search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர்த்துகல்"

    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் இன்று நடைபெற்ற போர்த்துகல், ஸ்பெயின் இடையேயான லீக் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. #FIFA2018 #WolrdCup2018 #PORESP

    சோச்சி:

    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா 5-0 என சவுதி அரேபியாக துவம்சம் செய்தது. நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் உருகுவே, எகிப்தையும், இரண்டாவது ஆட்டத்தில் ஈரான், மொராக்கோவையும் வீழ்த்தின.



    மூன்றாவது ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள போர்த்துகல் - ஸ்பெயின் அணிகள் மோதின. 

    ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் போர்த்துகல் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கேப்டனும்,  நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் மூன்றாவது நிமிடத்திலேயே போர்த்துகல் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 



    அதைத்தொடர்ந்து 24-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் தியாகோ கோஸ்டா சிறப்பான முறையில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் 44-வது நிமிடத்தில் போர்த்துகல் அணியின் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் போர்த்துகல் அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.



    தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதிநேர ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் தியாகோ கோஸ்டா இரண்டாவது கோல் அடித்தார். 58-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் நாச்சோ ஒரு கோல் அடித்தார். இது ஸ்பெயின் அணிக்காக அவர் அடிக்கும் முதல் கோலாகும். இதனால் ஸ்பெயின் அணி 3-2 என முன்னிலை பெற்றது.



    அதன்பின் ஆட்டம் முடிய 2 நிமிடமே இருக்கும் நிலையில், கிடைத்த பிரீ-கிக் வாய்ப்பை ரொனால்டோ சரியாக பயன்படுத்தி கொண்டு கொல் அடித்தார். இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும். இதனால் ஆட்டம் மீண்டும் 3-3 என சமனானது. அதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் எந்த கோலும் அடிக்கப்படாததால் இந்த போட்டி 3-3 என சமனில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.



    நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் பிரான்ஸ் - ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா - ஐஸ்லாந்து, பெரு - டென்மார்க், குரோசியா - நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #FIFA2018 #WolrdCup2018 #PORESP
    ×