search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 201649"

    • கற்பித்தல் உபகரணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
    • 31 பேராசிரியர்களுக்குக் கற்பித்தல் உபகரணம் வழங்கினார்.

     தருமபுரி

    தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரியில் 7 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பணியாற்றும் பேராசிரியர்களுக்கு கல்லூரி மற்றும் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சார்பில் ரூ. 8,92,799 மதிப்பிலான கற்பித்தல் உபகரணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

    ஐ.வி.டி.பி. நிறுவனர் ராமன் மகசேசே விருதுபெற்ற குழந்தை பிரான்சிஸ் கலந்துகொண்டு 31 பேராசிரியர்களுக்குக் கற்பித்தல் உபகரணம் வழங்கினார்.

    இதனை பாராட்டிப் போற்றும் வகையில், கல்லூரியின் இல்லத்தந்தை எட்வின் ஜார்ஜ், முனைவர் ஆஞ்சலோ ஜோசப், துணை முதல்வர் பாரதி பெர்னாட்ஷா, தொன் போஸ்கோ கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜான், சமூகப்பணித்துறைப் பேராசிரியர் ஆண்டனி கிஷோர் மற்றும் பேராசிரி யர்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

    ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம், உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை வழங்கும் விழா மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் திருமுருக தட்சணாமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் பள்ளிக்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ், ராசாத்தி, அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார், பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை எழிலரசி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

    • என்.சி.சி.மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தாக்குதல் நடந்தது

    நாகர்கோவில்:

    ஜம்மு காஷ்மீரின் தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் லெத்போராவில் கடந்த 2019-ம்ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இதில் சி.ஆர்.பி.எப்.வீரர்கள் 40 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந்தேதி இந்தியாவின் கருப்பு தின மாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை யில் பிப்ரவரி 14-ந்தேதி யான இன்று நாடு முழுவதும் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    இதேபோல் குமரி மாவட்ட ராணுவ வீரர்களின் அமைப்பான ஜவான்ஸ் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப். வீரர்களின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    அந்த வகையில் கன்னியாகுமரி, மாதவபுரம், குளச்சல், திங்கள்சந்தை, திக்கணங்கோடு, தக்கலை மற்றும் நாகர்கோவில் உள்பட பல இடங்களில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சுமார் 150 ராணுவ வீரர்கள் பங்கேற்று பலியான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.இதில் என்.சி.சி.மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து வடசேரியில் இருந்து புத்தேரி வரை சாலையின் இருபுறமும் மரக்கன்றுகளை ராணுவ வீரர்கள் நட்டு வைத்தனர்.

    • ஆஸ்திரேலிய தமிழ் நண்பர்கள் உதவி
    • தெருக்களில் குப்பைகள் கொட்ட கூடாது என்று அறிவுறுத்தல்

    கந்தர்வகோட்டை, 

    கந்தர்வகோட்டை ஊராட்சியில் குப்பைகளை சேகரித்து தூய்மை காவலர்களிடம் வழங்குவதற்கு ஏதுவாக ஆஸ்திரேலியா நாட்டில் வாழும் தமிழக நண்பர்கள் குழு சார்பில் பிளாஸ்டிக் கூடைகள் வழங்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி யாதவர் தெருவில் 50 குடும்பங்களுக்கு இல்லங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை காவலர்களிடம் வழங்குவதற்கு ஏதுவாக, ஆஸ்திரேலியா நாட்டின் தமிழக நண்பர் குழு சார்பில் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூடைகளை திமுக நகரச் செயலாளர் ராஜா குடும்பத் தலைவிகளிடம் வழங்கி குப்பைகளை சாலைகளிலோ அல்லது பொது இடத்தில் கொட்டாமல், கூடைகளில் சேகரித்து தெருவிற்கு வாகனங்களில் வரும் தூய்மை காவலர்களிடம் வழங்கி ஊராட்சியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் வினோதா சாமிநாதன், சமூக ஆர்வலர் அறம் வளர் நம்பி, பாமக ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி. காமராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
    • 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தாராபுரம்:

