search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டியல்"

    பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியர்கள் 471 பேரின் பட்டியலை அந்த நாட்டு அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் நேற்று வழங்கியது. #Pakistan #IndianPrisoner
    இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்கள் பற்றிய விவரங்களையும், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களையும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ந் தேதியும், ஜூலை 1-ந் தேதியும் பகிர்ந்து கொள்வது என இரு நாடுகளும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளன.

    அதன்படி, பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியர்கள் 471 பேரின் பட்டியலை அந்த நாட்டு அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் நேற்று வழங்கியது. இந்த 471 பேரில் 418 பேர் மீனவர்கள் ஆவார்கள். பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாக சென்றதாக கூறி இவர்கள் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்த தகவலை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.  #Pakistan #IndianPrisoner  #Tamilnews
    சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் இந்தியா 73-வது இடத்தில் உள்ளது. #SwissBank #India
    புதுடெல்லி:

    இந்தியர்கள் உள்பட சர்வதேச நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களின் கருப்பு பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பதுக்குகிறார்கள். இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கருப்பு பண பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது.

    எனினும் அதனை மீறியும் கடந்த ஆண்டு, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) ஆகி உள்ளது என்கிற அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.



    இதன் மூலம் சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியவர்களின் பட்டியலில் இந்தியா 73-வது இடத்தில் உள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள வருடாந்திர ஆய்வறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.

    இந்த பட்டியலில் இங்கிலாந்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து அமெரிக்கா 2-வது இடத்தில் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மேற்கு இந்திய தீவு, பிரான்ஸ், ஹாங்காங், பஹாமாஸ், ஜெர்மனி, குருன்செவ், லக்சம்பர்க், கேமன் தீவுகள் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.

    பிரிக்ஸ் நாடுகளை பொறுத்தவரை, சீனா 20-வது இடத்திலும், ரஷ்யா 23-வது இடத்திலும், பிரேசில் 61-வது இடத்திலும், தென் ஆப்ரிக்கா 67-வது இடத்திலும் உள்ளன. அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஒரு படி முன்னேறி 72-வது இடத்தில் இருக்கிறது.

    அதேபோல் சிங்கப்பூர், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பனாமா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், சைப்ரஸ், இஸ்ரேல், மெக்சிகோ, பெர்முடா, துருக்கி, குவைத்து மார்ஷல் தீவுகள், கனடா, தாய்லாந்து, தென் கொரியா, மலேசியா, பெலிஜ், இந்தோனேஷியா, செசல்ஸ், ஜிப்ரால்டர், சமவோ, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், கஜகஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இந்தியாவுக்கு முன்னதாக உள்ளன.

    இந்தியாவுக்கு கீழ் மொரிஷியஸ் (77-வது இடம்), வங்கதேசம்(95), இலங்கை(108), நேபாளம்(112), வாட்டிகன் சிட்டி(122), ஈராக்(132), ஆப்கன்(155), புர்கினா பாசோ(162), பூடான்(203), வட கொரியா(205 ) ஆகிய நாடுகள் உள்ளன. கடைசி இடத்தில் பலாவ்(214) உள்ளது.

    1996-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த பட்டியலில் இந்தியா முதல் 50 நாடுகளுக்குள் இருந்து வந்தது. அதன் பின்னர் 2008-ம் ஆண்டு 55-வது இடத்துக்கு இறங்கியது. 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் 59-வது இடத்தில் இருந்து வந்த இந்தியா 2011-ம் ஆண்டு மீண்டும் 55-வது இடத்துக்கு சென்றது.

    அதன் பிறகு இந்த பட்டியலில் ஏற்ற இறங்கங்களை சந்தித்து வந்த இந்தியா கடந்த 2016-ம் ஆண்டு 88-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.  #SwissBank #India #Tamilnews 
    வாழ்க்கை நடத்துவதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்களை அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ‘மெர்சர்’ என்ற நிறுவனம் வரிசைப்படுத்தி உள்ளது. இதில் சென்னை 144-வது இடத்தை பிடித்துள்ளது. #MostExpensiveCity #Chennai #India
    நியூயார்க்:

    வாழ்க்கை நடத்துவதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்களை அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ‘மெர்சர்’ என்ற நிறுவனம் வரிசைப்படுத்தி உள்ளது. 5 கண்டங்களை சேர்ந்த 209 நகரங்களை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட விஷயங்களுக்கு ஆகும் செலவுகள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.



