search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 202715"

    • தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சரத்குமார்.
    • சரத்குமார் தற்போது ஐக்கிய அமீரகத்தின் கெளரவத்தை பெற்றுள்ளார்.

    ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர்.

    சரத்குமார்

    சரத்குமார்

    தற்போது சரத்குமாருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விசாவை வைத்திருப்பவர்கள் பத்து வருடங்களுக்கு அந்நாட்டின் குடிமகன்களாக கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மாணவர் அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். #sarathkumar

    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மாணவர் அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். இதில் மாநில மாணவர் அணி செயலாளர் எட்வின் நோயல் மற்றும் மாநில மாணவர் அணி நிர்வாகிகள், மாவட்ட மாணவர் அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் துணை பொது செயலாளர்கள் சேவியர், சுந்தர், ஈஸ்வரன், தலைமை நிலைய செயலாளர் பாகீரதி, பொருளாளர் ஏ.எம். சுந்தரேசன், கொள்கைபரப்பு செயலாளர் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சமத்துவ மக்கள் கட்சியை மாணவர்கள் மத்தியில் வளர்ப்பது பற்றி விவாதித்தனர்.

    நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்த சரத்குமார், அவர்களிடம் கட்சியை பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

    குறிப்பாக மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கான தேவைகள் பற்றி கட்சியின் மூலம் அரசின் கவனத்துக்கு எடுத்து சென்று மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்றனர். #sarathkumar

    ×