search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 204655"

    • சாலையில் வரும் பஸ்கள், பஸ் பேவுக்குள் நின்று தான் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.
    • மாநகரத்திற்குள் கனரக வாகனங்கள் எல்லா நேரமும் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் - அவிநாசி சாலையில், வாகன போக்கு வரத்து பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதற்கே ற்ப சாலை கட்டமைப்பு இருந்தாலும், சாலையோர ஆக்கிரமிப்புகள், இடையூறு களால் சாலை முழுக்க பயன்பாட்டில் இல்லை.இச்சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகள வில் பயணிக்கி ன்றன. ஆங்காங்கே பஸ் நிறுத்தம் உள்ள நிலையில் அங்கு பஸ் பேவும் அமைக்கப்ப ட்டுள்ள நிலையில், பஸ் ஓட்டுனர்கள் பலர், அங்கு பஸ்களை நிறுத்தாமல் நடு ரோட்டில் பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இத்தகைய பிரச்சிைனயை தவிர்க்க, நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் சாலையோரம் மட்டுமே பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் வகையில் பஸ் பே என்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்படு கிறது.

    சாலையில் வரும் பஸ்கள், பஸ் பேவுக்குள் நின்று தான் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். இதன் மூலம் பஸ்சை பின் தொடர்ந்து வரும் வாகன ங்கள் தடையின்றி சாலை யை கடந்துவிடும். போக்கு வரத்து நெரிசல் தவிர்க்க ப்படும்.திருப்பூர் புஷ்பா பகுதியில் போலீசார் சார்பில், பஸ் பே அமைக்க ப்பட்டுள்ளது. ஆனால் பல பஸ் ஓட்டுனர்கள் இந்த நடைமுறையை பின்பற்றா ததால் வாகன நெரிசல் தொடர்கதையாகிறது.பஸ் ஓட்டுனர்கள், இந்த விதிமுறையை பின்பற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    திருப்பூர் மாநகரத்திற்குள் கனரக வாகனங்கள் எல்லா நேரமும் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும். வேலைக்கு செல்பவர்களும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமலும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கனரக வாகனங்கள் அனைத்து பகுதிகளிலும் அனைத்து நேரங்களிலும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுகுறித்து பலமுறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்பொழுது தான் அதற்கான நடவடிக்கைகளை மேற்கோண்டுள்ளார்கள். வீரபாண்டி பிரிவு செக்போஸ்ட் அருகே கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் 12 மணிவரையும் மாலை 4 மணி முதல் 9 மணி வரை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடைவித்து அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு பதாகை கீழே இருப்பதால் கனரக வாகனங்களில் வருபவர்களுக்கு தெரியவில்லை.எனவே கனரக வாகன ஓட்டிகளுக்கு தெரியும்படி அறிவிப்பு பதாகையை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். மேலும் இதனை கடுமையாக கடைபிடித்து தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காட்டுப்பகுதியை ட்ரோன் கேமரா மூலம் முதலில் சுற்றி வளைத்தனர்.
    • காவல் துறையினர் சுமார் 8 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வகையிலும் பிரத்யேகமாக அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய ட்ரோன் கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் மாநகரின் முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளை தேர்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த கேமரா மூலம் கண்காணிக்கப்படும் பொழுது சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்கள் இந்த கேமராவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் கண்டு அந்த குற்றவாளி எங்கு இருக்கிறார் என்பதை துல்லியமாக பதிவு செய்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கும் அதி நவீன தொழில்நுட்பம் உள்ளது.

    திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட மாஸ்கோ நகர், பவானி நகர், பாளையக்காடு, எம். எஸ். நகர், உள்ளிட்ட பகுதியில் கஞ்சா , போதை ஊசி மற்றும் போதை மாத்திரை புழக்கத்தில் இருப்பதால் மாநகர போலீசார் கடந்த சில மாதங்களாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இருப்பினும் திருப்பூர் மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் இன்னும் இந்த தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் புழக்கத்தில் இருந்து வருவதை ரகசிய தகவல் மூலம் அறிந்த காவல் துறையினர் திருப்பூர் வடக்கு உதவி ஆணையர் அனில்குமார், வடக்கு காவல் நிலையம் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார் மற்றும் ராஜசேகர் மற்றும் போலீசார் குழுவாக சென்று ஊத்துக்குளி சாலை பவானி நகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியை ட்ரோன் கேமரா மூலம் முதலில் சுற்றி வளைத்தனர்.

