search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவர்"

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் அறுவை சிகிச்சைக்காக வந்த நோயாளியின் கிட்னியை திருடிய மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள மண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக கல்நீக்க சிகிச்சைக்காக இக்பால் என்ற 60 வயது முதியவர் அனுமதிக்கப்பட்டார்.

    அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் விபு கார்க், நோயாளிக்கு தெரியாமல் அவரது கிட்னியை திருடியுள்ளார். இதனை அறிந்த இக்பாலின் உறவினர்கள் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இதுதொடர்பாக மருத்துவர் விபு கார்க் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் அபிஜித் சோனாவானே என்ற டாக்டர் வீடு இல்லாத நடைபாதை வாசிகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். #Punedoctor #AbhijeetSonawane #treatsforfree
    மும்பை:

    இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் டாக்டர்களை அனைவரும் கடவுளாக பார்க்கின்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அபிஜித் சோனாவானே என்ற டாக்டர் தினமும் கோவில்களுக்கும், ஆன்மீக ஸ்தலங்களுக்கும் சென்று அங்குள்ள நடைபாதை வாசிகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.



    இதுகுறித்து டாக்டர் அபிஜித் சோனாவானே கூறுகையில், ‘எனது வாழ்வின் முக்கியமான நெருக்கடியின்போது வீடுகள் இல்லாத இவர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர். தற்போது என்னுடைய புனிதமிக்க தொழில் மூலம் நான் அவர்களுக்கு உதவி செய்கிறேன். இதன் மூலம் சமூகத்துக்கு நான் நன்றிகடன் செலுத்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

    தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை புனே நகரின் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கிறார். நோயாளிகளை பரிசோதித்து ஆலோசனை வழங்குவது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு மருந்துகளும் இலவசமாக அளித்து வருகிறார். நோயாளிகளின் நிலைமை மோசமாக இருக்கும்பட்சத்தில் அவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் பரிந்துரைத்து அனுப்பி வைக்கிறார்.



    இவரது இந்த மனித நேயத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக நடைபாதை வாசிகளிடமும், உடல் ஊனமுற்றோரிடமும் இவர் சகஜமாக உரையாடி அவர்களின் மனக்குறைகளையும் கேட்டறிகிறார். அதே சமயம், நல்ல உடல்நிலையில் இருந்து பிச்சை எடுப்பவர்களை உழைத்து வாழும்படி அறிவுறுத்தியும் வருகிறார்.

    மருத்துவ தொழில் வியாபாரம் ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் டாக்டர்களை கடவுளாக பார்ப்பதற்கான தேவையான தகுதிகளுடன் ரோல் மாடலாக திகழ்கிறார் அபிஜித் சோனாவானே. #Punedoctor #AbhijeetSonawane  #treatsforfree
    ×