search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 201649"

    • அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சொரூபங்களை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் புனிதம் செய்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய திருத்தேர்பவனி நடைபெற்றது.

    வேளாங்கண்ணி பேராலய பொருளாளர் உலகநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல்சம்மனசு, அந்தோணியார், ஆரோக்கியமாதா உள்ளிட்ட சொரூபங்களை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் புனிதம் செய்து வைத்தார் தேர் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 75 இடங்களில் 75 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.
    • மாணவர்களிடையே நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    உடுமலை :

    நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினம், அமிர்த விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், உடுமலையில் அனைத்து தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து 75 இடங்களில் 75 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக, சுதந்திர போராட்ட தலைவர்களை நினைவு கூறும் வகையிலும் மாணவர்களிடையே நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    அந்த வரிசையில் கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் ஸ்ரீ விசாலாட்சி மகளிர் கலைக் கல்லூரி சார்பில், 75 பள்ளிகள், 75 மாணவர்கள், 75 நிமிடங்கள் என்ற தலைப்பில் ஒரே நேரத்தில் 75 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.தவிர வருகிற 8-ந்தேதி முதல் 15ந் தேதி வரை இரவு வான் நோக்கும் நிகழ்ச்சி, உடுமலை தேஜஸ் அரங்கில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடத்தப்பட உள்ளது. இந்திய விஞ்ஞானிகள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் குறித்த பட கண்காட்சியும் இடம்பெறுகிறது.

    மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்தியாவை 2047-ல் வல்லரசாக்க என் பங்கு' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி,கனவு இந்தியா 2047 என்ற தலைப்பில் ஓவியப் போட்டி,2047 ல் இந்தியாவை வல்லரசாக்க என் முழக்கம் என்ற தலைப்பில் ஸ்லோகன் எழுதுதல் போட்டியானது வருகிற 10-ந்தேதி மதியம் ம2ணிக்கு நடத்தப்படுகிறது. பங்கேற்க விரும்புவோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை 8778201926 என்ற செல்போன் எண் மற்றும் udt75eventsceleb@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.   

    • உடுமலை மாரியம்மன் கோவில் கலையரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கரிவலம்வந்தநல்லூர் முருக.சுந்தர ஓதுவா மூர்த்திகள் தேவார திருப்புகழ் இன்னிசை நிகழ்த்தினர்.

    உடுமலை :

    உடுமலை மாரியம்மன் கோவில் கலையரங்கத்தில் தேவார திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் குமார சுவாமிநாத தேசிகர், கரிவலம்வந்தநல்லூர் முருக.சுந்தர ஓதுவா மூர்த்திகள் தேவார திருப்புகழ் இன்னிசை நிகழ்த்தினர். மீனாட்சி சுந்தரம் வயலின், வெங்கடேஷ் பாபு மிருதங்கம், மணிகண்டன் முகர்சிங் இசைத்தனர்.

    நிகழ்ச்சிக்கு ஸ்ரீஅருணகிரிநாதர் இசை விழாக்குழு நிர்வாகிகளான தலைவர் ேக.எல்.ஆர். டெக்ஸ்டைல்ஸ் கைலாசம் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் வி.ஆர்.எஸ்.ஜூவல்லரி கனகராஜன், கலாவதி சிவசண்முகம் முன்னிலை வகித்தனர். செயலாளர் அங்கு பாலசுப்பிரமணியன், துணை செயலாளர்கள் நாதஸ்வர வித்வான் உமாபாலன், தவில் வித்வான் மணிகண்டன், உதயம் காபி பார் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், ஸ்ரீ அருண கிரிநாதர் இசை விழாக்குழு பொருளாளர் ராமகிருஷ்ணன், அர்ச்சுனேஸ்வரர் அறக்கட்டளை யு.கே.பி .முத்துக்குமாரசாமி , டாக்டர் மேகலா பாலசுந்தரம், டாக்டர் தாமரை செல்வன், குணஸ்ரீசிட்ஸ் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கோவில் செயல் அலுவலர் தீபா, கார்த்திகை விழா மன்ற துணை தலைவர் டாக்டர் சுந்தரராஜன், டிராவல்ஸ் நிர்வாக இயக்குனர் நாகராஜ், முன்னாள் நகராட்சி அலுவலர் கந்தசாமி, ஸ்ரீவிஷ்ணு ஜூவல்லரி பாலகிருஷ்ணன், குணா ஜூவல்லரி குணசேகரன், ஜெய்சிங் லிங்கவாசகம், ஆர்.வி.எஸ்.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பரமத்தி வேலூரில் ஓவ்வொரு வருடமும் ஆடி மாதம் 1-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
    • இதற்காக மாரியம்மன் கோவில் முன்பு மண்ணால் சுமார் 100 அடி நீளத்தில் துரியோதனனின் சிலையை கலைஞர்கள் வடிவமைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மகா மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஓவ்வொரு வருடமும் ஆடி மாதம் 1-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி கடந்த ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கியது.

