search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 201649"

    • நினைவு தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம்

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மறைந்த சயீத் சாஹிப் ஒரு சகாப்தம் என்ற தலைப்பில் நினைவு தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நகரத் தலைவர் நவாஸ்கான் தலைமையில் நடக்கிறது. நகரச் செயலாளர் ஹாஜா குத்பு வரவேற்கிறார். மாவட்ட தொண்டரணி தலைவர் சகுபர் சாதிக்,எஸ்.டி.டி.யு. மாவட்டத் தலைவர் காதர்கனி, ராமநாதபுரம் மேற்கு தொகுதி செயலாளர் அக்பர் அலி, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான் பீவி முன்னிலை வகிக்கின்றனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ் கான், பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ேபசுகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் கட்சியின் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குருத்தோலை புனிதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை திரு இருதய பேரா லயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி இன்று தஞ்சை மறைமாவட்ட பரிபாலகரும் ஆயர் (பொ) சகாயராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் குருத்தோலைகளை ஏந்தியப்படி பவனியாக சென்றனர்.இதேபோல் புனித வியாகுல அன்னை ஆலயத்தில் புனித சேவியர் தொழிற்பயிற்சி பள்ளியின் தாளாளர் சூசைமாணிக்கம் அடிகளார் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது.

    தொடர்ந்து மறைமாவட்ட பரிபாலகர்சகாயராஜ் அடிகளார் தலைமையில் குருத்தோலை புனிதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பேராலய பங்குத்தந்தை பிரபகர், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலர் ஆன்ட்ரு செல்வகுமார், திருத்தொண்டர் அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத்தலைவர் வின்சண்ட் தலைமையில் செயலர் குழந்தைராஜ், அன்பிய பொறுப்பாளர்கள், இளைஞர் மன்றத்தினர், பக்த சபையினர் செய்து இருந்தனர்.

    • கடந்த மாதம் 21-ந் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
    • அன்று முதல் 24-ந் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள வடுகபாளையத்தில் எழுந்தருளியுள்ள கண்ணனூர் மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த மாதம் 21-ந் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. அன்று முதல் 24-ந் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    தொடர்ந்து 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை தினந்தோறும் இரவு பூவோடு பற்ற வைத்து ஆடும் நிகழ்ச்சியும், மீண்டும் காலையில் பூவோடு ஆடி கோவில் முன்பு கீழே கொட்டி அம்மன் பாடல்களை வருத்தி பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    30-ந் தேதி மாலை அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்துதலும், இரவு மாவிளக்கு பூஜையும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று கம்பம் பிடுங்கி, கோவில் பூசாரி தோளில் சுமந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர் பொதுகிணற்றில் விடும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வடுகபாளையத்தில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவில் தர்மகர்த்தா, விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • ஆனங்கூர் பிரிவு பகுதியில் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் தூய்மை இந்தியா திட்டம் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து எடுத்தல், மக்கும் குப்பையில் உரம் தயாரித்தல் குறித்து கலை நிகழ்ச்சி நடந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு பகுதியில் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமை வகித்தார்.இதில் தூய்மை இந்தியா திட்டம் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து எடுத்தல், மக்கும் குப்பையில் உரம் தயாரித்தல், தனி நபர் இல்ல கழிப்பறை பராமரித்தல், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமல் இருத்தல், பொதுக்கழிப்பிடம் பயன்படுத்துதல், மக்காத கழிவுகளை மறு சுழற்சி செய்வதுடன் எரியூட்டுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்டவைகள் குறித்து கலை நிகழ்சிகள் மூலம் சேலம் வெங்கடாசலபதி நாடக குழுவினர் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, ஆய்வாளர் செல்வராஜ், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • இதையொட்டி கடந்த வாரம் 21-ந் தேதி திருவிழா தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் மிகவும் பழமையான பிரசித்திபெற்ற ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் 21-ந் தேதி திருவிழா தொடங்கியது. எல்லையிடாரி அம்மன் கோவிலில் பூ சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, தொடர்ந்து அம்மனுக்கு சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.

    குழந்தை பாக்கியம் பெறவும், குடும்பத்தில் சந்தோசம் நிலவவும், திருமணதடை நீங்கவும் என பல்வேறு வகையான வேண்டுதலை நிறைவேற்றித் தந்த அம்மனுக்கு, நேர்த்திக்கடனாக பக்தர்கள் முகம் மற்றும் முதுகின் பின்புறம் மிகவும் கூர்மையான கத்தியை குத்தி கொண்டும், நீளமான சூலத்தை வாயில் அலகு குத்திக் கொண்டனர்.

