாஃப்ட் செயலி) ஒன்றை தங்களது ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது லேப்டாப்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.



    இந்த செயலி SIP போன்று இயங்கி இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் அழைப்புகளை மேற்கொள்ளவும், பெறவும் வழி செய்கிறது. இதன் மூலம் மொபைல் போன் அல்லது லேண்ட்லைன் மொபைல்களிலும் அழைப்புகளை மேற்கொள்ளலாம். சந்தாதாரர் IMS கோர் மற்றும் IP நெட்வொர்க்-ஐ பயன்படுத்தி வாய்ஸ் சேவையை பி.எஸ்.என்.எல். விங்ஸ் மூலம் வழங்கும்.

    பி.எஸ்.என்.எல். தனது பயனர்களுக்கு அன்லிமிட்டெட் ஆடியோ மற்றும் வீடியோ காலிங் வசதியை ஒரு முறை ஆக்டிவேஷன் கட்டணமாக ரூ.1,099 வசூலிக்கிறது. புதிய இணைப்புகளுக்கான முன்பதிவுகள் துவங்கியிருக்கிறது. ஆகஸ்டு 1, 2018 முதல் இந்த சேவை துவங்கப்பட இருக்கும் நிலையில், பயனர்கள் ஒவ்வொரு டெலிகாம் வட்டாரங்களிலும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பி.எஸ்.என்.எல். விங்ஸ் சேவை தற்சமயம் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. #BSNL #offer #telecom
    ×