    நிகழ்ச்சியில் மகாபாரத கதையில் வரும் பாண்டவர்கள், கவுரவர்கள் போன்று அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வேடமணிந்து கதைக்கு ஏற்றால் போல் நடித்தும், நடனமாடியும் பாரத போரின் இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கதை பாடும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

    ஆடி 18-ம் நாளான இன்று துரியோதனனை பீமன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மாரியம்மன் கோவில் முன்பு மண்ணால் சுமார் 100 அடி நீளத்தில் துரியோதனனின் சிலையை கலைஞர்கள் வடிவமைத்தனர். துரியோதனனை பீமன் வதம் செய்து அதில் இருந்து வரும் ரத்தத்தை எடுத்து திரவுபதி தனது கூந்தலில் தடவிய பின்னர் கூந்தலை முடிந்து கொள்ளுவதோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

    போரில் வெற்றி பெற்ற கலைஞர்கள் போருக்கு பயன்படுத்திய ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்று காவிரி ஆற்றில் சுத்தம் செய்து காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி் நடைபெறுவது வழக்கம். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூர் மகாபாரத கதை பாடும் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ஆனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றுக்கு செல்ல காவல் துறையினர் மற்றும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் தடைவிதித்துள்ளதால் மகாபாரத கதைபாடும்‌‌ குழுவினர் காவிரி ஆற்றுக்கு சென்று ஆயுதங்களை சுத்தம் செய்ய முடியாத‌ நிலை ஏற்பட்டுள்ளது.

    • நெற்குப்பையில் தூய்மை இயக்க நிகழ்ச்சி நடந்தது.
    • செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன், வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் நகரங்களின் தூய்மை இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி சேர்மன் புசலான் தலைமையில் நடந்தது.

    இதில் சைக்கிள் பேரணி, மாராத்தான் ஓட்டம், மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலை தொட்டிகளை சுத்தம் செய்தல், நீர்வரத்து கால்வாய்களை சுத்தம் செய்தல், போன்றவை நடத்தப்பட்டு அதில் பங்கேற்ற மகளிர் சுயஉதவி குழுவினர், மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன், வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

    • வட்டார அளவிலான சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் 18 மாணவ-மாணவிகள் தேர்வு நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியை மற்றும் கவுன்சிலர் தாயுமானவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. வட்டார அளவில் நடை பெற்ற இப்போட்டியில் 6 மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளும், 7 உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளும், 13 நடுநிலைப்பள்ளி உள்பட 26 அரசுப்பள்ளிகளை சேர்ந்த 64 மாணவர்கள், 51 மாணவிகள் பங்கேற்றனர்.

    சதுரங்க ஒலிம்பியாட் போட்டியினை சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு 3 பிரிவு களாவும், மாணவிகளுக்கு 3 பிரிவுகளாகவும் போட்டி நடைபெற்றது.

