search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 201649"

    • நீட் மற்றும் ஐ.ஐ.டி.க்கான பயிற்சி வகுப்பு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது.
    • சிவகாசி மற்றும் சுற்றியுள்ள மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

    சிவகாசி

    சிவகாசி அரசன் மாடல் பள்ளியில் நீட் மற்றும் ஐ.ஐ.டி.க்கான பயிற்சி வகுப்பு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது. அரசன் மாடல் பள்ளியும், தனியார் நிறுவனமும் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பள்ளி தாளாளர் அசோகன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அறிவரசு, தனியார் நிறுவன அதிகாரிகள் தினேஷ்குமார், ரவி, சுப்பிரமணியன், சிவஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அசோகன் எம்.எல்.ஏ. பேசுகையில், இந்த ஒப்பந்தம் மூலம் இனி வரும் காலங்களில் அரசன் மாடல் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல், சிவகாசி மற்றும் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

    • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாவட்ட உதவி திட்ட அலுவலர் பங்கேற்றார்

    பெரம்பலூர்:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடக்கிய கல்வித் திட்டக்கூறின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டது.

    பெரம்பலூர் ரோவர் மேல்நிலை பள்ளியில் வட்டார வளமையம் சார்பில் நடந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போட்டியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கிவைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, கல்வி ஒருங்கிணைப் பாளர்கள் பாரதிதாசன், சுப்ரமணியன், ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ் ஆகியோர் பேசினர். குழு நடனம், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு , நடனம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பாசிரியர்கள் துர்கா, ரூபி, மரகதம் ஆகியோர் முன்னின்று போட்டிகளை நடத்தினர். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ் வரவேற்றார். முடிவில் சிறப்பாசிரியர் துர்கா நன்றி கூறினார்.

    இதே போல் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை கயல்விழி தலைமையிலும், ஆசிரியர் பயிற்றுநர் குணசேகரன் முன்னிலையிலும், எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் தலைமையிலும், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலைவாணன், ஜனனி ஆகியோர் முன்னிலையி லும்,பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையத்தில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் தலைமையிலும்,

    பள்ளியின் தலைமையாசிரியை திருமலைச்செல்வி முன்னிலையிலும் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் ராணிபரிமளா, மகேஸ்வரி மற்றும் தனவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வீர வணக்க நிகழ்ச்சி நடந்தது
    • விசிக தெற்கு ஒன்றிய சார்பில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விசிக தெற்கு ஒன்றிய சார்பாக மாவீரர் தினத்தை முன்னிட்டு வீர வணக்க நிகழ்ச்சி மற்றும் ஒன்றிய கலந்தாய் கூட்டம் வானதிரையின் பட்டினம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட அமைப்பாளர் செ.க. குமார் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்திற்கு முன்னிலையாளர்களாக மஞ்சுளா இளங்கோவன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் பூமா கொளஞ்சியப்பன், ஒன்றிய துணை செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் சி. பி. ராஜா கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் தலைமையில் சட்ட நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட விசிகவினர் கலந்து கொண்டனர்.

    • அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில்

    கரூர்:

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் "அரசியலமைப்பு தினம்" உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச்சமுதாயமும், சமயச்சார்பின்மையும், மக்களாட்சி முறை யையும் பேணி பாதுகாக்க வேண்டும் என உறுதி ெமாழி எடுத்துக் கொண்டனர்.

    மேற்படி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் செயல் இயக்குனர் எஸ்விஆர் கிருஷ்ணன் (இயக்கம்), பொது மேலாளர்கள் நாகராஜன், (சக்தி), கலைச்செல்வன் (மனித வளம்) மற்றும் துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்தலைமையில் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு அரசமைப்பு தினம் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

    • நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • குமரி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    நாகர்கோவில்:

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ந்தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 26-ந் தேதி அன்று உள்ளாட்சி அலுவலகங்கள், மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் உறுதிமொழி எடுக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி குமரி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவக்குமார், செயலாளர் முருகானந்தம், கவுன்சிலர்கள் நீலபெருமாள், ஜாண்சிலின் விஜிலா, அம்பிளி, லூயிஸ், பரமேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

    • நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • ஒருமுறை பயன்படுத்தப்படும்

    திருச்சி

    திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் ஆணைக்கிணங்க காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியினை முற்றிலும் நெகிழியில்லா பேரூராட்சியாக உருவாக்கும் பொருட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றைத் தடுக்க, மறு சுழற்சிக்கு வழியில்லாத ஒருமுறைபய ன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்புத் திட்டத்தினை முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன் துவக்கி வைத்தார்.