    பட்டா கத்தி அலகு, விமான அலகு என பல்வேறு விதமான அலகுகளை உடலில் குத்திக்கொண்டு வின்சென்ட், குமாரசாமி பட்டி என நகரின் பல்வேறு வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

    அப்பகுதியில் இருந்து ஏராளமான பகதர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, அலகு குத்தும் பக்தர்களை கண்டு பரவசம் அடைந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை தீச்சட்டி ஏந்துதல் மற்றும் நாளை தீமிதி விழா நடைபெறுகிறது.

    • கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது
    • மாவட்ட நூலக அலுவலர் தலைமையில் நடைபெற்றது

    கரூர், 

    கரூர் மாவட்ட பொது நூலக துறை சார்பில் உலக மகளிர் தினத்தை ஒட்டி 47வது சிந்தனை மிச்சம் நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர் மற்றும் பேச்சாளர் கவிதா ஜவகர் இறைவி என்ற தலைப்பில் பேசியது, ஒரு நூலகம் திறக்கப்படும் போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது. 1,330 திருக்குறளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து லட்சியமாக வைத்துக் கொண்டால் வாழ்வில் உயர்வு நிச்சயம். பாரதி, பாரதிதாசன் உள்ளிட்ட பல ஆண் எழுத்தாளர்கள் தான் பெண்களின் வீரத்தை புகழ்ந்தும் பெருமைப்படுத்தியும் எழுதி உள்ளனர். அதை படித்த பிறகு தான் பெண்களும் எழுதத் தொடங்கினர். சமூகத்தில் எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அதை இறைவி என்ற படத்தில் இயக்குனர் அழகா காட்டியிருப்பார். பெண்கள் பாட்டியாக, தாயாக, சகோதரியாக, மனைவியாக, தோழியாக ஆண்கள் வாழ்வில் உள்ளனர். பெண்களால் தான் இந்த உலகம் இயங்குகிறது எனக் கூறினார்.விழாவில் வாசகர் வட்டத் தலைவர் சங்கர், துணைத் தலைவர் விமலா தித்தன், மாவட்ட மைய நூலக அலுவலர் மேரிரோசரி சாந்தி, நல்லாசிரியர் கோவிந்தராஜ், தொழிலதிபர்கள் தங்கராஜ், ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக கவிதா ஜவகர் எழுதிய நீயே முளைப்பாய் என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது.

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் 75 ஆயிரம் சவுராஷ்டிரர்கள் வசித்து வருகின்றனர்.
    • குஜராத்தில் 3-வது வாரத்தில் சவுராஷ்டிர தமிழ் சங்கம நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கம மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ். ராமலிங்கம் தலைமை வகித்தார். பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, குஜராத் மாநில முத்திரைத்தாள் கண்காணிப்பாளர் ஜெனு தேவன் சிறப்புரையாற்றினர்.

    இதில் குஜராத் மாநில நீர் வளம், நீர் வழங்கல், உணவு, குடிமை வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் குன்வர்ஜிபாய் பவாலியா கலந்து கொண்டு பேசியதாவது :-

    முகமது கஜினி, அலாவுதீன் கில்ஜி ஆட்சிக் காலத்தில் சவுராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் தமிழ்நாட்டுக்கு புலம்பெயர்ந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் இதர மாநகரங்களில் குடியேறினர்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 75,000 சவுராஷ்டிரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மரபுகள், பண்டிகைகளை கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல், குஜராத்தின் சவுராஷ்டிராவில் காணப்படும் சில மரபுகளையும் பின்பற்றி வருகின்றனர்.

    இந்திய கலாசாரம், வரலாற்றை இணைப்பதை நோக்கமாகக் கொண்டு குஜராத்தில் மூன்றாவது வாரத்தில் சவுராஷ்டிர தமிழ்ச் சங்கம நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    இதன் மூலம் சவுராஷ்டிரா, தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து கலை, கலாசாரம், கருத்துகள் பரிமாறிக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.

    கடந்த 4 நூற்றாண்டுகளுக்கும் மேலாக சவுராஷ்டிரா, தமிழ்நாட்டு மக்களிடையே இணைப்பு இருக்கிறது. இதையெல்லாம் நினைவுகூரும் விதமாக இந்த சங்கம நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி கவுன்சிலர் ஜெய்சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கம மத்திய குழு உறுப்பினர் சுரேந்திரன் வரவேற்றார். முடிவில் தஞ்சாவூர் குழு உறுப்பினர் கேசவன் நன்றி கூறினார்.