    குறிப்பாக இந்த டிரோன் மற்ற டிரோன்களை போல் இல்லாமல் டார்ச் லைட் இருந்ததும் அதை கண்ட இளைஞர்கள் தலைதெறிக்க ஓடினர். ஒருசிலர் வந்த இருசக்கர வாகனத்தில் எங்கு செல்வது என்று தெரியாமல் காட்டுக்குள் தப்பி சென்றனர். ஆனாலும் காவல் துறையினர் விரட்டி சென்று சுமார் 8 பேரையும் இரண்டு இருசக்கர வாகனங்களை பிடித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
    • செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை கடச்சனேந்தலை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 53). கூலி தொழிலாளி. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதில் காலில் காயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் செல்வகுமாரின் ஒரு கால் அகற்றப்பட்டது. அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வீட்டில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று மாலை வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கான்பாளையம் பூசாரி தோப்பை சேர்ந்தவர் மாரியப்பன் (57). சில வாரங்களுக்கு முன்பு இவர் பூர்வீக நிலத்தை விற்றுள்ளார். இது அவருக்கு மனவேதனையை ஏற்படுத்தியது. மேலும் மாரியப்பனின் காலில் ஆறாத புண் உள்ளது.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மீனாம்பாள்புரம், சத்திய மூர்த்தி தெருவை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.இதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்திய டைந்த கார்த்திக் ராஜா, நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
    • அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.க்கு, அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தர விட்டது. இந்த நிலை யில் ராகுல்காந்திக்கு வழங்கிய தண்டனையை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.இரணியலில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.

    சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் ஜேக்கப் (குளச்சல்), சட்ட மன்ற சக்தி வேல்(பத்மநாபபுரம்) ஆகி யோர் முன்னிலை வகித்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வந்த மெம்மோ ரயிலை மறித்த அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் விஜூமோன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜோண், ராபர்ட், ராஜன், நிஷாந்த், மணிகண்டன், ராஜேஷ், ஸ்டான்லி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இரணியல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், தனிப் பிரிவு ஏட்டு சுஜின் ஆகியோர் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். மேலும் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அவரிடம் ரூ.41 ஆயிரம் பணம் இருந்தது
    • 6 மணி நேரம் நடந்த விசாரணையில் பணத்திற்கான விவரங்களை தெரிவிக்கவில்லை.

    நாகர்கோவில் :

    கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்ட னர்.

    சார்பதிவாளர் பொறுப்பு அதிகாரி அன்வர் அலியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அவரிடம் ரூ.41 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது.அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அன்வர் அலியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர் . 6 மணி நேரம் நடந்த விசாரணையில் அவர் பறிமுதல் செய்த பணத்திற்கான விவரங்களை தெரிவிக்கவில்லை.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அன்வர் அலி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    • போலீசார் சிறப்பு ரோந்து பணியில் 2,459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
    • கரூர் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில்

    கரூர்:

    கரூர் மாவட்டம் முழுதும் கடந்த 14-ந் தேதி நடந்த சிறப்பு ரோந்து பணியில் 2,459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

