search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசாருக்கு, கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது, அவனிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசாருக்கு, கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மணகெதி சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் 16 வயது சிறுவன் கஞ்சா விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது, அவனிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு படி நடவடிக்கை
    • கடந்த இரண்டு மாதங்களில் 70-க்கு மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகளை முடக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து குமரி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 70-க்கு மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வழக்கில் வடசேரியைச் சேர்ந்த காட்வின் எட்வர்ட், பெருவிளையை சேர்ந்த சந்திரகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதை யடுத்து காட்வின் எட்வர்ட் மற்றும் அவரது தாயாரின் வங்கி கணக்குகளும் சந்திரகுமாரின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

    • வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து 2 கிலோ பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மாணிக்கம் பாளையம், முனியப்பன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 20 ஆயிரம் இருக்கும். விசாரணையில் அவர்கள் சரவணகுமார் (23), விக்னேஷ் (28), மெய் அழகன் (23) என தெரிய வந்தது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் வீரப்பன்சத்திரம் போலீசார் நசியனூர் ரோடு, கைகாட்டிவலசில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த தமிழ்செல்வன் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா கடத்திய சசிகுமார்(33) என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • 22 கிலோ கஞ்சா வைத்திருந்த 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மேற்கண்ட 6 பேரையும் செல்லூர் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரையில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. எனவே அவற்றை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்- இன்ஸ்பெக்டர் ரீகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் அவர்கள் நேற்று மாலை வைகை வடகரை சர்வீஸ் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கு பதுங்கி இருந்த பெண்கள் தப்பி ஓடினர். இருந்தபோதிலும் அவர்களில் 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மேற்கண்ட 6 பேரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் மேலதோப்பு தேவேந்திரன் மனைவி செல்வி (வயது 52), கீழத்தோப்பு ஜோதிபாசு (வயது 27), கொக்குலத்தாட்சி லைன் சூர்யா (வயது 30), தங்கபாண்டி மனைவி சித்ரா (வயது 37), குபேந்திரன் மகள் மணிமாலா (வயது 40), ராஜேந்திரன் மனைவி தமிழரசி (வயது 55) என்பது தெரிய வந்தது. இவர்களில் செல்வியும் சூர்யாவும் தாய்-மகன் ஆவர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக உறவினர்களுடன் இணைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

    செல்லூர் போலீஸ் நிலையத்தில் செல்வி மீது 7 வழக்குகளும், சித்ரா மீது 9 வழக்குகளும், மணிமாலா மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து கஞ்சா விற்றதாக மேற்கண்ட 6 பேரையும் செல்லூர் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவர்களை விசாரித்த போது கொன்னக்குழி விளையைச் சேர்ந்த பிரபீஸ் (வயது 24) சடையால் புதூரை சேர்ந்த அஜித்ராஜ் (31) வர்த்தகநாடார் குடியிருப்பைச் சேர்ந்த சகாயகவின் (24) என்பது தெரிய வந்தது.
    • இவர்கள் சென்னையிலிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து வாலிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.

    நாகர்கோவில், ஆக.12-

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள்.

    போலீசார் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். கஞ்சா வழக்குகளில் கைது செய்பவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கஞ்சா சோதனையில் மேற்கொண்டு வருகி றார்கள்.

    மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்த ெரயிலில் கஞ்சா கடத்தப் படுவதாக ெரயில்வே போலீ சுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ் பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப், குமார்ராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை நாகர்கோவில் ெரயில் நிலையத்திற்கு வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ெரயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர் .

    அப்போது பொதுப் பெட்டி ஒன்றில் கேட்பாரற்று பேக் ஒன்று கிடந்தது. அதை போலீசார் திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் யாரும் சிக்கவில்லை. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ெரயில்வே போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ெரயிலில் கடத்திய கஞ்சாவை போலீ சார் பறிமுதல் செய்திருந்த னர் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    இதேபோல் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி தலைமையிலான போலீசார் வடசேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 7 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு அவர்களை விசாரித்த போது கொன்னக்குழி விளையைச் சேர்ந்த பிரபீஸ் (வயது 24) சடையால் புதூரை சேர்ந்த அஜித்ராஜ் (31) வர்த்தகநாடார் குடியிருப்பைச் சேர்ந்த சகாயகவின் (24) என்பது தெரிய வந்தது. இவர்கள் சென்னையிலிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து வாலிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.

