search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியன்னா"

    அமெரிக்கா விலகிய பின்னர் முதன்முறையாக வல்லரசு நாடுகளுடன் ஈரான் கலந்துகொள்ளும் அணு ஆயுத தடை ஒப்பந்த ஆலோசனை கூட்டம் வியன்னா நகரில் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது.
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் நாங்கள் தொடர்ந்து கடைபிடிப்போம் என இதில் கையொப்பமிட்டுள்ள இதர வல்லரசு நாடுகள் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், அமெரிக்கா விலகிய பின்னர் முதன்முறையாக வல்லரசு நாடுகளுடன் ஈரான் கலந்துகொள்ளும் அணு ஆயுத தடை ஒப்பந்த ஆலோசனை கூட்டம் வியன்னா நகரில் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது.

    பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முஹம்மது ஜாவத் ஸரிப் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Irannucleardeal #Viennanuclearmeet 
    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பும், முக்கிய பேச்சுவார்த்தையும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் என தெரியவந்துள்ளது. #TrumpPutinsummit #Viennasummit
    மாஸ்கோ:

    சிரியா விவகாரத்தால் அமெரிக்கா - ரஷியா இடையே சமீபத்தில் ஏற்பட்ட பூசல், பிரிட்டன் நாட்டில் ரஷிய முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகளை ரசாயன தாக்குதலால் ரஷியா கொல்ல முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டினால் பூதாகரமாக வெடித்தது.

    இதுதவிர, அமெரிக்கா - ரஷியா இடையிலான மேலும் சில வேறுபாடுகளை களைவதற்காக இருநாட்டு தலைவர்களும் நேருக்குநேர் சந்தித்துப் பேச வேண்டும் என சர்வதேச அரசியில் நோக்கர்கள் கருதுகின்றனர். ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு ஒற்றுமையை ஏற்படுத்துவதில் ஆஸ்திரியா நாட்டு பிரதமர் செபாஸ்டின் குரூஸ் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பும், முக்கிய பேச்சுவார்த்தையும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் என ரஷிய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிர்ட்டி பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் முன்னர் புதின் தொலைபேசியில் பேசியபோது இதுதொடர்பாக தீர்மானிக்கப்பட்டதாகவும், சந்திப்பு நடைபெறும் தேதியை மட்டும் இரு அதிபர்களும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என சீனாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிமிர்ட்டி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கான தேதியை குறிப்பிட்டால் எனது அலுவல்களை பொறுத்து டிரம்ப்பை சந்தித்துப் பேச நான் தயாராகவே இருக்கிறேன் என சீனாவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதினும் குறிப்பிட்டுள்ளார். #TrumpPutinsummit #Viennasummit
    ×