    மேலும் பொதுமக்களிடம் நெகிழி பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை தவிர்த்து மஞ்சள் பையினை பயன்படுத்துவது குறித்தும் விளக்கி கூறினார். பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேரூராட்சி அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையம் வரை நெகிழியினால் ஏற்படும் தீமைகள், அதனை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    சுவர்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இப்பேரணியில் ஆட்டோ மூலம் நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான உணவு பொருட்கள் கட்ட பயன்படுத்தப்படும் நெகிழித்தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக், மெழுகு பூசப்பட்ட கப்புகள்,

    பிளாஸ்டிக் குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் உறுஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாகும் இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள் ஆகியவை தவிர்த்து மஞ்சள் பையினை கையில் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    பொதுமக்களை துணிப்பைகளை பயன்படுத்த ஊக்குவிப்பதற்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 25,000 துணிப்பைகள் வழங்க வேண்டி இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டேரியன் பப்ளிக் இமேஜ் டிஸ்பிளே சேர்மன் டாக்டர்.கே.சீனிவாசன் இடம் செயல் அலுவலரால் கோரப்பட்டது. இந்நிகழ்ச்சியில்

    காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல்அலுவலர் ச.சாகுல் அமீது தலைமை தாங்கினார்.

    காட்டுப்புத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் சு.சங்கீதாசுரேஷ் மற்றும்  துணைத்தலைவர் சி.சுதாசிவசெல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தினார். பேரூராட்சி

    மன்ற உறுப்பினர்கள் சிவஜோதி, பானுமதி, அன்னபூரணி, காயத்திரி, கருணாகரன்,மணிவேல், விஜயா, ராஜ்குமார், தொட்டியம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர்

    பி.தங்கவேல், காட்டுப்புத்தூர் பேரூர் கழக செயலாளர் கே.டி.செல்வராஜ்,தொட்டியம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி முன்னாள்துணைத்தலைவர் சிவசெல்வராஜ், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன்,ராம்குமார், வேல்முருகன், துவகுலசு மற்றும் நிர்வாகிகள், பேரூராட்சி அலுவலகபணியாளர்கள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள்கலந்துகொண்டனர்.

    • நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு குமாரபாளையத்தில் நடைபெற்று வருகிறது.
    • பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பை பயன்ப டுத்துவது, சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    குமாரபாளையம்:

    தமிழக முதல்- அமைச்சர் அறிவுறுத்தலின்படி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு குமாரபாளையத்தில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி குமாரபாளை யம் பாரதி நகரில் தனியார் கலை அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட குழுவினர் மற்றும் நகராட்சி தூய்மை பணியா ளர்கள் இணைந்து வீடு வீடாக மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வழங்குதல் பற்றியும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பை பயன்ப டுத்துவது, சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கு சேர்மன் விஜய்கண்ணன் தலைமை வகித்தார். துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யபட்டது.

    இதில் கவுன்சிலர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் செந்தில்குமார், ஜுல்பிகர் அலி, ஐயப்பன், கதிரேசன், விக்னேஷ், கந்தசாமி உள்பட கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    • சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது

    கரூர்

    கரூர் பசுபதிபாளையம் நகர்மன்ற நடுநிலைப்பள்ளியில் கடந்த 19-ந்தேதி முதல் வருகிற 25-ந்தேதி வரை கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாமில் நேற்று பள்ளி மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயராணி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி வரவேற்றார். பசுபதிபாளையம் நகர்மன்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மதன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். முடிவில் உதவி திட்ட அலுவலர் சத்யபாமா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்."