    இதில் தேர்வான 18 மாணவ-மாணவிகளும் சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 25-ந்தேதி நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியை மற்றும் கவுன்சிலர் தாயுமானவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆடி வெள்ளி இசை விழா நிகழ்ச்சி நடந்தது
    • ஸ்ரீரங்கத்தில் நகர நலச்சங்கம் சார்பில் நடந்தது

    திருச்சி:

    திருச்சி நாத ஸூதா ரஸம் மற்றும் ஸ்ரீரங்கம் நகர நலச்சங்கம் சார்பில் ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி ஸ்ரீ முளுபாகல் மடம் ஸ்ரீ ஸ்ரீ விக்ஞான நிதி சபா மந்திர் கல்யாண மண்டபத்தில் நேற்று (22-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி முதல் 8 மணி வரை நாத ஸூதா ரஸம் சங்கீத ஆராதனை மாபெரும் ஆடி வெள்ளி இசை விழா நடைபெற்றது.

    இந்த இசை விழாவில் முளுபகல் மட அதிகாரி ரகோத்துமாச்சார், சன்மானம் வழங்கி பாராட்டினார்.

    பத்மஸ்ரீ சங்கீத கலாநிதி டாக்டர் ஷேக் சின்ன மௌலானாவின் சிஷ்யர் கள் நாதஸ்வர வித்வான் கள் பத்மஸ்ரீ கலைமாமணி ராஜரத்னா ஷேக் மெகபூப் சுபானி, பத்மஸ்ரீ கலைமாமணி ராஜரத்னா காலிஷாபீ மெகபூப், எஸ். பெரோஸ் பாபு மற்றும் தவில் வித்வான்கள் ஸ்ரீரங்கம் பி.எம்.சங்கர், ஸ்ரீரங்கம் வி.ஜி.முருகன் குழுவினர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியை திருவாரூர் குஞ்சிதபாதம், நெய்வேலி நாகசுப்பிரமணியன், சேதுராமன், சுரேஷ் வெங்கடா–சலம் ஆகியோர் ஒருங்கி–ணைத்தனர்.

    இசை நிகழ்ச்சியில் அறிவாளர் - பேரவை மற்றும் ஸ்ரீரெங்கம் நகர் நலச்சங்க மக்கள் தொடர்பு அதிகாரி ரொட்டேரியன் கே.சீனிவாசன், ரொட்டேரியன் என்ஜினீயர் அசோகன், ரொட்ேடரியன் பாலகிருஷ்ணன் மற்றும் பக்த கோடிகள், இசை பிரியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

    • மெகா மியூசிக்கல் நைட் நடைபெறுகிறது.
    • த்துச்சிற்பி, நொச்சிப்பட்டி திருமூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    திருப்பூர்:

    கொரோனாவில் துவண்டுபோய் உள்ள மேடை இசைக்கலைஞர்கள், பாடகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் திருப்பூர் விஜயாபுரத்திலுள்ள கிட்ஸ் கிளப் பள்ளி மைதானத்தில் மெகா மியூசிக்கல் நைட் நடைபெறுகிறது.இதில், டி.வி. நட்சத்திரம் ஷிவாங்கி, நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்‌ஷன், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாம் விஷால், அனு ஆனந்த், முத்துச்சிற்பி, நொச்சிப்பட்டி திருமூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    • திருப்பூர் மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்ற தலைவர் அரிமா சத்ருக்கன் முன்னிலை வகித்தார்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்ற நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜியின் 21வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருப்பூர் டைமண்ட் தியேட்டர் அருகில் சிவாஜியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு பொதுசெயலாளர் அஸ்லாம் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்ற தலைவர் அரிமா சத்ருக்கன் முன்னிலை வகித்தார்.

