என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 204522
நீங்கள் தேடியது "பார்படாஸ்"
பார்படாசில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 154 ரன்களுக்கு சுருண்டது. #WIvsSL #TestSeries
பார்படாஸ்:
வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது.
இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முன்னணி ஆட்டக்காரர்கள் சொதப்பியதால் அந்த அணி 5 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. மழையால் ஆட்டம் சிறிது தடைபட்டது.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஷேன் டாவ்ரிச் மற்றும் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஜோடி 115 ரன்கள் சேர்த்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி 200 ரன்களை கடந்தது. ஷேன் டாவ்ரிச் 71 ரன்னிலும், ஜேசன் ஹோல்டர் 74 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 69.3 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி சார்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டும். கசின் ரஜிதா 3 விக்கெட்டும், சுரங்கா லக்மல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. வெஸ்ட் இண்டீசின் சிறப்பான ப்ந்து வீச்சால் இலங்கை அணி திணறியது.
அந்த அணியின் நிரோஷன் டிக்வெலா 42 ரன்களும், குணதிலகா 29 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால் இலங்கை அணி 59 ஒவர்களில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டும், ஷனோன் காப்ரியல் 3 விக்கெட்டும், கீமர் ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. ஆனால் இலங்கை அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர்.
இதனால் முதலில் இருந்தே வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்தது. 56 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. கடைசி வரிசை பேட்ஸ்மேனான கீம்ர் ரோச் ஓரளவு தாக்குப்பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 28.4 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.
இத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ளது. எனவே இந்த டெஸ்டில் இலங்கை அணி எளிதில் வெற்றி பெறும் என தெரிகிறது. #WIvsSL #TestSeries
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #WIvsSL #TestSeries
பார்படாஸ்:
வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது.
இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வைட், டேவன் ஸ்மித் களமிறங்கினர். இலங்கை அணியினரின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் விரைவில் அவுட்டாகினர்.
பிராத்வைட் 2 ரன்னிலும், ஸ்மித் 2 ரன்னிலும் பாவெல் 4 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அடுத்து இறங்கிய ஹோப் 11 ரன்னிலும், ரோஸ்டன்சேஸ் 14 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது அணியின் எண்ணிக்கை 5 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது.
வெஸ்ட் அணி 33.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
மழை விட்டதும் ஆட்டம் தொடங்கியது. ஷேன் டாவ்ரிச் மற்றும் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஜோடி 115 ரன்கள் சேர்த்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி 200 ரன்களை கடந்தது. ஷேன் டாவ்ரிச் 71 ரன்னிலும், ஜேசன் ஹோல்டர் 74 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 69.3 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி சார்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டும். கசின் ரஜிதா 3 விக்கெட்டும், சுரங்கா லக்மல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது. #WIvsSL #TestSeries
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் திணறி வருகின்றனர். மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. #WIvsSL #TestSeries
பார்படாஸ்:
வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது.
இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வைட், டேவன் ஸ்மித் களமிறங்கினர். இலங்கை அணியினரின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் விரைவில் அவுட்டாகினர்.
பிராத்வைட் 2 ரன்னிலும், ஸ்மித் 2 ரன்னிலும் பாவெல் 4 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அடுத்து இறங்கிய ஹோப் 11 ரன்னிலும், ரோஸ்டன்சேஸ் 14 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது அணியின் எண்ணிக்கை5 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது.
வெஸ்ட் அணி 33.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. ஷேன் டாவ்ரிச் 36 ரன்களும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 16 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இலங்கை அணி சார்பில் சுரங்கா லக்மல், கச்ன் ரஜிதா ஆகியொர் 2 விக்கெட்டும், லஹிரு குமரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். #WIvsSL #TestSeries
×

X