    கரூர் மாவட்டம் முழுதும் 14ம்தேதி அன்று இரவு சிறப்பு ரோந்து பணியாக குற்றத்தடுப்பு மற்றும் வாகன விபத்து குறைப்பது தொடர்பாக கரூர் மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவின் படி, ஏடிஎஸ்பி தலைமையில் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார்கள் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள், மாவட்டத்தின் முக்கிய சந்திப்புகளிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில், 2459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் 13 நம்பர் பிளேட் இல்லாத மற்றும் போலியான நம்பர் பிளேட் உள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 47 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எப்ஆர்எஸ் (பேஸ் ரெகனைஸ்டு சாப்ட்வேர்) மூலம் 150 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர்.ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மூன்று தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் 13 நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில், கரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உழைப் பாளி நகர்ப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த சென்னையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (25) என்பவரை, இரவு ரோந்து போலீசார் விசாரணை மேற் கொண்டதில், சென்னை காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள கொலை வழக்கு குற்றவாளி என தெரியவந்தது. இவரிடம் இருந்து மீன் வெட்டும் கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நபர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    குற்றத்தடுப்பு மற்றும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தொடர் சோதனை நடை பெறும் எனவும், வாகன விபத்துக்களை தடுக்கும் வகையில் தொடர்ந்து வாகன சோதனை செயல்படும் எனவும், மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தெரி வித்துள்ளார்.

    • நேற்று மதியம் ஓட்டல் வேலையை முடித்துவிட்டு சம்பூர்ணா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • போலீஸ் விசாரணை யில் மர்ம நபர்கள் போலீசார் என்று பொய் சொல்லி மூதாட்டியிடம் நகை பறித்து சென்றது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு அகில்மேடு வீதியைச் சேர்ந்தவர் அர்த்தனாரி. அதே பகுதியில் ஓட்டல் வைத்து உள்ளார். இவரது மனைவி சம்பூர்ணா (60). கணவருடன் ஓட்டலை கவனித்து வந்தார்.

    நேற்று மதியம் ஓட்டல் வேலையை முடித்துவிட்டு சம்பூர்ணா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் சம்பூரணத்திடம் வந்து தங்களை போலீசார் என்று அறிமுகம் படுத்திக்கொண்டு இங்கு வழிப்பறி அதிகமாக நடப்ப தால் கழுத்தில் நகைகளை போட்டு செல்ல வேண்டாம் கழற்றி கொடுங்கள்.

    பாதுகாப்பாக நாங்கள் காகிதத்தில் மடித்து கொடுக்கிறோம். வீட்டிற்கு சென்றதும் கழுத்தில் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

    இதனை உண்மை என்று நம்பிய சம்பூர்ணா தான் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை கழற்றி அவர்களிடம் கொடுத்து ள்ளார்.

    அதைப் பெற்றுக் கொண்ட அவர்கள் காகிதத்தில் பொட்டலமாக மடித்து அவரிடம் திருப்பிக் கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்டு சம்பூர்ணாவும் வீட்டிற்கு சென்று விட்டார்.

    வீட்டுக்கு சென்று பொட்டலத்தைப் பிரித்து பார்த்த போது தான் அதில் கல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர். போலீஸ் விசாரணை யில் மர்ம நபர்கள் போலீசார் என்று பொய் சொல்லி மூதாட்டியிடம் நகை பறித்து சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்தப் பகுதியில் பொருத்த ப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணையை தீவிரப்ப டுத்தியுள்ளனர்.

    இது குறித்து போலீசார் கூறும் போது, பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். போலீசார் எப்போதும் இதுபோன்று பெண்களிடம் சென்று நகைகளை கழற்றி கொடுங்கள் .

    காகிதத்தில் பொட்டலமாக மடித்து வைத்து தருகிறோம் என்று கூற மாட்டார்கள். இவ்வாறாக யாராவது போலீஸ் என்று கூறி வந்தால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    அவர்களை நம்பி நகைகளை கொடுக்க வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    • பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பரவையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி சசிகலா (வயது 46). இவர் சம்பவத்தன்று மதுரை-திண்டுக்கல் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர் சசிகலா அணிந்தி ருந்த தங்க செயினை பறித்தான்.