    செயலாளர் பிரசன்ன குமார், துணைச் செயலாளர் சிவக்குமார் பிரபு, கோச் கிருஷ்ணன், சிவாஜி ராம், கேரளா செல்வம், மக்கள் மாமன்ற தலைவர் சுப்பிரமணியம், நிர்வாகிகள் கே.ஆர். சிவானந்தம், வின்சென்ட் ராஜ், ராஜா, கணேசன், பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இன்று மாலை சிவாஜி கணேசன் படங்களின் நிலைத்த புகழுக்கு பெரிதும் துணை நிற்பது என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகளும் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்ற நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • கபிலர்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • வளர் இளம் பெண்கள் ஆரோக்கியத்தில் அரசின் சிறப்பு திட்டங்கள் ஆகியவை குறித்தும் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் சுகாதார துறையினர் கலந்து கொண்டு ‌உலக மக்கள் தொகை தினத்திற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

    மேலும் மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், ஆணும் பெண்ணும் சமம், பெண் சிசுக்கொலை தடுத்தல், பெண் கல்வியை ஊக்குவித்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், வளர் இளம் பெண்கள் ஆரோக்கியத்தில் அரசின் சிறப்பு திட்டங்கள் ஆகியவை குறித்தும் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    உலக மக்கள் தொகை விழிப்புணர்வு தொடர்பான பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கபிலர் மலை வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சாந்தி தலைமை வகித்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவநேசன், பள்ளியின் தலைமை ஆசிரியை சுமதி, ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் சமுதாய சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர் ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • கபிலர்மலையில் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சசிகலா மற்றும் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலக்குறிச்சி ஊராட்சி கபிலர்மலையில் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கபிலக்குறிச்சி ஊராட்சித்தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். ஊராட்சி துணைத்த லைவர் குணவதி முன்னிலை வகித்தார்.

    களப்பணியாளர் வடமலை வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக நிறு வன இயக்குனர் சரவ ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி–யில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சசிகலா மற்றும் ஏராள மானோர் கலந்து கொண்டனர். முடிவில் களப்பணியாளர் கணேசன் நன்றி கூறினார்.

    • தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடந்தது
    • இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை

    கரூர்:

    ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகுந்த மாதம் என்று அழைக்கும் வகையில், அம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் விசேஷ நிகழ்ச்சிகள் களைகட்டும். இந்த மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடு என்று தமிழகம் முழுவதும் விழாக்கோலம் காணும். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஆடி முதல் நாளே இந்த கொண்டாட்டம் களைகட்டி விடும். அதாவது அன்றைய தினம் தேங்காய் சுடும் பண்டிகையுடன் பக்தர்கள் அம்மன் வழிபாட்டை தொடங்கி விடுவார்கள்.அதன்படி, நேற்று ஆடி மாதம் பிறந்ததையொட்டி கரூர் அமராவதி ஆற்று படிக்கட்டுதுறை பகுதியில் பொதுமக்கள் தேங்காய் சுடும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

    இதற்காக அருகிலுள்ள கடைகளுக்கு சென்று தேங்காய்களை சுடும் அழிஞ்சி குச்சி மற்றும் தேங்காய்களை வாங்கினர். அவ்வாறு வாங்கி வந்த தேங்காயை தரையில் நன்றாக உருட்டி சுத்தப்படுத்தினர். பின்னர் தேங்காயில் உள்ள 3 கண்களில் ஒன்றில் ஓட்டை போட்டு பொட்டுக்கடலை, நாட்டு சர்க்கரை, எள், அவல் உள்ளிட்ட பொருட் களை உள்ளே போட்டு மூடினர். பின்னர் நெருப்பு மூட்டி அரை மணி நேரத்திற்கு மேலாக சுட்டனர். நன்றாக சுடப்பட்ட தேங்காயை உடைத்து, அமராவதி ஆற்று கரையோரத்தில் உள்ள விநாயகருக்கு படையலிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து உண்டு மகிழ்ந்தனர்.

    அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையே நடந்த மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ஆடி 18 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் தர்மம் வெல்ல வேண்டுமென்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ந் தேதி மக்கள் அனைவரும் விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையின் போது படைக்கும் வகையில் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாகப் படைத்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது.

    ×