search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
    • இவர்களிடம் இருந்து 1,500 கிராம் கஞ்சா வை போலீசார் கைப்பற்றினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாஉத்தரவுப்படி திண்டிவனம் உட்கோட்டஉதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்திபெக்டர்கள் ஞானசேகரன், சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில் முப்பளி கிராமம் அங்காளம்மன் கோவில் அருகில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் சம்பந்தமாக கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை வழி மறித்து சோதனை செய்தனர். சோதனையில் 3 பேர் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ரெட்டணை கிராமம் ராஜு நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 23) ராமலிங்கம் (21) இடையஞ்சாவடியை சேர்ந்த சந்துரு (25)ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1,500 கிராம் கஞ்சா வை போலீசார் கைப்பற்றினர்.

    • மரக்காணத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அவர் வைத்திருந்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கைப்பணி காலனியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 20). இவர் அங்ள்ள கடலோரப் பகுதியில் கஞ்சா விற்பதாக மரக்காணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மரக்காணம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப் -இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், விஜயரங்கன் மற்றும் போலீசார் ரோந்துபணி மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் சந்கதேகத்துக்கு இடமாக நின்ற வாலிபர் சஞ்சையை பிடித்து விசாரித்ததில் அவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து அவர் வைத்திருந்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிந்து அவரை சிறையில் அடைத்தனர்.

    • முசிறி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் தனிப்படை போலீசார் துறையூர் பாலக்கரை அருகே வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.
    • காரின் மறைவான பகுதியில் சுமார் 2 கிலோ எடையுள்ள கஞ்சா பதுக்கி கடத்திக் கொண்டு சென்றது தெரியவந்தது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்திற்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது.

    இதனைத் தொடர்ந்து திருச்சி மதுவிலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் முத்தரசு தலைமையில், முசிறி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் தனிப்படை போலீசார் துறையூர் பாலக்கரை அருகே வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வேகமாக வந்த கார் ஒன்றினை நிறுத்தி, சோதனை செய்ததில் காரின் மறைவான பகுதியில் சுமார் 2 கிலோ எடையுள்ள கஞ்சா பதுக்கி கடத்திக் கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து காரினை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் பச்சபெருமாள் பட்டி கிராமத்தை சேர்ந்த அருண்குமார் (28) என்பது தெரிய வந்ததையடுத்து, தனிப்படையினர் அருண்குமாரை துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அருண்குமாரை கைது செய்ததோடு, கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரினையும் பறிமுதல் செய்தார்.

    • செஞ்சேரி மற்றும் எஸ் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • இருவர் போலீசை பார்த்ததும் தப்பியோட முயற்சி செய்தனர்.

    சூலூர் 

    சூலூர் அருகே சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக சுல்தான் பேட்டை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சுல்தான்பேட்டை செஞ்சேரி மற்றும் எஸ் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த இருவர் போலீசை பார்த்ததும் தப்பியோட முயற்சி செய்தனர். உடனடியாக சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தனிப்பிரிவு காவலர் வரதராஜன், தலைமை காவலர் ராமகிருஷ்ணன், காவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட தனிப் படையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் எஸ் குமாரபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் (44) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி(63) என தெரிய வந்தது. அவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1.100கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த சுல்தான்பேட்டை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • திட்டக்குடியில் கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • விறகு கட்டைகளுக்கு அடியில் இருந்த கஞ்சா 10கிராம்,எடையுள்ள 25 பாக்கெட்டை போலீசார் கைப்பற்றினர்.

    கடலூர்:

    திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட வதிஷ்ட புரத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை வதிஷ்டபுரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த அரசன் மகன் ஆங்கி என்ற ராதாகிருஷ்ணன் (24)என்பவர் பிடித்து அவரது வீட்டில் சோதனை செய்த பொழுது வீட்டிற்கு பின்புறம் அடிக்கி வைக்கப்பட்டிருந்த விறகு கட்டைகளுக்கு அடியில் இருந்த கஞ்சா 10கிராம்,எடையுள்ள 25 பாக்கெட்டை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் யார் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

