search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கதேசம்"

    • வங்கதேசத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளையும் கோவில்களையும் முஸ்லிம்கள் சிலர் பாதுகாக்கின்றனர்.
    • சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார்.

    வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதனையடுத்து, வங்கதேசத்தில் நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.

    வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பேட்டியளித்தார்.

    அதில், "முகமது யூனுஸ் குறித்து எனக்கு தெரியும். அவர் பாகிஸ்தானை விட அமெரிக்காவுடன் நெருக்கமாக இருப்பவர். தற்போது வங்கதேசத்தில் பதவியேற்றுள்ள இடைக்கால அரசை பார்க்கையில், நமக்கு விரோதமான நாடுகளை (பாகிஸ்தான் , சீனா) குறித்து இந்தியா கவலை கொள்வதற்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை.

    ஷேக் ஹசீனா இந்தியாவின் நண்பர். உங்களின் நண்பர் ஒருவர் ஆபத்தில் இருக்கும் போது அவருக்கு உதவ வேண்டும். இந்தியாவும் அதை தான் செய்தது. இந்த விஷயத்தில் நான் இந்திய அரசை பாராட்டுகிறேன். இன்னும் எவ்வளவு நாட்கள் ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பார் என்று சொல்லமுடியாது. உங்கள் வீட்டிற்கு வந்த விருந்தாளியை நீங்கள் எப்போது கிளம்புகிறீர்கள் என்று நாம் கேட்கக்கூடாது.

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் சில இடங்களில் தாக்கப்படுகிறார்கள் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு இந்துக்களின் வீடுகளையும் கோவில்களையும் முஸ்லிம்கள் சிலர் பாதுகாக்கின்றனர் என்பதும் தான்.

    வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார்" என்று சசி தரூர் தெரிவித்தார்.

    • நீதிபதிகள் பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதிப்பதாக மாணவ அமைப்புகள் தெரிவித்தன.
    • முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனாவின் விசுவாசியாக தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் அறியப்பட்டார்.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    அரசு வேலை வாய்ப்பில் சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு கோர்ட்டு அனுமதி அளித்ததால் அதை எதிர்த்து மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதன்பின் இட ஒதுக்கீடு 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    இந்நிலையில் வங்கதேசத்தில் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலகக் கோரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நீதிபதிகள் பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதிப்பதாக மாணவ அமைப்புகள் தெரிவித்தன.

    மேலும், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிடும் வகையில் மாணவர்கள் திரண்டனர். இதையடுத்து அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை தலைமை நீதிபதி ரத்து செய்தார்.

    இதனையடுத்து, வங்கதேச ஜனாதிபதி முகமது சஹாபுதீனுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நீதிபதி ஒபைதுல் ஹாசன் அறிவித்துள்ளார்.

    முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனாவின் விசுவாசியாக தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலவரம் காரணமாக அந்நாட்டில் பரபர சூழல் நிலவுகிறது.
    • இதன் காரணமாக மீண்டும் வன்முறை ஏற்படலாம்.

    வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இடையில் மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்நாட்டில் பரபர சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பொது மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் மற்றும் டாக்காவை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவர் என்று தெரிகிறது.

    இதன் காரணமாக மீண்டும் வன்முறை ஏற்படலாம் என்ற காரணத்தால், வங்காளதேசத்தில் நாடு முழுக்க இணைய சேவைகளை முடக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இணைய சேவைகள் முடங்கியதால் பேரணி திட்டமிட்டப்படி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாவே உள்ளது.

    முன்னதாக பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 ஆம் ஆண்டு நடந்த போரில், பங்கேற்ற வங்காளதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் போலீசாரும் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரியும், முந்தைய போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்க கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    போராட்டம் காரணமாக நேற்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    • போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.
    • வன்முறையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர்.

    வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களுக்கும் ஆளுங்கட்சியினரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தில் சிக்கி இதுவரை 98 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். இதன் எதிரொலியால், அங்கு நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.

    இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த கலவரத்தால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து மக்கள் மீளாத நிலையில், மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதில், இதுவரை 98 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    இட ஒதுக்கீடு விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி அங்கே பல ஆயிரம் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நீதி வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

    இதையடுத்து,  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வங்காளதேசத்தில் கணவரால் கைவிடப்பட்ட இந்திய பெண், முறையான ஆவணங்களின்றி பயணம் செய்ததால் பிடிபட்டு காவல் நிலையத்தில் இருந்த நிலையில் அங்குள்ள கழிவறையில் குழந்தை பெற்றுள்ளார்.
    டாக்கா:

    இந்தியாவில் மரச்சாமான்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த் அப்துல் என்பவர் ரோக்‌ஷனா அக்தர் அனும் இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கர்பமாக இருந்த ரோக்‌ஷனாவை வங்காளதேசத்தின் நாராயணகஞ்ஜ் பகுதியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு கடந்த மாதம் அப்துல் அழைத்து சென்றார்.

    அங்கு, ரோக்‌ஷனாவை கைவிட்டுவிட்டு அவரது பாஸ்போர்ட்டையும் எடுத்துக்கொண்டு சில தினங்களுக்கு முன்னர் அப்துல் மாயமானார். வங்காளதேசத்தில் ஆதரவு ஏதும் இன்றி நிர்கதியாக இருந்த ரோக்‌ஷனா, நாராயணகஞ்ஜ் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் ஏறியுள்ளார். முறையான ஆவணங்களின்றி பயணம் செய்த அவரை டிக்கெட் பரிசோதகர் கமால்பூர் ரெயில்வே காவல் நிலைய போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.  

    ரெயில்வே காவல் நிலையத்தில் இருந்த ரோக்‌ஷனா, அங்கிருந்த கழிப்பறையில் ஆண் குழந்தையை பிரசவித்த கொடூரம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தாயையும் குழந்தையையும் போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்தியாவில் உள்ள ரோக்‌ஷனாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களையும் போலீசார் தெரிவித்தனர்.
    ×