search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாவித்திரி"

    நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ், மற்றொரு படத்தில் மீண்டும் சாவித்ரியா நடிக்க இருக்கிறார். #Savithri #KeerthySuresh
    நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான திரைப்படம் நடிகையர் திலகம். தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநடி என வெளியானது.

    இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்திரம் ஏற்றுத் தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அனைத்து தரப்பிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்த படம் மூலம் கீர்த்தி சுரேசின் மார்க்கெட் உயர்ந்தது. ராஜமவுலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கூட கிடைத்து இருக்கிறது.

    தற்போது இன்னொரு முறை சாவித்திரியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. முன்னாள் ஆந்திர முதல்வரும் நடிகருமான என்.டி.ஆரின் வாழ்க்கையை அவரது மகன் பாலகிருஷ்ணா திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார். படத்தை இயக்க இருப்பது தெலுங்கு இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி.



    இவர் மகாநடி திரைப்படத்தில் இயக்குநர் நாகி ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். கீர்த்தியின் அபார நடிப்புத் திறனைக் கண்டு வியந்த கிருஷ் தான் இயக்கும் என்டிஆர் வாழ்க்கை படத்துக்காக மீண்டும் ஒருமுறை கீர்த்தியை சாவித்திரியாக்க முடிவெடுத்து இருக்கிறார். #Savithri #KeerthySuresh

    பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இனிமேல் இதுபோன்று நடிகைகளின் வாழ்க்கை படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். #KeerthySuresh
    நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்திரி வேடத்தில் நடத்த நடிகையர் திலகம் என்ற படம் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் இந்த படம் மகாநதி என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

    நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தான நிர்வாகிகள் அவருக்கு லட்டு பிரசாதங்கள் வழங்கினர். தரிசனம் முடித்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான ‘நடிகையர் திலகம்’ என்ற தமிழ் படத்திலும், மகாநதி என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்தது அதிர்ஷ்டமாகவும் பெருமையாகவும் உள்ளது.

    இந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் திரைப்படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



    இனி இது போன்ற சுயசரிதை படங்களில் நடிக்க மாட்டேன்’ என்றார். கீர்த்தி சுரேஷை பார்க்க கோவில் அருகே ரசிகர்கள் சூழ்ந்து நின்றனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர்.
    கீர்த்தி சுரேஷ் நடிப்பில், நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி இருக்கும் ‘நடிகையர் திலகம்’ படத்தின் விமர்சனம். #NadigaiyarThilagam #KeerthySuresh
    பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் நடிகையர் திலகம். சிறுவயதிலேயே தந்தையை இழந்த சாவித்திரி, தைரியத்துடனும், துடிப்புடனும் வாழ்கிறார். தன்னால் சாதிக்க முடியாது என்று சொல்பவர்களிடம் சாதித்து காட்டுகிறார்.

    ஜெமினி கணேசன் எடுத்த புகைப்படம் ஒன்று நாளிதழில் வர, அதன் மூலம் சாவித்திரிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படி முன்னேறினார்? அதன் பின் அவரது வாழ்க்கை எப்படி மாறியது? என்பதை படமாக இயக்கி இருக்கிறார்கள்.

    இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.



    தந்தையில்லாத சுட்டிப்பெண்ணாக ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து நடிப்பால் நம் அனைவரையும் கட்டிப்போட்டு, பின்னர் பரிதாப நிலைக்கு சென்று உயிரிழந்த சாவித்திரியை அப்படியே நம் கண் முன்னே நிறுத்திக் காட்டியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் நடிப்பு வாழ்க்கையில் இந்த படம் அவருக்கு ஒரு மணிமகுடம். கீர்த்தியுடன் போட்டி போட்டு நடித்துள்ள துல்கர் சல்மான்,  ஜெமினி கணேசனாகவே மாறியிருக்கிறார்.

    சமந்தா, விஜயதேவரகொண்டா, நாகசைதன்யா, மோகன் பாபு என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 1940 முதல் 1980 வரையில் பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதை. அந்தந்த காலகட்டங்களுக்கே நம்மை கூட்டி செல்கின்றது டேனியின் கேமராவும் ஷிவம் மற்றும் அவினாஷின் கலை இயக்கமும். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவின் படத்தொகுப்பும் மிக்கி மேயரின் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.



    எல்லோருக்குமே தெரிந்த கதை தான். ஆனால் சுவாரஸ்யமான திரைக்கதையாலும் திறமையான இயக்கத்தாலும் நம்மை கட்டிப்போடுகிறார் இயக்குனர் நாக் அஷ்வின். மதன் கார்க்கியின் வசனங்கள் பல இடங்களில் கைதட்டல்களை அள்ளுகின்றன.



    சமந்தா, விஜய தேவரகொண்டா தேடல் மூலம் நமக்கு சாவித்திரியின் வாழ்க்கையை சொல்லத் தொடங்குவது சிறப்பு. சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக இருந்தாலும், சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் காதல் காட்சிகளையும் இணைத்திருப்பது ரசிக்கும்படியாக உள்ளது.

    மொத்தத்தில் ‘நடிகையர் திலகம்’ சிறந்த பொக்கிஷம்.
    சாவித்திரி படத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #KeerthySuresh
    மறைந்த தமிழக முதல்-அமைச்சர் காமராஜர் வாழ்க்கை ஏற்கனவே சினிமா படமாக தயாராகி வெளிவந்தது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்க்கையும் இப்போது படமாகி வருகிறது. அடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கான திரைக்கதை, நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேசை அணுகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மறைந்த நடிகை சாவித்திரி வேடத்தில் அவர் நடித்துள்ள ‘நடிகையர் திலகம்’ படம் திரைக்கு வந்துள்ளது.

    இதில் கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்து இருப்பதாகவும் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக அவர் பொருந்தி இருப்பதாகவும் பாராட்டுகள் குவிகின்றன. இதனால்தான் அவரை ஜெயலலிதா வேடத்துக்கு பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. மேலும் பல தலைவர்கள் வாழ்க்கையும் படமாகி வருகிறது. ஆந்திராவில் மறைந்த முதல்வர்கள் என்.டி.ராமராவ், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருவரது வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது.

    என்.டி.ராமராவாக அவரது மகன் பாலகிருஷ்ணாவே நடிக்கிறார். ராஜசேகர ரெட்டியாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் அவரது மனைவியாக நயன்தாராவும் நடிக்க உள்ளனர். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, மன்மோகன் சிங் வாழ்க்கையும் படங்களாகின்றன. இந்திரா காந்தி வேடத்தில் வித்யா பாலனை நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது.
    ×