    • சிந்தனை முற்றம் நிகழ்ச்சி நடந்தது
    • நூலக வாசகர் வட்டம் சார்பில்

    கரூர்:

    கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் தலைவர் சங்கர் தலைமையில் 45-வது சிந்தனை முற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகிழ்வித்து மகிழ் என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம் பேசினார். அப்போது, பள்ளி பருவத்தில் இருந்து புத்தகம் வாசிப்பு முக்கியம். அதன் மூலம் உலக விஷயங்களை கற்றுக்கொண்டு மற்றவர்கள் மத்தியில் தெளிவாக உண்மையாக பேச முடியும். அறிஞர்கள் புத்தகம் வாசிக்காத நாலே இல்லை என்று சொல்லலாம். தமிழ் சமுதாயத்தில் வழக்கத்தில் குறைந்து வரும் பழக்கவழக்கங்கள் புத்தக வடிவில் உள்ளன. அதையெல்லாம் இன்றைய தலைமுறையினர் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    பெண் குழந்தைகள் பிறப்பது வரம். அவர்களை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். மகள் பிறந்து விட்டால், மகாலட்சுமி பிறந்து விட்டதாக கூறிய முன்னோர்கள், மகன் பிறக்கும் போது மகாவிஷ்ணு பிறந்து விட்டதாக கூறவில்லை. பெண் குழந்தைகளின் பிறப்பு தெய்வீகமானது. இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட மைய நூலக அலுவலர் சரவணகுமார், மைய நூலகர் சிவக்குமார், வாசகர் வட்ட நெறியாளர் சிவக்குமார், திருக்குறள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ரமேஷ், பட்டதாரி ஆசிரியர் முரளி உள் பட பலர் பங்கேற்றனர்.

    • நான் முதல்வன் நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

    பெரம்பலூர்:

    செட்டிகுளம், அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் "நான் முதல்வன்" நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் 11 மற்றும்12 ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்பு வழிகாட்டி நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் பொன்னுதுரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடாலூர், பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயற்பியல் பாட விரிவுரையாளர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நான் முதல்வன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீரங்கன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வியின் அவசியத்தையும் , அதன்மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு பற்றியும் , கல்லூரிகளில் உள்ள அனைத்து பாடப்பிரி வுகளைப்பற்றியும், பொறியியல் கல்லூரி சேர்க்கை மற்றும் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை மற்றும் நுழைவத் தேர்வுகள் குறித்தும், நான் முதல்வன் வலைதளத்தின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்து, விழிப்புணர்வு தந்து ஊக்கப்படுத்தினார்.

    • சேலம் மாவட்டம், வாழப்பாடியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பிரச்சார பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் புகழ் விழிப்புணர்வு பிரசார பேரணியை தொடங்கி வைத்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பிரச்சார பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் திலகவதி வரவேற்றார்.

    பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரவிசங்கர், சத்தியக்குமாரி, ஷபிராபானு, வட்டார கல்வி அலுவலர் வித்யா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சாந்தாகுமாரி சரவணன், ராணி மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் புகழ் விழிப்புணர்வு பிரசார பேரணியை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி குறித்த வாசகங்களை சிறப்பு பயிற்றுநர் வெங்கடேசன் வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதனையடுத்து, ஆசிரியர்கள் மீனா, ரவிசங்கர் குழுவினரின் பொம்மலாட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இவ்விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் வி.சி.பாண்டியன், கமல்ராஜா, கோபிநாத், குணாளன், கோ.முருகேசன், தில்லையம்பலம், ரமணி, சுந்தரராஜன் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் ராஜிவ்காந்தி, மனோகரி, சிறப்பு பயிற்றுநர்கள் உலகநாதன், காளியம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணியை, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இலியாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆசிரிய பயிற்றுநர்கள் அசோக்ராஜ், சாகிதாபானு, சிறப்பு பயிற்றுநர்கள் தேன்மொழி, ஆனந்தி ஆகியோர் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • செல்போன் அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்பு–ணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவ- மாணவிகளுக்கு மூச்சு பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகள் அளித்தார்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கூன வேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு செல்போன் அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்பு–ணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் ஜெயந்தி, மனநல ஆலோசகர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். செல்போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத ஆப்களை பயன்படுத்துவது, செல்போ–னுக்கு அடிமை ஆவதை தவிர்க்க வேண்டும் என பேசினர். மனநல ஆலோசகர் ரமேஷ் மாணவ- மாணவிகளுக்கு மூச்சு பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகள் அளித்தார்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் விஜி மற்றும் மாணவ- மாண–விகள் கலந்து கொண்டனர்.

    ×