search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செவிலி"

    இங்கிலாந்து நாட்டில் சூனியம் செய்து பெண்களை பாலியல் தொழிலுக்காக ஜெர்மன் நாட்டிற்கு கடத்தி வந்த நர்ஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
    லண்டன்:

    லண்டனைச் சேர்ந்த ஜோசப்பின் இயாமு என்ற செவிலி, சூனியம் செய்து பெண்களை பாலியல் தொழிலுக்காக ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு கடத்தியதாக கைது செய்யப்பட்டார்.  விசாரணையில், 2009-ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இயாமு தேசிய சுகாதார மையத்தில் செவிலியாக பணி புரிந்து வருவதாகவும், இவருக்கு பில்லி சூனியம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருப்பதும் தெரியவந்தது.

    இந்த பில்லி சூனியம் செய்வதன் மூலம் பெண்களை கடத்தி, அவர்களை கோழியின் இதயம், புழு, மற்றும் இரத்தம் போன்றவற்றை குடிக்கச் செய்து அவர்களை பாலியல் தொழிலுக்காக ஜெர்மன் நாட்டுக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், 30 ஆயிரம் முதல் 38 ஆயிரம் யூரோப் அளவுக்கு பணம் வாங்கிக் கொண்டு தங்களை பாலியல் தொழிலுக்காக விற்று விடுவதாகவும், இயாமு பில்லி சூனியம் செய்வதால் அவரை எதிர்க்க பயந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட இயாமு மீது பர்மிங்காம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடத்தப்பட்ட பெண்கள் ஜெர்மனியில் ஒப்படைக்கப்பட்டவுடன் இமாமுவின் வேலை முடிந்துவிட்டதாகவும், அதன்பின் அங்கு உள்ளவர்கள் அந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாகவும் வழக்கு விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    10 வார காரலமாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்தி வழக்கில் இயாமு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    பிரிட்டனில் கொண்டு வரப்பட்ட நவீன அடிமைகளுக்கான சட்டத்தில் தண்டனைக்கு உள்ளாக்கப்படும் முதல் குற்றவாளி ஜோசப்பின் இயாமு என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×