    தாராபுரத்தில் இன்று அண்ணா நினைவு நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்குஅ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி. காமராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கு சன்சீட்ஸ் ஜவகர் தலைமை தாங்கினார். தண்டபாணி, ஜாபர் சாதிக் ,பாவா, அம்மன் பாலு, மகேஷ் , மைதீன் , செய்யது,சுதாரவிஉட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.
    • மன்னர் காலத்து ஓவிய பலகை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. அவர்களது காலத்தில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டன. அவை தற்போது அரசு அலுவலகங்களாக பல இடங்களில் இயங்கி வருகின்றன. புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தன.இதனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடமாற்றம் செய்த போது செட்டில்மென்ட் அலுவலகத்தில் இருந்து மன்னர் காலத்து பழமையான செப்பேடு, மன்னர் அரசின் முத்திரை பதித்த ஓவிய பலகை ஆகியவை எடுக்கப்பட்டது. அதனை அப்போது மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அந்த 2 அரிய பொருட்களையும் கலெக்டர் கவிதாராமு புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமியிடம் வழங்கினார். அப்போது ெதால்லியல் ஆய்வு கள தலைவரும், ஆய்வாளருமான கரூர் ராஜேந்திரன் உடனிருந்தார்.

    • மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி ஆசிரியர் முதலிடம்
    • 28 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை, 

    காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் சிக்ஷா திட்டத்தில் மாநில அளவில் சோலார் எனர்ஜி மெட்டிரியல் பற்றி அறிவியல் ஆராய்ச்சி துறையில் நிகழும் முன்னேற்றங்கள், நடைபெற்று வரும் ஆராய்ச்சிகள் பற்றி இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் சிக்ஷா திட்டத்தில் பள்ளி ஆசிரியர் களுக்கு இடையே சோலார் எனர்ஜி மெட்டிரியல் பற்றி வினா விடை போட்டிகளும் நடத்தப்பட்டது . இதில் மாநில அளவில் 28 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி ஆசிரியர் சி. மாணிக்கம் ரெட்டி கலந்து கொண்டு வினா விடை போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ஆசிரியர் அவர்களை பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன் , இணைத் தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளி முதல் வர் டாக்டர் ஜலஜா குமாரி ஆகியோர் பாராட்டினார்கள்.

    • ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது
    • சுத்தம் மற்றும் பாதுகாப்பு குறித்து அறிவுறுத்தல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் இன்னர்வீல் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய உயர்கல்வி வகுப்பு மாணவிகளுக்கான "சுத்தம் மற்றும் பாதுகாப்பு" விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவை பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகளுக்கு சுத்தம் மற்றும் பாதுகாப்பு பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியின் உதவி விரிவுரையாளர் டாக்டர் தமிழரசி விளக்கங்கள் மற்றும் மாணவிகளின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் இன்னர்வீல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் அருணோதயம் ஜெயராமன் மற்றும் செயலாளர் சாந்தி சுப்ரமணியன் முன்னிலை வகிக்க முன்னாள் இன்னர்வீல் சங்கத்தின் தலைவர் அனுராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் வரவேற்புரை வழங்க ஆசிரியர் உதயகுமார் நன்றி கூறினார்.

    • நாமக்கல் பைக்கர்ஸ் கிளப் என்ற அமைப்பை நடத்தி வரும் சிலர் பைக் சாகச நிகழ்ச்சி நடத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
    • நேற்று காலை இந்த பைக் சாகச நிகழ்ச்சியானது நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே ராசாம்பாளையம் சுங்க சாவடி அருகே, நாமக்கல் பைக்கர்ஸ் கிளப் என்ற அமைப்பை நடத்தி வரும் சிலர் பைக் சாகச நிகழ்ச்சி நடத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

    அதன்படி நேற்று காலை இந்த பைக் சாகச நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் பைக்குகளை வைத்து அந்தரத்தில் பறந்தும், ஒற்றை சக்கரத்தில் பைக்கை தூக்கி வீலிங் செய்தும் சாகசத்தில் ஈடுபட்டனர். அதேபோல் கைகளை விட்டபடியே பைக்கை ஒட்டியும் சாகசம் செய்தனர். இதற்கு பார்வையாளர்களாக செல்லுபவர்களுக்கு ரூ.500 நுழைவு கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இந்த சாகச நிகழ்ச்சிக்கு காவல்துறையினரின் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதுபோன்ற சாகச நிகழ்ச்சி நடத்துவதற்கு முதலில் காவல்துறையினரின் அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமின்றி சம்மந்தப்பட்ட இடத்தில் மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. ஆனால் இதுபோன்ற எவ்வித நிபந்தனைகளையும் கடைப்பிடிக்காமல் இந்த சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    • மீனவ கிராமங்களில் இருந்து எடுத்துவரப்படும் சீர்வரிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மீன்வளம் பெருக வேண்டிய மீனவர்களுக்கு கடலில் எந்த ஆபத்து வரக்கூடாது.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 466 வது ஆண்டு கந்துாரி விழா, கடந்த 24 ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாட்கள் நடைபெற்ற கந்தூரி விழாவில் சந்தனம் அரைக்கும் வைபவமும் அதனைத் தொடர்ந்து கடந்த2 ம் தேதி சந்தனக்கூடு விழாவும், 3:ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற்றது.