    • எடை குறைந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது
    • உணவின் முக்கியத்துவம் குறித்து பெண்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டாரத்தில் வட்டார அளவில் 0-6 மாத எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.விராலிமலை தெற்கு தெரு அங்கா–டியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் விராலி மலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காமுமணி தலைமை தாங்கினார்.இதில் அட்மா சேர்மன் இளங்குமரன், வடுகபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றி பெட்டகத்தை வழங்கி–னார்கள். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மேரி ஜெயபிரபா ஊட்டசத்து பெட்டகம், மருத்துவ அட்டையை பற்றியும் ஊட் டச்சத்து தாய்ப்பாலின் அவசியம் குறித்தும் இணை உணவின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு வழங் கப்பட்டது.மேலும் இந்த நிகழவில் மேற்பார்வையாளர்கள் பர்வின்பானு, ராஜாமணி, ரோஸ்லின் மேரி, வட்டார ஒருங்கிணைப்பாளர் சரஸ் வதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பாசிப்பயறு, கேழ்வரகு பாயாசம் வழங்கப்பட்டது.

    • பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது
    • கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,:

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில், நடைபெற்ற 'மாபெரும் தமிழ்க் கனவு" தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு துவக்கி வைத்தார்.

    பின்னர்மாவட்ட கலெக்டர் பேசியதாவது,

    தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் பெருமையையும், சமூக விழிப்புணர்வையும், பொருளாதார முன்னேற்றம் குறித்த வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாகக் கடத்துவதற்கு, 'மாபெரும் தமிழ்க் கனவு" என்னும் இந்தப் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் தாங்கள் உணர்ந்ததை அடுத்த வரும் சந்ததியினருக்குக் கொண்டு செல்ல முடியும். இதனால் விழிப்புணர்வுள்ள சமூகம் உருவாகும்.

    நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர்மரபும் நாகரிகமும், சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெ டுப்புகள், கல்விப் புரட்சி, அரசின் திட்டங்கள் மற்றும் அதனைச் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு 'மாபெரும் தமிழ்க் கனவு" சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில் இந்த நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறுவது நமக்கு பெரிய மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் தவறாமல் கருத்தூன்றிப் படித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் உரையாற்ற உள்ள இரு சிறந்த ஆளுமைகளின் உரைகளைக் கேட்டு நீங்கள் பயனடைவதுடன், சக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வங்கிக் கடனுதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில் பல காட்சி அரங்குகளும், புத்தகக் காட்சி அரங்கும் அமைக்க ப்பட்டுள்ளன. மாணவர்கள் இவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர்கவிதா ராமு பேசினார்.

    • 53 குப்பை எடுக்கும் மின்கல வண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • கூடுதல் கட்டமாக 6 மின்கல வண்டிகளை சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமையில் வழங்கப்பட்டது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு 53 குப்பை எடுக்கும் மின்கல வண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதில் முதல் கட்டமாக 6 மின்கல வண்டிகளை சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் அவர் தலைமையில் தியாகரசன்னபள்ளி, கோனேரிப்பள்ளி, மருதாண்டபள்ளி, மற்றும் கானலட்டி ஆகிய ஊராட்சி களுக்கு குப்பை எடுக்கும் மின்கல வாகனங்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கப்பட்டது. பின்னர் ஒன்றிய குழு தலைவர் வாகனத்தை இயக்கி பார்த்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் நாகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) விமல் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • இசை கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கலை பண்பாட்டு துறை, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட அரசு இசைப்பள்ளி, சவகர் சிறுவர் மன்றம் ஆகியவன சார்பில் தமிழிசை விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.

    தஞ்சை கலை பண்பாட்டு துறை மைய மண்டல உதவி இயக்குனர் நீலமேகம், விஸ்வநாதர் கோவில் அறங்காவலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவை தமிழ் சங்க தலைவர் மார்கோனி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    தொடர்ந்து மங்கல இசைகள், தேவாரப் பண்ணிசை, நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் தமிழ்ச்சங்க செயலாளர் கோவி நடராஜன், பொருளாளர் சொர்ணபால், மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

    விழாவில் இசை கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் மிருதங்க ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.

    • கட்சி கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அடிலம், பந்தாரஅள்ளி, முருக்கம்பட்டி, இண்டமங்கலம், பெரியாம்பட்டி, கோவிலூர் ஆகிய பஞ்சாயத்துகளில் திமுக தலைவர் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு 27-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட அமைத்தலைவர் மனோகரன், துணை செயலாளர் வக்கீல் மணி, ராஜகுமாரி, ஒன்றிய அவைத் தலைவர் மாணிக்கம் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் காரிமங்கலம் ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கோபால், கிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் குமரவேல், குப்புசாமி, விவசாய அணி துணை அமைப்பாளர் மாரியப்பன், பஞ்சாயத்து தலைவர்கள் ஜெயலட்சுமிசங்கர், கௌரிதிருகுமரன், முன்னாள் கவுன்சிலர் சிவலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் சந்திரா மாதையன், நிர்வாகிகள் சென்னகேசவன், இளைஞனர் அணி அருள், சிங்காரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அடிலம் பஞ்சாயத்து சப்பாணிப்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

    ×