    • ரெயில்வே பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
    • 12 பேரையும் போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் நரசிம்ம நாயக்கன் பாளையம் ரெயில்வே பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி சென்றது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து போலீசார் 1 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள், ரூ.350 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ராக்கி பாளையத்தை சேர்ந்த எலக்ட்ரிசீயன் சரவணன் (வயது 20), தொப்பம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (20) என்பது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    தொண்டாமுத்தூர் வாலாங்குட்டை கருப்பராயன் கோவில் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த அசாம் மாநிலத்தை சேர்ந்த பைசுல் இஸ்லாம் (30), சபீக் இஸ்லாம் (46) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    கே.ஜி.சாவடி போலீசார் மாலா கோவில் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர். கோவில்பாளையம் போலீசார் கோட்டை பாளையம் மின் மயானம் அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற அவினாசியை சேர்ந்த கார்த்திகேயன் (23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ஆனைமலை போலீசார் கெட்டிமேலன்புதூர் பிரிவு அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற காளியாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (42), அம்பராம்பாளையத்தை சேர்ந்த அருண்வேல் (53) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    மேட்டுப்பாளையம் அறிவொளி நகர் தண்ணீர் தொட்டி அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் கஞ்சாவை விற்பனை செய்து கொண்டு இருந்த சாந்ராமணி (45), அபுசேட் (24), முகமது ரபீக் (18) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சவை பறிமுதல் செய்தனர்.

    குதிரைபாளையம் பிரிவு அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த புளியம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (23) என்வரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர். 

    • தனிப்படை போலீசார் சோதனையில் கஞ்சா கும்பல் சிக்கினர்.
    • இது தவிர தப்பி ஓடிய கே.புதூர், பரசுராமன்பட்டி மெர்வின் ஜோஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்பாலையில் கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் பதுங்கி இருப்பதாக கமிஷனர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆலோசனைப்படி, தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது எஸ்.கொடிக்குளம், பாரத் நகரில் கஞ்சா விற்கப்படுவது தெரிய வந்தது. எனவே தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு வீட்டுக்குள் 6 பேர் கும்பல் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. எனவே போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இதற்கிடையே போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து அங்கு உள்ள ஒரு வீட்டுக்குள் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு 40 கிலோ கஞ்சா, அரிவாள், 2 கத்தி, 4 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து மேற்கண்ட 5 பேரையும் தனிப்படை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் எஸ்.கொடிக்குளம், பாரத் நகர் டேவிட் என்ற மரிய ஆரோக்கியதாஸ் (வயது 25), கணபதி மகன் அகஸ்டின் (வயது 23), கடச்சனேந்தல் ரமேஷ் மகன் சியாம்சுந்தர் (வயது 22), கோச்சடை, நடராஜ் நகர் லோகநாதன் மகன் விக்னேஷ் (வயது 23), குமரேசன் மகன் முருகானந்தம் (வயது 22) என்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததாக மேற்கண்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது தவிர தப்பி ஓடிய கே.புதூர், பரசுராமன்பட்டி மெர்வின் ஜோஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அவர்கள் மறைத்து வைத்திருந்த 2 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பள்ளி மற்றும் கல்லூரி, மாணவர்களை குறிவைத்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால் அதனை தடுக்க போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறனர். குறிப்பாக குமரி - கேரளா எல்லை சோதனைச் சாவடிகளில் அதிக அளவில் போலீசார் பணி அமர்த்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருந்தாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி, மாணவர்களை குறிவைத்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் புழக்கத்தில் விடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 பேர் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். இதில் மார்த்தாண்டத்தை அடுத்த கொடுங்குளம் பகுதியை சேர்ந்த அம்மகுடிவிளை விளை ஜெகன் (வயது 30) மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (31) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் மறைத்து வைத்திருந்த 2 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு பொட்டலத்தில் 10 கிராம் கஞ்சாவும், இன்னொரு பொட்டலத்தில் 15 கிராம் கஞ்சாவும் என 25 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • புளியம்பட்டி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 3 பாக்கெட்டுகளில் 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து, அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்த னர். பின்னர், செல்வகுமார், சதீஷ்குமார், அன்சர் ஹசன் ஆகியோரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி, அம்மன் நகர் மாரியம்மன் கோவில் அருகே, புளியம்பட்டி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 3 பாக்கெட்டுகளில் 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    அதை பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த முகிலன் (33) என்பவரிடம் இருந்து விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரியவந்தது.விசாரணையில், அவர்கள் புளியம்பட்டி, எரங்காட்டு ப்பாளையத்தைச் சேர்ந்த செல்வகுமா ர் (25), செங்குந்தபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (27), புளியம்பட்டியைச் சேர்ந்த அன்சர் ஹசன் (29) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்த னர். பின்னர், செல்வகுமார், சதீஷ்குமார், அன்சர் ஹசன் ஆகியோரை கைது செய்தனர்.

