search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டு"

    சப்பாத்தி, பூரி, சாதம், நாண், இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த கருப்பு உளுந்து தால். இன்று இந்த கருப்பு உளுந்து தால் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைக்கட்டிய கருப்பு உளுந்து - ஒரு கப்,
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
    வெங்காயம் - 2,
    தக்காளி - 4,
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    தனியாத்தூள் (மல்லித் தூள்) - ஒரு டீஸ்பூன்,
    பட்டை - சிறிய துண்டு,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, சீரகம், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, கருப்பு உளுந்து சேர்த்து கலந்து மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.

    ஆறிய பின் திறந்து உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி மேலே கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான கருப்பு உளுந்து தால் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், தோசை, நாண், சப்பாத்தி, சாம்பார் சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் மிளகு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காளான் - 250 கிராம்
    பூண்டு - 4 பல்
    வெங்காயம் - 1
    குடை மிளகாய் - பாதி
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ப
    காய்ந்த மிளகாய் - 2
    எண்ணெய், உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    வெங்காயம், குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்,

    கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காய்ந்த மிளகாயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி பூண்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் முக்கால் பாகம் வதங்கினால் போதுமானது.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் காளான், உப்பு சேர்த்து வதக்கவும். தண்ணீர் ஊற்றத்தேவையில்லை. இதிலேயே தண்ணீர் இருக்கும்.

    காளான் வெந்தவுடன் அதில் மிளகு தூள், கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் போட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான காளான் மிளகு மசாலா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×