    இதில், உலகிலேயே செலவு மிகுந்த நகராக ஹாங்காங், முதலிடத்தை பிடித்துள்ளது. டோக்கியோ, ஜூரிச், சிங்கப்பூர், சியோல், ஷாங்காய், பீஜிங், பெர்ன் ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன.

    இந்தியாவிலேயே அதிக செலவு மிகுந்த நகராக மும்பை தேர்வாகி உள்ளது. உலக அளவில் அந்நகரம் 55-வது இடத்தில் உள்ளது. சென்னை 144-வது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி 103-வது இடத்திலும், பெங்களூரு 170-வது இடத்திலும், கொல்கத்தா 182-வது இடத்திலும் உள்ளன. #MostExpensiveCity #Chennai #India #tamilnews 
    மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலில் இருந்து இந்தியாவை இங்கிலாந்து அரசு நீக்கியது. இதனால் இங்கிலாந்து சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் கடுமையான விதிமுறைகளை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது. #USVisa #Outrage #StudentVisaRules
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இவர்கள் விசா பெறுவதற்காக விண்ணப்பிக்கும் விதிமுறைகள் இதுவரை சற்று எளிமையாக இருந்தது.

    இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி முதல் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய 4 அடுக்கு விசா விதிமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு மாணவர்கள் எளிதாக விசா பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

    4 அடுக்கு விசா தொடர்பான குடியேற்ற கொள்கை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அது தொடர்பான பட்டியலில் அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, சீனா, பஹ்ரைன், செர்பியா உள்ளிட்ட 25 நாடுகள் இடம் பிடித்து உள்ளன. இந்த நாடுகளின் மாணவர்கள் விசாவிற்கு விண்ணப்பம் செய்வதில் மிகவும் தாராளம் காட்டப்பட்டு உள்ளது.

    அதே நேரம் ஏற்கனவே இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்தியா திடீரென நீக்கப்பட்டு உள்ளது. இதனால் விசா பெற விண்ணப்பிக்க, இந்திய மாணவர்கள் பல்வேறு கடுமையான சோதனைகளை சந்திக்கவேண்டி உள்ளது. மேலும் இதற்காக அவர்கள் ஏராளமான ஆவணங்களை தாக்கல் செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டு இருக்கின்றனர். இது இந்தியா மாணவர்களையும், இந்திய அரசையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    இதுபற்றி இந்திய வம்சாவளி தொழில் அதிபரும், இங்கிலாந்துக்கான சர்வதேச மாணவர்கள் விவகார கவுன்சில் தலைவருமான கரண் பிலிமோரியா கூறுகையில், “இங்கிலாந்தின் இந்த நடவடிக்கை இந்தியாவை அவமானப்படுத்துவதாக உள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் இந்திய மாணவர்களுக்கு பெரும் அநீதியை இழைத்தும் உள்ளது” என்றார்.

    இங்கிலாந்துக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்கா கடந்த வாரம் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கான மந்திரி சாம் ஜியிமாவை சந்தித்து இப்பிரச்சினையை எழுப்பிய நிலையில் அந்நாட்டு அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது.  #USVisa #Outrage #StudentVisaRules  #Tamilnews 
    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான மாநில உறுப்பினர்களின் பட்டியலை கர்நாடக அரசு வரும் 12-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பிறகு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அமைப்பின் பெயர் காவிரி மேலாண்மை ஆணையம் என மத்திய அரசு தெரிவித்து, அதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. பின்னர், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து அதற்கான அரசாணையையும் சமீபத்தில் வெளியிட்டது.

    இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான மாநில உறுப்பினர்களை மாநில அரசு தேர்வு செய்து பட்டியல் அனுப்புமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக தமிழக அரசும் உறுப்பினர் பட்டியலை தயார் செய்து நீர்வளத்துறைக்கு அனுப்பியது. மேலும், இதர மாநிலங்களான கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் தங்களது உறுப்பினர் பட்டியலை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு உறுப்பினர் பட்டியலை அனுப்பவில்லை.

    சமீபத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தலைவராக மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவர் மசூத் உசேன் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர் பட்டியலை அளிக்காமல் கர்நாடக அரசு காலம் தாழ்த்தி வருவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.



    மேலும், வரும் 12-ம் தேதிக்குள் கர்நாடக மாநிலத்துக்கான காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களை தேர்வு செய்து, அந்த பட்டியலை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவால் கர்நாடக அரசு விரைவில் உறுப்பினர் பட்டியலை தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #CauveryManagementAuthority
    ×