    • மதுரை அருகே கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்.
    • எஸ்.காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

    மதுரை

    மதுரை எஸ்.எஸ்.காலனி சமட்டிபுரம் மெயின் ரோடு, பள்ளிக்கூடம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் எஸ்.எஸ்.காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த அச்சம்பத்து, சந்தானம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 19) என்பவர் 50 கிராம் கஞ்சாவுடன் பிடிபட்டார்.

    இதேபோல் மதுரை விராட்டிபத்து சுடுகாடு அருகே 25 கிராம் கஞ்சாவுடன் சமட்டிபுரம், பாண்டி கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித் குமார் (26) என்பவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் பிடித்தனர். அவர்கள் இருவரும் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.

    மதுரை வண்டியூர் தியேட்டர் பின்புறம் கஞ்சா விற்கப்படுவதாக அண்ணா நகர் போலீசுக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பதுங்கி இருந்த வாலிபரை பிடித்தனர். அவரிடம் இருந்து 45 கிராம் கஞ்சா மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    விசாரணையில் அவர் கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிவகங்கை மாவட்டம், கட்டமான்கோட்டை பகுதியைச் சேர்ந்த நீலமேகம் என்ற பண்டாரி (35) என்று தெரிய வந்தது. அவரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.

    • மதுரை அருகே கஞ்சா விற்ற 6 பேர் கைது ெசய்யப்பட்டனர்.
    • தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினார்.

    மதுரை

    மதிச்சியம், வடக்கு தெருவில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், மதிச்சியம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினார்.

    அங்கு 6 பேர் பதுங்கி இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.

    அப்போது 8 கிலோ கஞ்சா, 2 அரிவாள்கள், ரூ.11 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

    போலீசார் 6 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் பூந்தமல்லி நகர், கல்யாணசுந்தரம் தெரு, பாலகிருஷ்ணன் (9), திருமங்கலம், ஆலப்பழச்சேரி தெற்கு தெரு சதீஷ் என்ற வெங்கடேஸ்வரன் (32), மானாமதுரை பெருமாள் கோவில் தெரு, வெங்கட்ராமன் மகன் அண்ணாமலை (24), சர்வேயர் காலனி, ஆவின் நகர் மகேஸ்வரன் (40), ஜெய்ஹிந்த்புரம் மல்லிகார்ஜுன் (26), சோலைஅழகுபுரம் காமாட்சி மகன் தினேஷ் (24) என்பது தெரிய வந்தது. 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை ராஜா மில் ரோட்டில் திலகர் திடல் போலீசார் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் 100 கிராம் கஞ்சா மற்றும் ரூ.500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் பேச்சியம்மன் படித்துறையை சேர்ந்த முருகன் (39) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • சங்கரன்கோவில் வட்டாரத்தில் போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • மாணவிகளுக்கு பாலியல் ரீதியான அச்சுறுத்தல் இருந்தால் தைரியமாக போலீசில் தெரிவிக்கலாம் என்று டி.எஸ்.பி. சுதீர் தெரிவித்துள்ளார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சரக டி.எஸ்.பி., ஆக இருந்த ஜாகிர் உசேன் இடமாற்றம் செய்யப் பட்டதை தொடர்ந்து புதிய டி.எஸ்.பி., யாக சுதீர் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டார்.

    அப்போது டி.எஸ்.பி., சுதீர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சங்கரன்கோவில் வட்டாரத்தில் போதை பொருள் விற்பவர்கள் மீது தென் மண்டல ஐ.ஜி.யின் வழி நடத்துதலின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் ரகசியம் காக்கப்படும். போதை பொருள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கந்து வட்டி கொடுப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஈவ் டீசிங்கில் ஈடுபடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான அச்சுறுத்தல் இருந்தால் தைரியமாக போலீசில் தெரிவிக்கலாம். இவ்வாறு மாணவிகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். ஈவ் டீசிங் குறித்து தெரிவிக்கும் மாணவிகளின் பெயர்களும் ரகசியமாக வைக்கப்படும். பள்ளிகளில் மாணவர்கள் இடையே ஏற்படும் மோதலை தடுக்க கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மணல் கடத்தல் மற்றும் அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அது பற்றி பொதுமக்கள் எனக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    சமூக விரோதிகள், ரவுடிகள், திருடர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நகரின் அனைத்து பகுதிகளிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சங்கரன்கோவில் பகுதியை குற்றம் இல்லா பகுதியாக மாற்ற பொது மக்களின் ஒத்துழைப்பு நிச்சயம் தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×