search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓன்கோல்"

    ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு 10 ஓன் கோல் விழுந்துள்ளது. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவடைந்து தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்றான நாக்அவுட் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடைபெற்ற ஸ்பெயின் - ரஷியா இடையிலான ஆட்டத்தின்போது பிரான்ஸ்க்கு முதல் கோல் ஓன் கோல் மூலம் கிடைத்ததாகும். இந்த கோல் மூலம் ஸ்பெயின் 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் ரஷியா ஒரு கோல் அடிக்க ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. பின்னர் நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட் முறையில் ரஷியா வெற்றி பெற்றது. இந்த உலகக்கோப்பையில் பல்வேறு வரலாற்றுச் சாதனைகள் உடைக்கப்பட்டு வருகின்றன.



    இந்த உலகக்கோப்பையில்தான் அதிக அளவு பெனால்டி கொடுக்கப்பட்டது. அதேபோல் அதிக ஓன் கோல் விழுந்ததும் இந்த உலகக்கோப்பையில்தான். இதுவரை 10 ஓன் கோல் போடப்பட்டுள்ளது. இதற்கு முன் 1998-ல் 6 ஓன் கோலும், 2014-ல் 5 ஓன் கோலும், 2006 உலகக்கோப்பையில் 4 ஓன்கோலும், 1954 உலகக்கோப்பையில் 4 ஓன்கோலும் விழுந்தது. தற்போது அனைத்தையும் மிஞ்சிவிட்டது ரஷியா உலகக்கோப்பை.
    ×