    கஞ்சா வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தி லும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குமரி மாவட்டத்தில் மாணவர்களை குறி வைத்து போதை பொருட்கள் விற்பனை
    • போலீசார் ரகசியமாக கண் காணிப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர் களை குறி வைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் உள்ளது. இதையடுத்து மாவட்ட போலீஸ் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் புதுக்கடை அருகே உள்ள முஞ்சிறை பகுதியில் உள்ள பள்ளிகளை குறி வைத்து கஞ்சா விற்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் புதுக்கடை சப்- இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரகசியமாக கண் காணித்தனர்.

    அப் போது முஞ்சிறை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் சந்தேகப்படும் படியாக இரு சக்கர வாகனத்துடன் நின்ற ஒருவர் போலீசை கண்டதும் ஓட முயற்சி செய்துள்ளார். போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது அவரிடம் 30 கிராம் வீதம் இரண்டு பொட்டலங்களில் 60 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. போலீசார் அதனை வாகனத்துடன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    விசாரணையில் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த இம்மானுவேல் ராஜ் மகன் லிவிங்க்ஸ்டன் புரோ (வயது 22) என தெரிய வந்தது.

    இது போன்று நேற்று மீண்டும் அதே பகுதியில் நடத்திய சோதனையின் போது முஞ்சிறை அரசு பள்ளியின் முன்புறம் உள்ள பஸ் நிலையத்தின் பின் பகுதியில் இரு சக்கரவாகனத்தில் ஒருவர் கஞ்சா விற்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவரை பிடித்து விசாரித்த போது 20 கிராம் கஞ்சா பொட்டலம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் அவர், முஞ்சிறை பகுதி முருகன் மகன் முபின் (25) என தெரிய வந்தது. சமமந்தப்பட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • திருக்கோவிலூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சா, பைக், செல்போனை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரபாண்டி அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகன்(வயது23), வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த முகமது அஜிம்(16 ) ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சா, பைக், செல்போனை பறிமுதல் செய்தனர்.

    • மதுரையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மதிச்சியம் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. கஞ்சா குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.

    ஜெய்ஹிந்த்பு ரம் அங்க யற்கண்ணி தெருவில் பெண் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரிடம் 1.300 கிலோ கஞ்சா, ரூ.11 ஆயிரத்து 240 பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜீவா நகர், மாயாண்டி மனைவி செல்வி (வயது 44) என்பவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய மகன் காசிமணி (23) என்பவரை தேடி வருகின்றனர்.

    மதுரை வ.உ.சி பாலத்தில் கீழ்புறம் கஞ்சா விற்றதாக சத்தியமூர்த்தி நகர் பாரதியார் தெருவை சேர்ந்த ராம்குமார் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கோரிப்பாளையம் லாட்ஜ் அருகில் 200 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மேலத்தோப்பு சரவணன் (43) என்பவரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

    செனாய் நகர், ஜெகஜீவன்ராம் தெருவில் போலீசார் ரோந்து சென்றபோது அங்கிருந்த வாலிபரிடம் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இளமனூர், அன்னை இந்திரா நகர், கண்ணன் மகன் சபரீஷ்வரன் (22) 50 கிராம் கஞ்சாவுடன் மதிச்சியம் போலீசார் கைது செய்தனர்.

