search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாம்பரம்"

    • நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரெயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

    செங்கோட்டை:

    பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க அம்பாசமுத்திரம், ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரெயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (06004) நெல்லையில் இருந்து வருகிற 18-ந் தேதி முதல் ஜனவரி 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

    மறு மார்க்கத்தில் தாம்பரம் - நெல்லை வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (06003) தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 19-ந் தேதி முதல் ஜனவரி 30-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு நெல்லை வந்து சேரும். இந்த ரெயில்களுக்கான முன் பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

    செங்கல்பட்டு - தாம்பரம் இடையே இன்று மாலை வரை மின்சார ரெயில்கள் இயங்காது என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    செங்கல்பட்டு - தாம்பரம் இடையே உள்ள வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் பாலம் கட்டும் பணி நடப்பதால் காலை 8.25 மணி முதல் மாலை 6.40 மணி வரை 10 மணி நேரம் மின்சார ரெயில்கள் இயங்காது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 

    மாலைக்கு பின்னர் வழக்கமான சேவை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை சென்டிரல், எழும்பூரை அடுத்து தாம்பரம் மூன்றாவது முனையமாக இன்று திறக்கப்பட்டதுடன், நெல்லைக்கு முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட அந்த்யோதயா ரெயில் தொடங்கப்பட்டது. #SouthernRailway
    சென்னை:

    சென்னையில் சென்டிரல், எழும்பூர் என இரண்டு ரெயில் முனையங்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக தாம்பரம் ரெயில் நிலையம் முனையமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ரூ.49 கோடி செலவில் அதற்கான பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இன்று மூன்றாவது முனையத்தை மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார்.

    மேலும், தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட அந்த்யோதயா ரெயிலையும் மந்திரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்றனர்.

    16 முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட இந்த ரெயில் எல்.இ.டி விளக்கு, செல்போன்கள் சார்ஜ் செய்யும் வசதிகளை கொண்டிருக்கும். இன்று மட்டும் 5.30 மணிக்கு புறப்பட்ட இந்த ரெயில், நாளை முதல் நள்ளிரவு 12.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக செல்லும் ரெயில் மாலை 3.30 மணியளவில் நெல்லைக்கு சென்றடையும். வாரத்தில் திங்கள் தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் இந்த ரெயிலில் ரூ.240 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×