search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருள்"

    ரூ.9 கோடி மதிப்புடைய கொகைன் போதைப்பொருளை வயிற்றில் கடத்தி வந்து டெல்லியில் சிக்கிய கொலம்பியா நாட்டைச் சேர்ந்த நபரை போலீசார் சிறையிலடைத்தனர். #DelhiAirport
    புதுடெல்லி:

    டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 22-ம் தேதி கொலம்பியாவில் இருந்து வந்திறங்கிய நபர் பாதுகாப்பு சோதனைக்கருவி வழியாக வரும் போது, அவரது வயிற்றில் ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை போலீசார் கண்டறிந்தனர். இதனை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு, அந்த நபரை எக்ஸ்ரே செய்து பார்த்ததில் 66 கேப்சூல்கள் வயிற்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அனைத்து கேப்சூல்களும் வெளியே எடுக்கப்பட்டன. ரூ.9 கோடி மதிப்பிலான 900 கிராம் கொகைன் அந்த கேப்சூல்களில் இருந்து எடுக்கப்பட்டது.



    இதனை அடுத்து, அந்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 
    மேற்கு வங்காளம் மாநிலம் டம் டம் மத்திய சிறைச்சாலையில் உள்ள தனது காதலனுக்காக ஹெராயின் கடத்திய கல்லூரி மாணவியை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் பரசாத் பகுதியைச் சேர்ந்தவர் சுஷ்மிதா மாலாகர்(22). கல்லூரியில் பயின்று வரும் இவர் பாகிராத் சர்கார் என்பவரை காதலித்து வருகிறார். சர்கார் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு டம் டம் மத்திய சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், நேற்று மாலை சர்காரை பார்ப்பதற்கு சுஷ்மிதா சென்றார். அப்போது தனது காதலனுக்கு கொடுப்பதற்காக ஹெராயினை கொண்டு சென்றார். அவரை சோதனை செய்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபோன்று பல முறை நடத்தப்பட்ட சோதனைகளில் சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள், செல்போன் மற்றும் சமையல் பொருட்கள் கடத்திச் செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்படுவர். ஆனால், தனது காதலனுக்கு ஒரு கல்லூரி மாணவி ஹெராயின் கடத்திச் சென்றது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லியில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். #DelhiPolice #narcotictablets
    புதுடெல்லி:

    டெல்லியில் போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறப்புப்படை போலீசார் போதை மாத்திரைகள் கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை பிடித்தனர். அவர்களிடமிருந்த போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன.

    கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4  பேர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட 6.5 லட்சம் போதை மாத்திரைகளின் மொத்த மதிப்பு 30 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.  #DelhiPolice #narcotictablets

    ×