    அப்போது அவர் செயினை பிடித்துக் கொண்டதால் அது 2 துண்டானது. இதில் ஒரு பகுதியை மர்ம நபர் கொண்டு சென்று விட்டான். இதுபற்றி சசிகலா செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.இதுபற்றி தகவலறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் சம்பந்தப் பட்ட குற்றவாளியை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், செல்லூர் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் நகைபறிப்பு சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி அவற்றில் இடம் பெற்று உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சசிகலாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவெண் தெரிய வந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செயின்பறிப்பில் ஈடுபட்டவர் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த விஜயகாந்த் என்பது தெரியவந்தது. வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் வேறு செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாழப்பாடி பகுதியில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகளில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் நேற்று ஆய்வு செய்தனர்.
    • பிற மாநில தொழிலா ளர்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பை உறுதி செய்த போலீசார், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வாழப்பாடி:

    தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால், இந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வகையில் ஆய்வு நடத்திட காவல் துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி பகுதியில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகளில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.

    பிற மாநில தொழிலா ளர்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பை உறுதி செய்த போலீசார், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, எவ்வித அச்சுறுத்தலும் பயமுமின்றி பணிபுரிந்து வருவதாக தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

    • அணுமின் நிலையத்தில் வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பணிபுரிந்து வருகின்றனர்.
    • போட்டியில் 2-1 என்ற கணக்கில் காவல்துறை அணி வெற்றி பெற்றது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வட மாநில புலம்பெயர் தொழி லாளர்கள் ஆயிரக்கணக்கில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    அண்மையில் திருப்பூரில் வாட்ஸ் அப்பில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி ஏற்பட்டதை தொடர்ந்து தமிழக அரசும் காவல்துறையும் இணைந்து வட மாநில தொழிலாளர்களுக்கு பாது காப்புடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதனையொட்டி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், புலம்பெயர் தொழி லாளர்களை நேரில் சந்தித்து பாதுகாப்பு குறித்தும் அச்சம் தவிர்த்தும் அறிவுரை வழங்கினார்

    இந்நிலையில் கூடங்குளத்தில் வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் தலைமையில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பும், அச்ச உணர்வை தவிர்க்கும் விதமாக கைப்பந்து போட்டி நடத்தினர்.

    இதில் காவல்துறை அணியும், வடமாநில தொழிலாளர்கள் அணியும் விளையாடின. இதில் 2-1 என்ற கணக்கில் காவல்துறை அணி வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்ற அணிகளுக்கு டி.எஸ்.பி.யோகேஷ்குமார் பரிசுகளை வழங்கினார். பாதுகாப்பு குறித்து பேசிய கூடன்குளம் இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ எந்த நேரமும் தொடர்பு கொள்ள தொடர்பு செல்போன் எண் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம், இரண்டாம் நிலை காவலர் பாலகிருஷ்ணன்,போலீஸ் ஏட்டு முத்துபாண்டி, குற்ற புலனாய்வுப் பிரிவு லிங்கசேகர், உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    • வக்கீல்-பள்ளி மாணவி உள்பட 5 பேர் மாயமாகினர்.
    • டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பஜனைகூடத் தெருவை சேர்ந்தவர் வக்கீல் சந்திரசேகரன் (வயது62). இவர் நேற்று சிவகாசி கோர்ட்டிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு செ ன்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி செந்தாமரை லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (26). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முத்துராஜ் மாயமானார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டிலிருந்த மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சாத்தூர் அமீர் பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (38). கேரளாவில் டிரைவராக வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (24). சாத்தூர் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென மாயமானார். டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இரவு நேரங்களில் சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை போக்குவரத்து போலீசார் ஒட்டினர்.
    • 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு காயம் ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    மேலூர்

    மதுரை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ேபாலிசாருக்கு உத்தரவிட்டார். ஒத்தக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் மாடுகளை வளர்த்து வருகிறார்கள். மேய்ச்சலுக்காக மாடுகளை கொண்டு செல்லும்போது, இரவு நேரங்களில் அவை சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.

    இதனால் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு காயம் ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒத்தக்கடை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் பழனிக்குமார் தலைமையிலான போக்குவரத்து போலீசார் சாலையில் சுற்றி திரியும் மாடுகள் மற்றும் நெடுஞ்சாலைகளை ஒட்டி உள்ள கிராமங்களில் மாடுகளை வைத்திருப்பவர்களின் வீடுகளுக்கு சென்று மாடுகளின் கொம்புகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    ×