    இதில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கந்தூரி விழாவின் கடைசி நாளான நேற்று கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவுப் பெற்றது. இந்த நிலையில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக 400 ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி மீனவ கிராமங்களில் இருந்து எடுத்துவரப்படும் சீர்வரிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பழம், இனிப்பு மலர்களை பட்டினச்சேரி கிராம மீனவ பஞ்சாயத்தர்கள் தாம்பூலத்தில் வைத்து மேளதாளத்துடன் சீர்வரிசையாக எடுத்து வந்தனர். அவர்களை அவர்களை நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மீன்வளம் பெருக வேண்டிய மீனவர்களுக்கு கடலில் எந்த ஆபத்து வரக்கூடாது என்றும் துவா ஓதப்பட்டது. நாகூர் ஆண்டவர் காலடியில் மலர்கள் தூவி ஆயிரந்தோனி என மீனவ மக்கள் பிரார்தனை செய்தனர்.

    இது குறித்து நாகூர் தர்கா நிர்வாகி கூறும் போது நாகூர் ஆண்டவரை முதன்முதலாக நாகூருக்கு வரவழைத்து தங்குவதற்கு இடம் கொடுத்து அரவணைத்தது மீனவ மக்கள் என்றும் அதனை போற்றும் விதமாகவும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடை பெறுவதாக தெரிவித்தார். நாகூர் தர்காவில் இந்து முறைப்படி மீனவ மக்கள் தாம்பூல சீர்வரிசை எடுத்து வந்து பிரார்த்தனையில் ஈடுப்பட்டது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுத்தும் விதமாகவும் இருந்தது அனைவரும் மத்தியிலும் வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    • தெருமுனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது
    • மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் குறித்து

    அரியலூர்:

    அரியலூர் பேருந்து நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற தெருமுனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கலெகடர் பெ.ரமணசரஸ்வதி தொடக்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் தெரிவிக்கையில், இன்று ஆண்டிமடம் பேருந்து நிலையம், மீன்சுருட்டி பேருந்துநிலையம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் மற்றும் தா.பழூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியிகள் நடைபெறுகிறது. இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகள் தெரிந்து பயன்பெற வேண்டும் என்றார்.

    பின்னர், அவர் அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், வருவாய் கோட்டாட்சியர் இராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பொது மக்களுக்கு குப்பை கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • தரம் பிரித்து வழங்குவதற்காக

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்கம் சார்பில் நகர்ப்புற தூய்மைப்படுத்தி திட்டம் மட்டும் குப்பை கூடைகள் வழங்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகளுக்கு 2 வழங்கப்பட்டு அதன் மூலம் வீட்டில் இருக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து வைப்பதற்கு கூடை வழங்கினார்கள்.

    நகராட்சி முழுவதும் உள்ள வீடுகளில் குப்பைகளை தனித்தனியாக வைத்திருந்தால், துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகள் வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் குப்பை கூடைகள் கூடைகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் மூர்த்தி தலைமை தாங்கினார். மற்றும் நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், துணைத் தலைவர் கருணாநிதி முன்னிலையில் வைத்தனர். ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்கத் தலைவர் ஜெயராமன், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் ஆர் முருகன் ஏற்பாடு செய்திருந்தனர்.

    முன்னாள் தலைவர்கள் குமணன் செந்தில்வேல் விஜயகுமார் கிருபாநிதி மற்றும் உறுப்பினர்கள் கார்த்தி செந்தில் வேல் சிலம்பு செல்வன் சிவகார்த்திகேயன் சரவணன் ஆனந்த பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×