    • சிவகுமார் (22), அவரிடமிருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது
    • கல்வி நிலையங்கள் அருகே காவலர்கள்காலை, மாலை நேரங்களில் கண்காணிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள முந்திரி காட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆதனக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் உத்தரவின் பேரில் ஆதனக்கோட்டை சப் - இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் காவலர்கள்முந்திரி காட்டில் தேடுதல் வேட்டை நடத்தினர்.அப்பொழுது சந்தேகத்து இடமான நபரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் பெருங்களூர் அருகே உள்ள அரியூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (22), அவரிடமிருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

    இது தொடர்பாக ஆதனக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி நபரை கந்தர்வகோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    சமீப காலமாக கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், பள்ளி மாணவர்கள் எதிர்காலம்பாதிக்கப்படும் எனவும், பெற்றோர்கள் கூறுகின்றனர். எனவே கல்வி நிலையங்கள் அருகே காவலர்கள்காலை, மாலை நேரங்களில் கண்காணிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலையை சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.
    • அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் சட்ட விரோத விற்பனையை தடுக்கும் விதமாக போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலையை சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (29) கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து, அவரிட மிருந்து 100 கிராம் கஞ்சாவை மீட்டனர். தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இதேபோல, பவானி போலீசார் மேற்கொண்ட சோதனையில், ஜம்பை, மின்வாரிய அலுவலகம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரிய வந்தது.

    அதைத் தொடர்ந்து, அங்கு கஞ்சா விற்பனை செய்ததாக ஜம்பையைச் சேர்ந்த சுமதி (40) ஒரிச்சேரிப் புதூரைச் சேர்ந்த ஆறுமுகம் (60) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிட மிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

    • போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • 15 கிலோ கஞ்சா-வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை மாடக்குளம் கண்மாய் மாடக்கருப்பு கோவில் அருகே 3 பேர் கும்பல் கஞ்சா விற்பதாக எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு பதுங்கி இருந்த 3 பேரை பிடித்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 20 கிராம் கஞ்சா இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 3 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் உசிலம்பட்டியை அடுத்த வி.பேயம்பட்டி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்தி ரன் (வயது 41), காளவாசல் பட்டறை லைன், ரஞ்சித்குமார் (37), கீரைத்துறை, மேலத்தோப்பு திருச்செல்வம் ( 36) என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை விளாங்குடி, பரவை மார்க்கெட் அடுக்கு மாடி குடியிருப்பு அருகே 5 பேர் கும்பல் கஞ்சா விற்பதாக கூடல்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 5 பேர் பதுங்கி இருந்தனர்.

    அவர்கள் போலீசார் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் 14 கிலோ 8 கிராம் கஞ்சா, ரூ.500 ரொக்கம், ஆட்டோ மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனை தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் போலீசார் போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் மதுரை, திருவாலவாயநல்லூர் கணேசன் (30), பாரதிபுரம் தெரு சுந்தரம் (35), விளாங்குடி, காளியம்மன் கோவில் தெரு அஸ்வின் (25), சமயநல்லூர், அய்யனார் கோவில் தெரு மோகன்ராஜ் (29) என்பது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரையும் கூடல் புதூர் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய குரு தனபால சிங் என்பவரை தேடி வருகின்றனர்.

    • கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வந்தது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

    காரைக்குடி

    தமிழகத்தில் மது பழக்கத்துக்கு அடுத்து கஞ்சா மற்றும் போதை பொருட்களை இளைஞர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த பழக்கம் காரணமாக இளைஞர்களின் எதிர்காலம் முற்றிலும் நாசமாகிவிடும் அபாயம் உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ கத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கப்படு கிறது. மேலும் குண்டர் சட்டத்தின் கீழும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி ஆலோசனைபடி தனிப்படை போலீசார் காரைக்குடி பகுதி முழு வதும் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதில் ஒரு மாணவர் மதுரையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தவர் என்பதும், அவர் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு லட்சம், லட்சமாக சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.

    பிடிபட்ட 2 கல்லூரி மாணவர்களிடம் இருந்து 1 கிேலா 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசாரின் விசாரணை யில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வந்தது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

    காரைக்குடி பகுதியில் மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டட பலர் 22 வயதுக்குட்பட்ட வர்கள். அதில் பெரும்பா லானவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தொடர்ந்து தனிப்படை போலீசார் கஞ்சா வியாபாரிகளை கண்காணித்து நடவடிக்ைக எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ×